என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குமூலம்"

    • ஆடுகளை விற்று மது குடித்ததால் குடிபோதையில் அடித்து துன்புறுத்தியதால் இரும்பு கம்பியால் தாக்கினோம் என்று பெற்றோர் உள்பட 3 பேர் வாக்குமூலம் அளித்தனர்.
    • கிராம நிர்வாக அலுவலர் சோணை கொடுத்த தகவலின்பேரில் வில்லூர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி தாலுகா உவரி கிராமத்தை சேர்ந்தவர் சப்பாணி என்ற தவிடன் (வயது 55). இவருக்கு காளியம்மாள் (50) என்ற மனைவியும், 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மூத்த மகன் சங்கன் (30) என்பவருக்கு திருமணம் நடந்தது. 2-வது மகன் சரவணன் (27). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். பெற்றோருடன் வசித்து வந்த சரவணன் மது பழக்கத்துக்கு அடிமையா னதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சரவணனை அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் சங்கன் ஆகியோர் இரும்பு கம்பியால் தாக்கியதில் இறந்தார். இதையடுத்து தவிடன், காளியம்மாள், சங்கன் ஆகிய 3 பேரும் மறவப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் சரண் அடைந்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சோணை கொடுத்த தகவலின்பேரில் வில்லூர் போலீசார் அவர்களை கைது செய்தனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது மூத்த மகனுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி தனிக்குடித் தனம் சென்று விட்டார். நான், எனது மனைவி மற்றும் 2-வது மகன் சரவணனுடன் வசித்து வந்தோம். போதைக்கு அடிமையான சரவணன் அடிக்கடி வீட்டில் வந்து தகராறு செய்து வந்தார். ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லாமல் மது குடித்தார். இதனை கண்டித்ததால் சரவணன் கம்பால் எங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தான். மேலும் பணம் கேட்டும் தொந்தரவு செய்தான். பணம் தராத நேரத்தில் செம்மறி ஆடுகளை விற்று மது குடித்து வந்தான். இதனால் குடும்பத்தில் நாள்தோறும் பிரச்சினை ஏற்பட்டது.

    கடந்த 5-ந்தேதி இரவு வழக்கம்போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சரவணன், தரக்குறைவாக பேசியதோடு எங்களை சரமாரியாக தாக்கினான். அப்போது அங்கு வந்த சங்கனையும் தரக்குறைவான வார்த்தை களால் பேசினான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் இரும்பு கம்பியால் சரவணனை தாக்கினோம். இதில் அவன் மயங்கி விழுந்தான். குடிபோதையில் சரவணன் தூங்கி இருக்கலாம் என்று சென்று விட்டோம். காலையில் பார்த்தபோது சரவணன் இறந்தது தெரிய வந்தது.

    இவ்வாறு அவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷெகனாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • படுகொலை சம்பவம் தாதகாப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டிசஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் 4-வது வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவரது முதல் மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மாதேஸ்வரன், சேலம் ஜவுளி கடை பஸ் நிறுத்தம் பகுதியில் தனியார் டைல்ஸ் கடையில் வேலை செய்தபோது, அங்கு உடன் வேலை செய்த ஷெகனாஷ் (42) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஏற்கனவே ஷெகனாஷ் திருமணம் ஆகி கணவரை பிரிந்து மகளுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரியவரவே மாதேஸ்வரன், ஷெகனாஷை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மற்றும், குழந்தைகளை பிரிந்து அவர், ஷெகனாசுடன் தாகூர் தெரு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாதேஸ்வரன் திடீரென ஷெகனாஷின் கழுத்தில் துண்டால் இறுக்கி அவரை துடிக்க துடிக்க கொலை செய்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷெகனாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் மாதேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில், 2-வது மனைவியை கொன்றது ஏன்? என்பது குறித்து அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

    திருமணம் ஆன பிறகு நானும், ஷெகனாசும் தாகூர் தெரு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தோம். சில மாதங்களுக்கு முன்பு ஷெகனாஷின் நடத்தையில் மாற்றங்கள் தெரிந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த நான், அவரை கண்காணித்து வந்தேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் ஷெகனாஷூக்கு கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதனால் நான், ஷெகனாஷை கண்டித்தேன். இருப்பினும் அவர் அந்த வாலிபருடன் கள்ளத்தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து பழகி வந்ததாக தெரிகிறது.

