என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நகை சிறுசேமிப்பு திட்டம்"
- முருகேசன்-மீனா தம்பதியினர்மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் நேதாஜி சாலையில் ஐஸ்வர்யா தங்க மாளிகை என்ற பெயரில் நகை சிறுசேமிப்பு திட்டங்கள் நடத்தி வந்துள்ளனர்.
- முதலீடு செய்யும் பணத்திற்கு 20 மாத காலத்திற்குள் இருமடங்காக பணம் தரப்படும் என்றும், 2 மாதங்களுக்கு ஒருமுறை அந்த பணத்திற்கான உறுதிச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.
திருச்சி,
திருச்சி விக்னேஷ் அபார்ட்மெண்ட் பகுதியில் வசித்து வந்தவர்கள் முருகேசன்-மீனா தம்பதியினர். இவர்கள் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் நேதாஜி சாலையில் ஐஸ்வர்யா தங்க மாளிகை என்ற பெயரில் நகை சிறுசேமிப்பு திட்டங்கள் நடத்தி வந்துள்ளனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலீடு செய்யும் பணத்திற்கு 20 மாத காலத்திற்குள் இருமடங்காக பணம் தரப்படும் என்றும், 2 மாதங்களுக்கு ஒருமுறை அந்த பணத்திற்கான உறுதிச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.
அதற்கான தொகையினை பணமாகவோ, நகையாகவோ எடுத்துக்கொள்ளலாம் என்று நம்பகமான ஆசை வார்த்தைகளையும் கூறியுள்ளனர். அதனை நம்பி ஏராளமானோர் முதலீடும் செய்துள்ளனர். ஆனால் முதிர்வு காலம் முடிந்த நிலயைில் பணத்தை திருப்பித்தராமல் தம்பதியினர் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர்.
அதன்பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே ஐஸ்வர்யா தங்க நகை மாளிகை என்ற பெயரில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் யாராவது இருந்தால் அவர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் மதுரை தபால்தந்தி நகர் விரிவாக்கம், பார்க்டவுன் பஸ் நிறுத்தம் எதிர்புறம், சங்கரபாண்டியன் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்பேரில் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்