என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெடிகுண்டு வீச்சு"
- காயமடைந்த நவீன்குமாரை உடனடியாக மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
- கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் தப்பிச் சென்ற 4 பேர் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கீழவளவு பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது30). இவர் வெளிநாடுகளுக்கு அவ்வப்போது வேலைக்கு சென்று வருவது வழக்கம். உள்ளூரிலும் பல்வேறு வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் கீழவளவு பஸ் நிறுத்தம் அருகே தனது நண்பர் ஒருவரின் காரில் நவீன்குமார் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். பேருந்து நிறுத்தம் என்பதால் அருகில் செயல்படும் ஆட்டோ ஸ்டாண்ட் கண்ணன் என்பவர் தனது ஆட்டோவுடன் நின்றிருந்தார். நவீன்குமார் அமர்ந்திருந்த கார், பஸ் நிறுத்தம் அருகே உள்ள சத்தியமூர்த்தி (40) என்பவரின் ஜெராக்ஸ் கடை முன்பாக நின்றிருந்தது.
இரவு 9 மணி என்பதால் கடையை அடைக்கும் பணியில் சத்தியமூர்த்தி ஈடுபட்ட படி கடை வாசலில் நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்து நவீன்குமார் அமர்ந்திருந்த கார் அருகே வந்து நிறுத்தப்பட்டது. அந்த காரில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் நவீன் குமாரை நோக்கி டிபன் பாக்ஸ் வெடிகுண்டை வீசியது.
இதை சற்றும் எதிர்பாராத நவீன்குமார் நிலை தடுமாறினார். டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் காரின் கண்ணாடிகள் சுக்கு நூறாக நொறுங்கின. இந்த சம்பவத்தில் நவீன்குமார் படுகாயமடைந்தார். டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்ததில் அருகில் நின்றிருந்த ஆட்டோ டிரைவர் கண்ணனும் காயமடைந்தார்.
அதேபோல் ஜெராக்ஸ் கடை வாசலில் நின்றிருந்த உரிமையாளர் சத்திய மூர்த்திக்கும் காயம் ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது கடைகளை அடைத்துவிட்டு சென்றனர். சிலர் மட்டுமே சம்பவம் நடந்த இடத்தில் கூடினர். இதற்கிடையே டிபன் பாக்ஸ் வெடிகுண்டை வீசிய கும்பல் தாங்கள் வந்த காரில் தப்பி சென்றனர். இதையடுத்து அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
தகவலறிந்த மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு மற்றும் கீழவளவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையிலும், மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். அங்கு திரண்டிருந்த கூட்டத்தை கலைந்து செல்ல செய்தனர். காயமடைந்த நவீன்குமாரை உடனடியாக மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீச்சு தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஆட்டோ டிரைவர் கண்ணன், ஜெராக்ஸ் கடை உரிமையாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டில் பணியாற்றியபோது நவீன்குமாருக்கு மற்றொரு கும்பலுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக இந்த விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகை காரணமாக நவீன்குமாரை கொலை செய்வதற்காக டிபன் பாக்ஸ் வெடிகுண்டை கும்பல் வீசி சென்றிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் தப்பிச் சென்ற 4 பேர் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் நிறுத்தம் அருகே சினிமா பாணியில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டை வீசி சென்ற சம்பவம் கீழவளவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விஜய் என்பவர் மது போதையில் தகராறு செய்தார்.
- இரவு தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென வெடி சத்தம் கேட்டது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே ஜம்புதுரைக்கோட்டை ஜல்லிப்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது37). திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
இவர் அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-
எங்கள் பகுதியில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. அப்போது விஜய் என்பவர் மது போதையில் தகராறு செய்தார். அது குறித்து போலீசில் புகார் தெரிவித்தேன். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை எச்சரித்து காலையில விசாரணைக்கு வருமாறு கூறினர்.
பின்னர் நிலக்கோட்டையில் வக்கீலாக பணிபுரியும் எனது சகோதரர் உதயகுமார் எங்கள் வீட்டிற்கு வந்தார். முன்பகையை மனதில் வைத்துக் கொண்டு விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
பின்னர் இரவு தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென வெடி சத்தம் கேட்டது. நாங்கள் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு பைப் சேதம் அடைந்தது தெரிய வந்தது. அப்போது விஜய் குடும்பத்தினர் காட்டுக்குள் ஓடி மறைந்து விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாலிபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த மின் டெட்டனைட்டர் குண்டை எம்.எல்.ஏ.வின் காரின் மீது வீசினார்.
