search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிப்படைத் தேவைகள்"

    • ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தலைவர் முகமது யாசின் தலைமையில் நடந்தது.

    மேலூர்

    மேலூர் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் முகமது யாசின் தலைமையில் நடந்தது. இதில் 46 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

    2-வது வார்டு அ.ம.மு.க. கவுன்சிலர் ஆனந்த் வெங்கடேஸ்வரா நகரில் காவிரி கூட்டு குடிநீர் இணைப்பு அமைத்து தர வேண்டும். வெங்கடேஸ்வரா விரிவாக்க பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் கட்ட வேண்டும். பர்மா காலனியில் எரிமேடை அமைக்க வேண்டும் என்றுகோரி தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

    இதற்கு பதிலளித்த நகர்மன்ற தலைவர், காவிரி கூட்டுக் குடிநீர் மேலூரில் உள்ள அனைத்து வார்டுகளிலும், நகராட்சி குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி கொடுக்கப்படும் என்றார்.

    9-வது வார்டு கவுன்சிலர் அருண் சுந்தரபிரபு, பட்டாகுளம் மாயானத்தில் எரிவாயு தகன மேடையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், மின் மயானத்தை கியாஸ் மூலமாக மாற்றப்படும் என்றார்.

    23-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் திவாகர் தமிழரசன், 12-வது கவுன்சிலர் அறிவழகன் ஆகியோர் தங்கள் வார்டில் தேவைகள் குறித்து பேசினர். அதற்கு தலைவர் நகராட்சி பகுதியில் யார் ஆக்கிரமித்தாலும் அந்த ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் நலன் கருதி நாளை (22-ந் தேதி) 1 முதல் 27 வார்டுகளிலும் அகற்றப்படும்.

    குப்பைகளை அள்ளுவதற்கு குப்பை வண்டிகளை தயார் செய்து தரப்படும். அனைத்து கவுன்சிலர் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார். மேலூர் நகர் பகுதியில் கழிவு நீர் வாய்க்கால், சாலை, பாலம் போன்ற அடிப்படைத் தேவைகள் அமைக்கும் பணிகளுக்கு ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் துணைத் தலைவர் இளஞ்செழியன், ஆணையாளர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், சுகாதார அலுவலர் மணிகண்டன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    ×