search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்பிள் நிகழ்வு"

    • ஆப்பிள் நிறுவனம் புது ஐபோன் மாடல்களின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
    • புது ஐபோன் வெளியீட்டு நிகழ்வுக்கு ஃபார் அவுட் என ஆப்பிள் நிறுவனம் பெயரிட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 7 ஆம் தேதி சிறப்பு நிகழ்வு நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வு ஃபார் அவுட் என அழைக்கப்படுகிறது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இத்துடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடலும் அறிமுகம் செய்யப்படலாம்.

    2022 ஆண்டிற்கு ஆப்பிள் நிறுவனம் 6.1 இன்ச் ஐபோன் 14, 6.7 இன்ச், 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் அளவுகளில் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஐபோன் 12 அல்லது ஐபோன் 13 மினி மாடல்கள் கணிசமான அளவு விற்பனையாகாத நிலையில், இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் 5.4 இன்ச் அளவில் ஐபோன் 14 மினி மாடலை அறிமுகம் செய்யாது என்றே தகவல் வெளியாகி உள்ளது.


    ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் மேம்பட்ட 48MP பிரைமரி கேமரா, மாத்திரை அளவு கொண்ட பன்ச் ஹோல் கட்-அவுட், ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஐபோன் 14 மாடல்களில் இந்த அம்சங்கள் இடம்பெறாது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல்களும் ஃபார் அவுட் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மேம்பட்ட அம்சங்கள் நிறைந்த ஆப்பிள் வாட்ச் SE, முற்றிலும் ஆப்பிள் வாட்ச் ப்ரோ மாடல்களும் அறிமுகமாகும் என தெரிகிறது. ஆப்பிள் வாட்ச் ப்ரோ மாடலில் பெரிய பாடி, மேம்பட்ட டிசைன் மற்றும் அதிக ரக்கட் பில்டு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஆப்பிள் வாட்ச் மாடல் உடல் வெப்பநிலையை கண்டறியும் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களை தொடர்ந்து புதிய ஐபேட் 10th Gen, ஏர்பாட்ஸ் ப்ரோ 2nd Gen மற்றும் ஆப்பிள் சிலிகான் மேக் ப்ரோ போன்ற சாதனங்கள் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    ×