    இது தொடர்பாக நேற்று எனக்கும் ஷெகனாசுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த நான், துண்டால் ஷெகனாஷின் கழுத்தை சுற்றி இறுக்கினேன். இதில் வலியால் அலறி துடித்த ஷெகனாஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    இதையடுத்து நான் அங்கிருந்து சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் வசித்து வரும் அவரது மகள் வீட்டிற்கு சென்று, உனது தாயை கொலை செய்துவிட்டதாக தெரிவித்தேன். இதனால் அவரது மகள் கதறி அழுதார். பின்னர் நான் அங்கிருந்து தப்பிச் சென்று இரவு அன்னதானப்பட்டி போலீசில் சரண் அடைந்தேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது.

    கைது செய்யப்பட்ட மாதேஸ்வரனை ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த படுகொலை சம்பவம் தாதகாப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய் யப்பட்டது
    • பாதிரியாரால் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம்

    நாகர்கோவில் :

    கொல்லங்கோடு அருகே சூழால் குடயால்விளை பகுதி யைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ.இவர் இளம் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் போட்டோக்கள் ஆபாச சேட்டிங் போன்றவை சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பாதிரியார் பென டிக்ட் ஆன்றோ தலைமறை வானார்.

    இந்த நிலையில் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் பாலியல் ரீதியாக வாட்ஸ்- ஆப் சாட்டிங் செய்து பாதிரி யார் பெனடிக்ட் ஆன்றோ தன்னை தொல்லை செய்வ தாகவும் மிரட்டியதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார் .

    இதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய் யப்பட்டது. தலைமறைவான பாதிரியாரை பிடிக்க

    ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் மேற்பார்வையில் 4 தனிப் படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பாதிரி யாரின் லேப்-டாப் போலீ சாரிடம் சிக்கியது. அதில் ஏராள மான ஆபாச வீடி யோக்கள் புகைப்படங்கள் இருந்ததை பார்த்து போலீ சார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் பாதிரி யார் பெனடிக்ட் ஆன்றோ கோட்டில் சரண் அடைவ தாக தகவல் பரவியது. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று பார்வதிபுரம் பகுதியில் வைத்து தனிப் படை போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அங்கு ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். முதலில் போலீசாரின் கேள்வி களுக்கு பாதிரியார் பதில் அளிக்க அளிக்க மறுத்தார். பின்னர் போலீசார் லேப்-டாப்பில் இருந்த புகைப்படங்கள் வீடி யோக்கள் குறித்து கேள்வி களை எழுப்பினார்கள். அதற்கும் அவர் எந்த பதிலும் கூறவில்லை.

    ஆனால் புகைப்படங்க ளையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் நான் வெளியிடவில்லை என்று கூறினார். மேலும் லேப்-டாப்பில் இருந்த ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் குறித்த விவரங்களை போலீ சார் கேட்டறிந்தனர். அது தொடர்பான விவரங்களை போலீசாரிடம் பாதிரியார் தெரிவித்தார்.

    நான் எந்த பெண்ணையும் மிரட்டவில்லை என்றும் பாதிரியார் கூறினார். வீடியோவில் இருந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால் பாதிரியார் என்ப தால் திருமணம் செய்ய முடியாது இதையடுத்து எனது பாதிரியார் பதவியை ராஜினாமா செய்து விட்டு திருமணம் செய்யலாமா என்று நினைத்தேன்.ஆனால் வீட்டில் ஒப்பு கொள்ள வில்லை.

