search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாசிம் அக்ரம்"

    • ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களுக்கான சம்பளத்தை குறைத்துக் கொடுக்க வேண்டும்.
    • முதல் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 145 கி.மீ வேகத்தில் வீசிய ஆவேஷ் கானுடைய வேகம் இப்போது 130 - 135 என குறைந்து விட்டது.

    டி20 உலகக் கோப்பையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் டி20 அணியாக களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

    இத்தொடரில் சூப்பர் 12 சுற்றில் தேவையான வெற்றிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா அழுத்தமான நாக் அவுட் போட்டியில் வழக்கம் போல சொதப்பி படுதோல்வியை சந்தித்து வெளியேறியது.

    ஐபிஎல் தொடரில் பணம் சம்பாதிக்கும் இந்திய வீரர்கள் நாட்டுக்காக விளையாடும் போது முழுமூச்சுடன் போராடுவதில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்நிலையில் தரமான அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் நோக்கத்தில் 2008-ல் ஐபிஎல் தொடர் உருவாக்கப்பட்ட பின் இந்தியா இதுவரை ஒரு டி20 உலக கோப்பையை கூட வெல்லவில்லை என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    இந்தியா ஐபிஎல் தொடரால் பயனடையும் என்று அனைவரும் நினைத்தார்கள். இந்தியா 2007இல் டி20 உலக கோப்பையை வென்றது. ஆனால் ஐபிஎல் தொடங்கப்பட்ட பின் அவர்கள் இன்னும் டி20 உலக கோப்பையை வெல்லவில்லை. 2011இல் அதுவும் சொந்த மண்ணில் 50 ஓவர் கோப்பையை வென்றார்கள்.

    எனவே இந்த இடத்தில் கேள்வி எழுகிறது. இதனால் வெளிநாட்டு தொடர்களில் தங்களது வீரர்களை அனுமதிக்கும் வகையில் இந்தியா தனது அணுகுமுறையை மாற்றுமா? மேலும் ஆசிய கோப்பையிலேயே இந்திய பவுலர்களிடம் ஒரு மாற்றத்தை கண்டேன்.

    அதாவது ஐபிஎல் தொடருக்கு பின் அவர்களது வேகம் குறைந்து விட்டது. எடுத்துக்காட்டாக முதல் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 145 கி.மீ வேகத்தில் வீசிய ஆவேஷ் கானுடைய வேகம் இப்போது 130 - 135 என குறைந்து விட்டது. எனவே அவர் ஐபிஎல் தொடரில் 12 – 13 கோடி ரூபாய்களை சம்பாதித்து விட்டதால் இந்த வேகம் குறைந்து விட்டதா என்பதை பிசிசிஐ ஆராய வேண்டும்.

    மேலும் ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களுக்கான சம்பளத்தை குறைத்துக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் பசியுடன் சிறப்பாக செயல்படுவார்கள். ஏனெனில் பாகிஸ்தானில் ஒரு மாதத்தில் நான் 24 கோடிகளை சம்பாதித்தால் எனது வேலை முடிந்து விட்டதாக நினைத்து நாட்டுக்காக முழு மூச்சுடன் விளையாட மாட்டேன்.

    என்று கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானுக்கு எதிராக 33 ரன்கள் எடுத்ததுடன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
    • அவரது பேட்டிங் அனைத்து ஆல்ரவுண்டர்களை விட சிறப்பாக இருக்கிறது.

    துபாயில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா அடித்த சிக்சர் மூலம் இந்தியா திரில் வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் 17 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்ததுடன் பாகிஸ்தானின் 3 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியிருந்தார்.

    இந்நிலையில்,பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் நிலையான ஆட்டம் மூலம் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா என்று தான் நம்புவதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

    அவர் இப்போது உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் என்பது அவருக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன். அதன்படி செயல்படுகிறார். அதற்கேற்ப அவனது மனநிலையும் அமைகிறது. அவர் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசுகிறார்.

    அவர் பேட்டிங் செய்யும் விதம் ஆண்ட்ரே ரஸ்ஸலை விடவும், எங்களிடம் உள்ள அனைத்து ஆல்ரவுண்டர்களை விடவும் சிறப்பாக இருக்கிறது. மேலும் அவர் ​​அனைத்து நிலைகளிலும் இந்திய அணியில் மிக முக்கியமான உறுப்பினராக இருக்கிறார் என்றும் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

    • அவர் விளையாடிய இரண்டு ஷாட்கள் அபாரமானது.
    • ஆசிய கோப்பை டி20 போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோத உள்ளன.

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற 27-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. செப்டம்பர் 11-ந் தேதி வரை துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் தேர்வு பெறும் ஒரு அணி என 6 நாடுகள் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றன.

    இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 ஆட்டம் இம்மாதம் 28ந் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு ஆபத்தான இந்திய பேட்ஸ்மேனாக சூரியகுமார் யாதவ் இருப்பார் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ரோகித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணியில் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தவர்களில் ஒருவர் சூர்யகுமார் யாதவ். அவர் தனித்துவமானவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அவரது ஆட்டத்தை பார்த்தேன். அவர் விளையாடிய இரண்டு ஷாட்கள் அபாரமானது. அவர் அடித்த ஒரு ஷாட்டில் பேட்டின் நடுவில் இருந்து ஃபைன் லெக்கை நோக்கி பந்து பறந்து சென்றது அசாதாரணமானது. அந்த ஷாட் அடிப்பது கடினம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×