என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிரைவர் சாவு"
- மோட்டார் சைக்கிள் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
- சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அருகே உள்ள எசாலம் கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் அருள்குமார் (வயது 45). இவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். இதனையடுத்து கடந்த 5-ந்தேதி இரவு பேரணியில் இருந்து விக்கிரவாண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பேரணி கூட்ரோடு அருகே சாலையை கடந்தபோது சித்தணியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் அருள்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து செஞ்சியை சேர்ந்த பச்சமுத்து (20), சதீஷ்குமார் (23) ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் இவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆட்டோ டிரைவர் அருள்குமார் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- திப்பட்டி அருகே செல்லும் போது பெட்ரோல் போடுவதற்காக சாலையின் ஓரம் மெதுவாக சென்றார்.
- அந்த வழியாக வந்த டாட்டா ஏசி சின்னபையன் மீது மோதியது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கேட்டிரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன் (வயது 57).லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் தருமபுரி பென்னாகரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திப்பட்டி அருகே செல்லும் போது பெட்ரோல் போடுவதற்காக சாலையின் ஓரம் மெதுவாக சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி சின்னபையன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சின்னபையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரதீப் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி கிடந்துள்ளார்.
- உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த புள்ளப்பநாயக்கன் பாளையம் வேட்டுவன் புதூர் ரோடு, காந்தி வீதியை சேர்ந்தவர் பிரதீப் (27). இவர் டிராக்டர் ஓட்டும் வேலை செய்து கொண்டு, டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த கோபால் என்பவரது தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை சுமார் 7 மணியளவில் கோபால் தோட்டத்தில் உள்ள 12 அடி ஆழம் உள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டி அருகே வந்த போது பிரதீப் அந்த தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி கிடந்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த கோபால் பிரதீபின் உறவினர்களுக்கு போனில் தகவல் கொடுத்துள்ளார். உறவினர்கள் வந்து தண்ணீர் தொட்டியில் மூழ்கி கிடந்த பிரதீப் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பிரதீப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் பிரதீப் குளிக்க சென்ற போது எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து? நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள நிலப்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 40). இவர் செங்கல் சூளைக்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு பணியாட்களை ஏற்றி க்கொண்டு சிலுவத்தூர் சாலை கம்பிளியம்பட்டி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த செல்லப்பாண்டி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கனக பசுபதி வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
- மனமுடைந்து காணப்பட்ட கனக பசுபதி செட்டிகரை ஏரி அருகே பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பள்ளக்கொள்ளை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கனக பசுபதி (வயது 28). லாரி டிரைவர். இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று கனக பசுபதி வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.இதனால் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கனக பசுபதி செட்டிகரை ஏரி அருகே பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 48 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்கு வந்தார்.
- ஆம்னி பஸ்சின் டிரைவர் ஸ்டியரிங்கின் மீது சாய்ந்து விழுந்தார்.
கடலூர்:
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷிபுராஜ் (வயது 42). இவர் சுற்றுலா ஆம்னி பஸ்சின் டிரைவராக உள்ளார். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கர்நாடகா மாநிலம் ராஜ்நகர் மாவட்டம், கொல்லேகால் பகுதியில் இருந்து 48 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்கு வந்தார். தமிழகத்தில் உள்ள சென்னை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாப் பகுதிகள் மற்றும் கோவில்களை சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றிக் காட்டினார். அதனைத் தொடர்ந்து நேற்று காலை மேல்மருத்துவர் கோவிலில் சாமிதரிசனம் செய்து விட்டு புதுச்சேரிக்கு வந்தனர்.
புதுச்சேரியில் தங்கிவிட்டு இன்று அதிகாலை ஆம்னி பஸ்சினை எடுத்துக் ெகாண்டு காலை 6 மணியளவில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 48 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆம்னி பஸ்சினை ஓட்டியபடி வந்தார். அப்போது வடக்கு ரத வீதியில் வரும் போது அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பயணி களை உஷார்படுத்திய அவர், ஆம்னி பஸ்சினை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு பயணிகளை பஸ்சை விட்டு இறங்க வலியுறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் பஸ்சின் முன்பக்கம் சென்று பார்த்த போது, ஆம்னி பஸ்சின் டிரைவர் ஸ்டியரிங்கின் மீது சாய்ந்து விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்ட சுற்றுலா பயணிகள் அக்கம் பக்கம் இருந்தவர்களின் உதவியுடன் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிதம்பரம் நகர போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட போதும் புத்திசாலித்தனமாக ஆம்னி பஸ்சினை சாலையோரம் நிறுத்திவிட்டு, டிரைவர் இறந்து போன சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் சோகத்தையும், சிதம்பரம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் ஏற்ப்படுத்தியுள்ளது.
- அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது.
- இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
தஞ்சாவூர் மாவட்டம், திருவையார் மேலபுடவாசல் பகுதியை சேர்ந்தவர் அன்புசெல்வம். டிரைவரான இவர் நேற்று திருவண்ணாமலை-கிருஷ்ணகிரி சாலையில் கிருஷ்ணகிரி வேட்டியம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அன்புசெல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
- கடையம் அருகே தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார்.
- சிதம்பரம் டிரைவராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.
கடையம்:
கடையம் அருகே ஆசீர்வாதபுரம் தாமிரபரணி குடிநீரேற்றும் நிலையம் அருகே இன்று காலை தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அவர் காக்கிநிற ஆடையில் இருந்ததால் டிரைவராக இருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார், அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர் நெல்லை மாநகர் தச்சநல்லூரை சேர்ந்த சிதம்பரம் (வயது 34) என்பதும், தென்காசியில் தங்கி இருந்து டிரைவராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. அந்த வழியாக சென்ற வாகனம் மோதி அவர் இறந்தாரா? அல்லது அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- பைக்கில் சென்றபோது விபத்து
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுதுரை இவர் வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரின் கார் டிரைவராக பணி செய்து வந்தார். நேற்று காலை 9 மணி அளவில் தனது பைக்கில் பொன்னுதுரை வாலாஜாபாத்திற்கு சென்று கொண்டிருந்தார்
அப்போது ஆற்காடு காஞ்சிபுரம் சாலை வட இலுப்பை கிராமம் அருகே வந்தார். அப்போது வளைவு ஒன்றின் எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பொன்னுதுரை சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பொன்னு துரையின்மனைவி சித்ரா பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- பெட்ரோல் பங்க் அருகே வந்த போது நிலை தடுமாறி ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது.
- ஆனால் வரும் வழியிலேயே கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மதிகோன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது58). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று திருப்பத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் பங்க் அருகே வந்த போது நிலை தடுமாறி ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியை சேர்ந்தவர் இஷாத் (வயது 38). அதே பகுதியை சேர்ந்தவர் அஜிஸ் (45). இவர்கள் இருவரும் சென்னைக்கு செல்வதற்காக லாரியில் மீன் ஏற்றிக்கொண்டு ஆம்பூர் வழியாக வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வெங்காய லாரி நெடுஞ்சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக மீன் லாரி நின்று கொண்டிருந்த லாரி மீது திடீரென மோதியது. இதில் இஷாத் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அஜித் காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லாரியில் சிக்கி இருந்த இஷாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி மருத்துவமனைக்கு வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு; மனைவி- குழந்தை படுகாயம் அடைந்தனர்.
- விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் கம்மாபட்டி தெருவை சேர்ந்தவர் பவுன்குரு (வயது 28). இவர் சொந்தமாக ஆட்ேடா வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு புவனேஸ்வரி (21) என்ற மனைவியும், 1 வயது கபிலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. வருகிற 29-ந் தேதி குழந்தைக்கு காது குத்து விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக உறவினர்களை அழைக்கும் பணியில் பவுன்குரு, அவரது மனைவி தீவிரமாக இருந்தனர். சம்பவத்தன்று காடனேரி பகுதியில் உள்ள உறவினரை அழைப்பதற்காக பவுன்குரு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஆட்டோவில் புறப்பட்டார்.மருதநத்தம் விலக்கு ரோட்டில் சென்றபோது திடீரென ஒரு மோட்டார் சைக்கிள் குறுக்கே சென்றது. அதன்மீது மோதாமல் இருப்பதற்காக பவுன்குரு ஆட்டோவை திருப்பினர்.
இதில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்த நடுரோட்டில் தலைகுப்பிற கவிழ்ந்தது. விபத்தில் படுகாயம் அடைந்த பவுன்குரு பரிதாபாக இறந்தார்.புவனேஸ்வரி,
1 வயது குழந்தை படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்