    இதையடுத்து நாங்கள் இருவரும் பேசி பிரிந்து விட்டோம். அதன்பிறகு அந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு இறுதியில் திரும ணம் நடந்தது. அதன் பிறகு எங்களுக்கிடையே எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    பல மணி நேர விசார ணைக்கு பிறகு போலீ சார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை ஆசாரிப்பள் ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவரை நாகர்கோவில் மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்ட் ரேட் தாயுமானவர் பாதிரி யார் பெனடிக்ட் ஆன்றோ வருகிற 4-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தர விட்டார்.

    இதையடுத்து பாதிரியார் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நாகர் கோவில் ஜெயிலில் அடைக் கப்பட்டுள்ள பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை சைபர் கிரைம் போலீசார் காவல் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.ஏற்கனவே லேப்டாப், செல்போனை கைப்பற்றிய போலீசார் அதிலிருந்து பல ஆதாரங்களை திரட்டி உள்ளனர். அது தொடர்பான முழு விவரங்களை திரட்டும் வகையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவல் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    பாதிரியாரை காவலில் எடுத்து விசாரித்தால் தான் முழு விவரமும் தெரிய வரும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிரியாரால் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • சிவசங்கர் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
    • சி.சி.டி.வி. கேமராவின் காட்சி களையும் ஆய்வு செய்தனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பட்டக சாலியன்விளை பெருமாள் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 29). டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் மீது கோட்டார், நேசமணி நகர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

    மேலும் கோட்டார் போலீஸ் நிலைய ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது. இவருக்கும், பீச் ரோடு பெரிய விளையை சேர்ந்த சிவசங்கர் (38) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று பீச்ரோடு பகுதியில் ரஞ்சித் நின்ற போது அங்கு வந்த சிவசங்கர் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

    இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னார்கள். இது தொடர்பாக சிவசங்கரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சிவசங்கர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு ரஞ்சித்தின் வீட்டுக்குள் நுழைந்து அவருடைய வீட்டை சூறையாடியது தொடர்பாக என் மீது நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. இதனால் எனக்கும், ரஞ்சித்துக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று ரஞ்சித் என்னை போன் மூலமாக தொடர்பு கொண்டு அழைத்தார். இதையடுத்து நான் பீச்ரோடு பகுதிக்கு வந்தேன். அப்போது மோட்டார் சைக்கிள் வந்த ரஞ்சித்தை தடுத்து நிறுத்தினேன். அப்போது அவர் என்னிடம் வாய் தகராறில் ஈடுபட்டார். எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    ஏற்கனவே என் மீது ரஞ்சித்தின் தாயார் கொடுத்த புகாரினால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தேன். இதற்கு பழிக்கு பழியாக அவரை கத்தியால் குத்தினேன். பின்னார் அங்கிருந்து சென்று விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் கொலை நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் ஆய்வு செய்தனர். கைது செய்யப்பட்ட சிவசங் கரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

    • தர்மபுரி மாவட்டம் அரூர். இவர் அதிகாரி பட்டியல் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள பேக்கரியில் கேசியராக பணி புரிந்தார்.
    • மனைவியுடன் கள்ளக்காதல் இருக்குமோ என்று சந்தே கத்தேன் இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் லோகேஸ்வ ரனை கல்லால் தலையில் தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.

    சேலம்:

    சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரி பட்டியை சேர்ந்தவர் மணி வண்ணன். இவரது மகன் லோகேஸ்வரன் (வயது 25). இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் அரூர். இவர் அதிகாரி பட்டியல் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள பேக்கரியில் கேசியராக பணி புரிந்தார்.