- எம்.எல்.ஏ.வின் கார் மீது எதற்காக குண்டு வீசினார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பெனுகொண்டா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சங்கர நாராயணன்.
இவர் நேற்று மாலை கட்டம்தண்டா பஞ்சாயத்து குட்பட்ட கல்வி தண்டா பெனுகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் அரசு திட்டங்கள் குறித்து பொது கூட்டங்களில் பேசினார்.
பின்னர் தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த மின் டெட்டனைட்டர் குண்டை எம்.எல்.ஏ.வின் காரின் மீது வீசினார். டெட்டனெட்டர் வெடிக்காததால் அதிர்ஷ்டவசமாக எம்.எல்.ஏ உயிர் தப்பினார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு காரின் மீது குண்டு வீசிய வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அங்கு வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் குடிப்பள்ளியை சேர்ந்த கணேஷ் என்பதும் பாலசமுத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவர் மற்றும் டெட்டனேட்டர் ஆபரேட்டராக செயல்பட்டது தெரியவந்தது.
கணேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். எம்.எல்.ஏ.வின் கார் மீது எதற்காக குண்டு வீசினார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எபினேசரிடம் மோதலில் ஈடுபட்ட ரவுடி தற்போது தலைமறைவாக உள்ளார்.
- ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சமீபகாலமாக வெடிகுண்டு வீசி கொலைசெய்யும் கலாசாரம் பரவி வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர்:
திருமழிசை பகுதியை சேர்ந்தவர் எபினேசர்(வயது32).ரவுடி. இவர் மீது கொலை, மிரட்டல், அடிதடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
நேற்று மாலை எபினேசர் ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் என்ற இடத்தில் ஆட்டோவில் வந்து கொண்டு இருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் திடீரென ஆட்டோ மீது காரை மோதினர். மேலும் 2 நாட்டுவெடி குண்டுகளையும் ஆட்டோ மீது வீசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த எபினேசர் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பி ஓட்டம் பிடித்தார். அருகில் உள்ள வயல்வெளியில் ஓடிய எபினேசரை மர்மகும்பல் விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.
இதற்கிடையே எபினேசர் வந்த ஆட்டோவை ஓட்டிவந்தவர் அங்கிருந்து ஆட்டோவுடன் தப்பி சென்றுவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது. திருமழிசை பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடிக்கும் எபினேசருக்கும் மோதல் இருந்து உள்ளது. இதில் யார்? பெரியவர்? என்று அவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த தகராறில் இருதரப்பையும் சேர்ந்த ஸ்டீபன்ராஜ், கிரிஸ்டோபர் ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இதனால் எபினேசரும், எதிர்தரப்பு ரவுடியும் மாறிமாறி யார் முந்திதீர்த்துகட்டுவது என்று திட்டமிட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் எபினேசர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
எபினேசரிடம் மோதலில் ஈடுபட்ட ரவுடி தற்போது தலைமறைவாக உள்ளார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்து உள்ளது. கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு திருமழிசை பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எபினேசர் குற்றவாளி ஆவார். எனவே இந்த கொலைக்கு பழிக்குபழியாக எபினேசர் தீர்த்து கட்டப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சமீபகாலமாக வெடிகுண்டு வீசி கொலைசெய்யும் கலாசாரம் பரவி வருகிறது. ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் தொழில் அதிபர் பி.பி.ஜி. குமரன்,பா.ஜ.க.பிரமுகர் பி.பி.ஜி.டி சங்கர், கடந்த மாதம் தி.மு.க. பிரமுகர் ஆல்பர்ட் என அனைவரும் வெடி குண்டு வீசியும் வெட்டி கொலை செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- 2 மர்ம நபர்கள் இனியவள் வீட்டின் மீது கம்பிகள் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் ஆபிசர்ஸ் லைன் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் ரெயில்வே ஊழியர். அவரது மனைவி இனியவள் (வயது 52) இவர்களுக்கு ஆர்த்தி மற்றும் பிரீத்தி என்ற 2 மகள்களும் குகன் என்கின்ற ஒரு மகனும் உள்ளனர்.
இரு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. ஓய்வு பெற்ற சந்திரன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் அவரது மகன் குகன் தந்தையின் ரெயில்வே பணியில் சேர்ந்தார். அவர் சேலத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் ஆபிசர்ஸ் லைன் பகுதியில் இனியவள் மட்டும் தனியாக வசித்து வந்தார்.
