என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தலைமை ஆசிரியையின் கணவர்"
- பழனிசாமி போன் செய்து தான் குடிபோதையில் பூச்சி மருந்து குடித்து விட்டதாகவும், சாகப்போவதாகவும் கூறி போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
- இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த பொன்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (63). விவசாயி. இவரது மனைவி ஜெயலட்சுமி (52). இவர் பாச்சாமல்லனூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயலட்சுமி வேலூருக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது செல்போனிற்கு கணவர் பழனிசாமி போன் செய்து தான் குடிபோதையில் பூச்சி மருந்து குடித்து விட்டதாகவும், சாகப்போவதாகவும் கூறி போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி விரைவாக வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது பழனிச்சாமி குடிபோதையில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்.
உறவினர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.