    இந்த நிலையில் அதி காரியப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மனைவி வசுமதி(25) என்பவருடன் லோகேஸ்வரன் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படு கிறது. இதனால் அவர்க ளுக்குள் கள்ளக்காதல் இருப்பதாக மணிகண்ட னுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் முன் நண்பருடன் லோகேஸ்வரன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் லோகேஸ்வர னின் பின் தலையில் தாக்கி னார். இதில் படுகாயம் அடைந்த லோகேஸ்வரனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வழியிலேயே லோகேஸ்வரன் பரிதாப மாக இறந்தார். தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று விசாரித்த னர். பின்னர் மணிகண்ட னையும் பிடித்து விசாரித்த னர். விசாரணையில் அவர் தனது மனைவியுடன் லோகேஸ்வரன் அடிக்கடி பேசி வந்ததாக அந்த பகுதி யினர் கூறியதால் தனது மனைவியுடன் கள்ளக்காதல் இருக்குமோ என்று சந்தே கத்தேன் இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் லோகேஸ்வ ரனை கல்லால் தலையில் தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.

    இதை அடுத்து போலீசார் மணிகண்டனை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு இடையே லோகேஸ்வரன் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு பின் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • வடிவேல் அன்னூர் நாராயணபுரம் பகுதியில் தங்கி சிற்ப வேலை பார்த்து வந்தார்.
    • போலீசார் 4 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை காளப்பட்டி சாலையில் உள்ள ஓட்டல் அருகே வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த கோவில்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் பேரூர் இந்திரா நகரை சேர்ந்த வடிவேல் (வயது 42) என்பது தெரியவந்தது. இவர் கோவில் சிற்பியாக உள்ளார். அன்னூர் நாராயணபுரம் பகுதியில் தங்கி சிற்ப வேலை பார்த்து வந்தார். வடிவேல் எப்படி குரும்பபாளையம் வந்தார் என்று தெரியவில்லை.

    எனவே போலீசார் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் சிற்பி வடிவேல் வேலை முடிந்து நண்பர்களுடன் பஸ்சில் கோவைக்கு புறப்பட்டார். அப்போது அவர் குரும்பபாளையத்தில் இறங்கி சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டு, பஸ்சில் இருந்து இறங்கி சென்றது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் குரும்பபாளையத்தில் வடிவேல் இறந்து கிடந்த ஓட்டலில் பணியாற்றிய வலியாம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 57), ராஜ்குமார் (21), பால்துரை (45), சந்தோஷ்குமார் (24) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் வடிவேலை அடித்துக் கொன்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். போலீசார் 4 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். போலீசாரிடம் கைதான 4 பேரும் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் குரும்பபாளையத்தில் ஓட்டல் புனரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்தோம். சம்பவத்தன்று இரவு பணி முடிந்து நாங்கள் ஒன்றாக மது அருந்தினோம். அப்போது அங்கு ஒருவர் சுற்றுமுற்றும் பார்த்தபடி ஓட்டலுக்குள் புகுந்தார். எனவே நாங்கள் அவரிடம் நீங்கள் யார் என்று கேட்டோம். அதற்கு அவர் ஓட்டலில் சாப்பிட ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டார்.

    எங்களுக்கு அவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே நீ திருடன் தானே என்று கேட்டோம். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் என்னை திருடன் என்பதா என கேட்டு எங்களுடன் வாக்குவாதம் செய்தார். நாங்கள் குடிபோதையில் இருந்ததால் அவரை சகட்டு மேனிக்கு தாக்கினோம். இதில் அவர் படுகாயங்களுடன் மயங்கி விழுந்தார்.

    அதன்பிறகு அவரை வெளியே தூக்கி வீசி விட்டோம். ஓட்டலுக்கு வெளியே படுகாயத்துடன் கிடந்தவர் உயிருடன் இருப்பார் என்று கருதினோம். ஆனால் அவர் இறந்து போவார் என்று நினைக்கவில்லை. ஓட்டலுக்கு திருட வந்தவர் என்று நினைத்து உணர்ச்சி வேகத்தில் தாக்கி கொலை செய்து விட்டோம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    • பணம் தராததால் தாயை அடித்து கொன்றேன் என்று கைதான மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    • கட்டிலில் பிணமாக கிடந்தார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தளிர்மருங்கூர் கிராமத்தை அடுத்துள்ள பாகனவயல் கிராமத்தில் தனியாக வீட்டில் இருந்த மூதாட்டி ஜெயசீலி (வயது75) கட்டி லில் பிணமாக கிடந்தார்.