நேற்று இரவு பைக்கில் ஹெல்மெட் போட்டு கொண்டு வந்த 2 மர்ம நபர்கள் இனியவள் வீட்டின் மீது கம்பிகள் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், பல்புகள் மற்றும் கதவு உடைந்து சேதமானது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது 2 பேர் தப்பி சென்று விட்டனர்.
இனியவள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனார்.
வாணியம்பாடி டி.எஸ்.பி. விஜயகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
அங்கு வெடித்து சிதறிய வெடியின் துகள்கள் ஆகியவற்றை கைபற்றினர். நாட்டு சரவெடி வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கதவை திறந்து வைத்து விட்டு வாசல் திரைைய போட்டிருந்தனர்.
- முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடி குண்டை வீசி சென்றது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் அருகே தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப் பட்டது. கடலூர் அருகே உள்ள குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 47). இவரது மனைவி சரளா (44). இவர்கள் 2 பேரும் புதுைவ மாநிலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு மதுமிதா, ஜனனி ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளன. நேற்று இரவு இவர்கள் வீட்டின் இரும்பு கதவை பூட்டி விட்டு ெமயின் கதவை திறந்து வைத்து விட்டு வாசல் திரைைய போட்டிருந்தனர்.
இவர்கள் அனைவரும் ஹாலில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நள்ளி ரவு 11.30 மணியளவில் மின்சாரம் தடைபட்டது. சற்று நேரத்தில் மின்சாரம் வந்தது. அந்த சமயத்தில் வீட்டிற்கு வெளியே பயங் கர சத்தம் கேட்டது. முருகானந்தம் வீட்டில் இருந்த மின் விசிறி ஏற்கனவே பழுதாகி வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது வீட்டு வாசலில் சணல், சிறிது சிறிதான ஆணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் வீட்டு வாசலில் மாட்டப்பட்டிருந்த திரை சீலையும் கருகி இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் தூங்கி கொண்டிருந்த போது யாரோ மர்ம நபர்கள் முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடி குண்டை வீசி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து தூக்கணாம் பாக்கம் ேபாலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் அங்கு வந்தார். அவர் முருகா னந்தம், அவரது மனைவி சரளா மற்றும் மகள்களிடம் விசாரணை நடத்தினார். உங்கள் குடும்பத்தின ருடன் யாருக்கும் முன் விரோதம் உள்ளதா? என் பது குறித்து கேட்டறிந்தார். மேலும் தடயவியல் நிபு ணர்களும் அங்கு வந்தனர். அவர்கள் முருகானந்தம் வீட்டின் முன்பு சிதறி கிடந்த சணல், ஆணிகளை கைப்பற்றி பரிசோதனைக் காக எடுத்துச் சென்றனர். அப்பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமரா உள்ளதா? அதில் முருகா னந்தம் வீட்டுக்கு வந்த வர்கள் குறித்த காட்சிகள் பதிவாகி உள்ளதா? என் பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீசி சென்றவர்கள் யார்? என்று போலீசார் விசா ரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் உள்பட 3 பேர் சேர்ந்து நாட்டு வெடி குண்டு வீசியது தெரிய வந்தது. போலீஸ் விசாரணை யில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. முருகா னந்தம் மகளை பிடிபட்ட வாலிபர்களில் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இது முருகானந்தத்துக்கு தெரிய வந்ததும், அவர் அந்த வாலிபரை கண்டித்துள் ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகானந்தத்தை மிரட்டுவதற்காக அவரது வீட்டு முன்பு நாட்டு வெடிகுண்டு வீசியது தெரிய வந்தது.இந்த வெடிகுண்டு எங்கிருந்து கிடைத்தது என்று போலீசார் விசாரணை நடத்திய போது யூடியூப்பை பார்த்து தாங்களே செய்ததாக தெரிவித்தனர். அவர்களி டம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள் ளது.
- சில வசனங்களை சேர்த்து அவர்கள் வெளியிட்ட அந்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.
- மெலட்டூர் போலீசார், முகம்மது ரியாஸ் உள்ளிட்ட 5 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் அதிக லைக் பெறுவதற்காக, அதில் கணக்கு வைத்திருக்கும் பலர் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுகின்றனர். அதிக லைக் வாங்குவதற்காக சிலர் பிரச்சினைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு, சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.
அதுபோன்ற ஒரு நிகழ்வு கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொடு வன்னிக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் முகம்மது ரியாஸ்(வயது25), முகம்மது ஹலாஸ்(22) சலீம்(20), முகம்மது ஜாசிம்(19), சல்மானில் பாரிஸ்(19). இவர்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கணக்கு வைத்துள்ளனர்.
அதில் வித்தியாசமாக வீடியோ வெளியிட்டு அதிக லைக்குகளை வாங்க திட்டமிட்ட அவர்கள், மலப்புரம் போலீஸ் நிலையம் மீது வெடிகுண்டு வீசுவது போன்றும், அதில் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனம் தீப்பிடித்து எரிவது போன்றும், போலீஸ் நிலையம் சேதமடைவது போலவும் காட்சியை உருவாக்கி இன்ஸ்டாகிராம் மற்றும் யு-டியூப்பில் பதிவிட்டனர்.
விசுவல் எபக்ட் மற்றும் சில வசனங்களை சேர்த்து அவர்கள் வெளியிட்ட அந்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த மெலட்டூர் போலீசார், முகம்மது ரியாஸ் உள்ளிட்ட 5 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். சமூக வலைதளங்களில் அதிக லைக்குகள் வாங்குவதற்காகவே அவ்வாறு வீடியோவை உருவாக்கி, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்தது அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களின் மீது வன்முறையை தூண்டுதல், சமூக வலைதளங்கள் மூலம் காவல்துறையை அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது. பின்பு 5 வாலிபர்களையும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.
- நாட்டு வெடி குண்டு வெடித்ததில் கார் சேதம் அடைந்து இருந்தது.
- வெடிகுண்டு வீசி தப்பிய கும்பல் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
வேளச்சேரி:
பள்ளிக்கரணை அருகே உள்ள ஜல்லடியான் பேட்டை, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அன்சாரி. இவர் வீட்டின் கீழ்பகுதியில் இறைச்சிகடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு அவர் தனது காரை வீட்டின் எதிரே சாலையோரத்தில் நிறுத்தி வைத்து இருந்தார். இந்த நிலையில் அதிகாலை ஒரு மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். இதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து கார் தீப்பற்றியது.
சத்தம் கேட்டு அன்சாரி வீட்டில் இருந்து வெளியே வந்தபோது கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கரணை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நாட்டு வெடி குண்டு வெடித்ததில் கார் சேதம் அடைந்து இருந்தது.
வெடிகுண்டு வீசிய மர்மகும்பல் யார்? என்று தெரியவில்லை. தொழில் போட்டியில் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது முன் விரோதம் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு வீசி தப்பிய கும்பல் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மதுபான பார் ஊழியர் முத்துராஜ் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- கல்லூரி மாணவர் சொக்கலிங்கம், பாலமுருகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
வண்டலூர்:
வண்டலூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது22). இவர் தாம்பரம் சேலையூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். வண்டலூர் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (24). இவர்கள் இருவரும் நண்பர்கள்.
இவர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வண்டலூர் இரணியம்மன் நகரில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அங்கு மதுபாட்டில் வாங்கிய அவர்கள் அதையொட்டி உள்ள மதுபான பாரில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பாரில் நாய்குட்டிகள் சுற்றித்திரிந்தன. அந்த நாய்குட்டிகளை அவர்கள் இருவரும் கொஞ்சினார்கள். பின்னர் அந்த நாய் குட்டிகளை தங்களுடன் எடுத்துச்செல்ல முயன்றனர். அதற்கு பார் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாய் குட்டிகளை எடுத்து செல்லக்கூடாது. அதை விட்டுவிடுங்கள் என்றனர். இதனால் போதையில் இருந்த சொக்கலிங்கம், பாலமுருகன் ஆகியோருக்கும், பார் ஊழியர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறியது.
இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பாரில் இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினார்கள். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி சொக்கலிங்கம், பாலமுருகன் ஆகிய இருவரும் மதுபோதையில் டாஸ்மாக் கடைக்கு சென்றனர். டாஸ்மாக் கடை முன்பு நின்றபடி மதுபான பார் ஊழியர்களை வெளியே வருமாறு கூறி தகராறு செய்தனர். ஆனால் அவர்கள் வெளியே வரவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் டாஸ்மாக் கடை மீது நாட்டு வெடிகுண்டை வீசினார்கள். இதில் டாஸ்மாக் கடையின் கேட் மீது குண்டு விழுந்து வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து மதுபான பார் ஊழியர் முத்துராஜ் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்தார்.
அதன் அடிப்படையில் கல்லூரி மாணவர் சொக்கலிங்கம், பாலமுருகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் செங்கல்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்