    தகவல் அறிந்த ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி னர்.

    கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் மூத்த மகன் கொத்தனார் வேலை செய்து வரும் அருள் செல்வத்திடமும் (48) விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகம் அடைந்த போலீ சார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது தாைய அடித்து கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார். அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது தாயார் ஆடு விற்ற பணம், பயிர் இன்சூ ரன்ஸ் பணம் ஆகிவற்றை இளைய மகனுக்கும், மகளுக்கும் கொடுத்து வந்தார். எனக்கு எதுவும் கொடுக்கவில்லை. அப்பா வின் பெயரில் வங்கியில் இருந்த பணத்தை தாயிடம் தொடர்ந்து கேட்டு வந் ஆனால் அவர் கொடுக்காமல் மறுத்து வந்தார்.

    இதனால் அவர் மீது கோபத்தில் இருந்தேன். சம்பவத்தன்று மீண்டும் தாயிடம் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் கொடுக்க முடியாது என கூறினார். இதனால் ஆத்திரத்தில் அவரை விறகு கட்டையால் தலையில் அடித்தேன். அதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மர்மகும்பல் சுற்றி வளைத்து கொலை செய்தனர்.
    • அருண்கு மாருடன், அன்பரசனும் வந்ததால் அவரையும் சேர்த்து கொலை செய்துள்ளனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28), கோர்க்காட்டை சேர்ந்தவர் அன்பரசன் (32). இவர்கள் மயிலம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட கடந்த 10-ந் தேதி வந்தனர். இவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த மர்மகும்பல், வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் மர்மகும்பல் சுற்றி வளைத்து கொலை செய்தனர். இது தொடர்பான வழக்கில் வானூர் போலீசார் புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதி கொடாத்தூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 20), விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மாத்தூரை சேர்ந்த வீரசெழியன் (26), வழுதாவூரைச் சேர்ந்த ஜெகன் (23) ஆகியோரை கைது செய்து விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரைச் சேர்ந்த முகிலன், வினித், சத்தியராஜ், ராம்குமார், புதுவை மாநிலம் வில்லியனூர் பிள்ளையார்குப்பம் மதன், பொறையூர் சூர்யா ஆகியோர் சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை வானூர் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை யில், சரணடைந்த முகிலன் உள்ளிட்ட குற்றவாளிகளை 3 நாள் காவலில் விசாரிக்க அம்பத்தூர் கோர்ட் வானூர் போலீசாருக்கு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை அழைத்து வந்த வானூர் போலீசார் 3-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர். விசாரணையில் முகிலனின் தம்பி முரளியை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அருண்குமார் கொலை செய்தார். இதற்கு பழிக்குப்பழி வாங்கவே அருண்குமாரை கொலை திட்டம் தீட்டி வானூர் அருகே கொலை செய்ததாக முகிலன் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. மேலும், அருண்கு மாருடன், அன்பரசனும் வந்ததால் அவரையும் சேர்த்து கொலை செய்ததாக முகிலன் போலீ சாரின் விசா ரணையில் கூறியுள்ளார். 3 நாள் காவல் இன்றுடன் முடிவதால் இன்று மாலை முகிலன் மற்றும் கூட்டாளிகளை சென்னை கோர்ட்டில் வானூர் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர்.

    • தமிழத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், பீகார் சென்று சர்வகட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம்.
    • மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சூரப்பள்ளி, சவுரியூர், காப்பரத்தாம்பட்டி, கரிக்காப்பட்டி பகுதிகளில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கட்சியை கொடியை ஏற்றி வைத்தார்.

    பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: -

    தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அ.தி.மு.க கொண்டு வந்த ஒவ்வொரு திட்டத்தையும் ரத்து செய்கின்ற காட்சியைத்தான் சாதனையாக பார்க்கிறோம்.

    தமிழகத்தில் மின் கட்டணம் 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கைத்தறி, விசைத்தறி, உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. தமிழத்தை காப்பாற்ற முடியாத முதலமைச்சர் ஸ்டாலின், பீகார் சென்று சர்வகட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம்.

    நான் முதலமைச்சராக இருந்தபோது, உங்கள் மீது வழக்கு போட்டிருக்க முடியும். ஆனால் வழக்கு போடவில்லை.

    மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் இருந்தது. 4ஆண்டுகள் சிறப்பான ஆட்சி தந்தோம். பொது இடத்தில் கூட்டம் போட்டு எங்கள் ஆட்சி மீதுள்ள குற்றச்சாட்டை சொல்லுங்கள், அதற்கு நான் பதில் தருகிறேன்.

    கைதான அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழகத்தில் மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர். இதற்கு தான் மத்திய அரசு ரெய்டு நடத்துகிறது. செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டால், பலர் சிக்குவார்கள்.

    இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • அசோக்ராஜின் பெரியப்பா துரை ராஜையும் அந்த கும்பல் வெட்டிக்கொன்றது.
    • மைனர் பாண்டிக்கு சொந்தமான நிலம், அசோக் ராஜ் வீட்டின் அருகில் உள்ளது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மகன் அசோக்ராஜ் (வயது 27). வக்கீல்.

    இரட்டைக்கொலை

    இவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் இருந்த போது, திடீரென்று பின்பக்க வாசல் வழியாக வந்த கும்பல் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.

    இதனை தடுக்க முயன்ற அசோக்ராஜின் அக்காள் அருள்ஜோதியின் (33) கைவிரலிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் அங்கிருந்து வெளியே ஓடி வந்த கும்பல், சாலையோரம் நின்று கொண்டிருந்த அசோக்ராஜின் பெரியப்பா துரை ராஜை (55) வெட்டிக்கொன்று விட்டு தப்பி ஓடியது.

    ராணுவ வீரர்

    இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து ஆலங் குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இடத்தகராறில் அதே பகுதியில் வசிக்கும் ராணுவ வீரர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தி னர் இவர்கள் இருவரை கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து சுரேஷ், அவருடைய தந்தை குழந்தை பாண்டி (60), தாயார் ஜக்கம்மாள், உறவினர்கள் மகாராஜன் (32), குமார் (30) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சுரேஷ் தனது வாக்கு மூலத்தில் கூறியதாவது:-

    கோர்ட்டில் வழக்கு

    வீரகேரளம்புதூரைச் சேர்ந்தவர் மைனர் பாண்டி. இவருக்கு சொந்தமான நிலம், நெட்டூரில் அசோக் ராஜ் வீட்டின் அருகில் உள்ளது.

    அதனை என் மூலம் விற்க ஏற்பாடு செய்தார். ஆனால் அந்த நிலம் தொடர்பாக அசோக்ராஜ் தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக எங்களுக்குள் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த நான் சம்பவத்தன்று அங்கு சென்று அசோக்ராஜ், துரைராஜ் ஆகியோரை வெட்டிக்கொலை செய்தேன். இதில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தோம்.
    • எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நான் செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டேன்.

    சூலூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகள் சக்தி பிரியா (வயது 24).

    இவர் சூலூர் அருகே உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி இருந்து 4-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 25-ந் தேதி விடுதியில் உள்ள அறையில் இருந்த சக்தி பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல் மருத்துவ மாணவி திடீர் தற்கொலைக்கான காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் மாணவியின் பெற்றோர் தங்களது மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் சக்தி பிரியா பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி அவர் யாருடன் கடைசியாக பேசினார் என ஆய்வு செய்தனர். அதில் அவர் கடைசியாக கிருஷ்ணகிரியில் என்ஜினீயரிங் படித்து வரும் கோகுல் (25) என்பவரிடம் பேசியது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நான் கிருஷ்ணகிரியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டுபடித்து வருகிறேன். நானும் சக்தி பிரியாவும் பள்ளியில் இருந்தே ஒன்றாக படித்து வந்தோம். அப்போது எங்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. நாங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தோம்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சக்தி பிரியா அவரது நண்பர் ஒருவருக்கு பண உதவி செய்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. இதனை நான் கண்டித்தேன்.

    அப்போது எங்களுக்கு இடையே செல்போன் மூலமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சக்தி பிரியா என்னிடம் பேசுவதை குறைத்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆத்திரம் அடைந்த நான் சக்தி பிரியாவின் தோழிகளை தொடர்பு கொண்டு அவருடன் பேசாதீர்கள் என கூறினேன். இதுகுறித்து அவர்கள் சக்தி பிரியாவிடம் கூறி உள்ளனர். சம்பவத்தன்று விடுதியில் இருந்த அவர் இதுபற்றி செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு என்னிடம் கேட்டார். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நான் செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டேன். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது எனக்கு தெரிய வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    விசாரணையில் முடிவில் போலீசார் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு துண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது காதலன் கோகுலை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
    • கடந்த 10 ஆண்டுகளாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    கோவை மசக்காளிபாளையம் அருகே உள்ள செங்குட்டை வீதியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 60). பால் வியாபாரி. கடந்த 24-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை மறைத்து வைத்துவிட்டு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட யாரோ மர்மநபர் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து சதாசிவம் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சண்முகம், உதவி கமிஷனர் பார்த்திபன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒரு பெண் சதாசிவம் வீட்டிற்குள் சென்று நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கரூர் மாவட்டம் வெங்கமேட்டை சேர்ந்த தர்மராஜ் என்பவரது மனைவி ரமணி (33) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அவரது கூட்டாளியான வினையா (33) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட ரமணியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனது கணவர் இறந்து விட்டார். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளை காப்பாற்றுவதற்காக நான் முதலில் திருட ஆரம்பித்தேன். நான் ஒரு கொள்ளை வழக்கில் கைதாகி கோவை மத்திய ஜெயிலில் இருந்தேன். அப்போது எனக்கு போக்சோ வழக்கில் கைதாகி ஜெயிலில் இருந்த வினையாவுடன் நட்பு ஏற்பட்டது. அவருக்கு தேவையான உதவிகளை செய்து அவரை ஜாமீனில் வெளியே எடுத்தேன். பின்னர் 2 பேரும் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தோம்.

    நாங்கள் வீடு வாடகைக்கு கேட்க செல்வது போலவும், வேலை கேட்டு செல்வது போலவும், உறவினர் வீட்டை தேடி வந்தது போலவும் செல்வோம். அப்போது அங்கு திறந்து இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவோம். கொள்ளையில் ஈடுபடும் போது யாராவது வந்து விட்டால் அதற்கு ஏற்ப நாடகமாடி அங்கு இருந்து தப்பிச் சென்று விடுவோம். நாங்கள் பெண்கள் என்பதால் எங்கள் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

    நாங்கள் 2 பேரும் வீடு வாடகைக்கு கேட்டு செல்வது போல மசக்காளிபாளையம் பகுதியில் நோட்டமிட்டோம். அப்போது சதாசிவம் என்பவர் வீட்டை பூட்டி விட்டு சாவியை மறைத்து வைத்து விட்டு செல்வதை நோட்டமிட்டோம். எனவே அவரது வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டோம். சம்பவத்தன்று நாங்கள் கால் டாக்சியில் மசக்காளி பாளையம் செங்குட்டை வீதிக்கு சென்றோம். வினையா காரில் அமர்ந்து இருந்தார். நான் காரில் இருந்து இறங்கி சென்று சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றோம்.

    போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

    கைது செய்யப்பட்ட ரமணி மீது கரூர், நாமக்கல், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிய வந்தது. அவர் கடந்த 10 ஆண்டுகளாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் இவர் கொள்ளையடித்த நகைகளை அவரது சித்தி ஜெயந்தி என்பவரிடம் கொடுத்து பணமாக மாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது. ஜெயந்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட ரமணி, வினையா ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×