search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 259980"

    • பள்ளி மாணவர் உள்பட 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார்.

    கோவை,

    கோவை ரத்தின புரியை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 44). இவர் அதே பகுதியில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வரு கிறார். பள்ளிக்கு அவர் சைக்கிளில் சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று வழக்கம் போல அவர் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலை வீடு திரும்பினார்.அப்போது சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து பால கிருஷ்ணன் வெளியே வந்து பார்த்த போது சைக்கிளை காண வில்லை. உடனே அவர் தனது மகளிடம் கேட்டார். அதற்கு அவர் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியதாக கூறினார். சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்க வில்லை.

    பின்னர் இதுகுறித்து பாலகிருஷ்ணன் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் கோவை ரத்தினபுரியை சேர்ந்த 17 வயது சிறுவன், சங்கனூரை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுவன் மற்றும் ரத்தினபுரியை சேர்ந்த மற்றொரு 15 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 3 சிறுவர்களையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் திருடி சென்ற சைக்கிளையும் மீட்டனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    • இந்த 2 சம்பவங்கள் குறித்தும் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • 3 மர்ம நபர்கள் ஒரு வண்டியில் வந்து ரோஷனின் மோட்டார் சைக்கிள் அருகே நிறுத்திவிட்டு, பின்னர் 2 வாகனத்தையும் எடுத்து சென்றனர்.

    குனியமுத்தூர்,

    குனியமுத்தூர் ரைஸ் மில் ரோட்டை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ்(26). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    குனியமுத்தூர் திருவள்ளுவர் நகர் முதல் வீதியை சேர்ந்தவர் ரோஷன் (20). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருகில் இருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் 3 மர்ம நபர்கள் ஒரு வண்டியில் வந்து ரோஷனின் மோட்டார் சைக்கிள் அருகே நிறுத்திவிட்டு, பின்னர் 2 வாகனத்தையும் எடுத்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

    • வெங்கடேசன் தினசரி ஒரு சைக்கிள் திருடுவதை இலக்காக வைத்து கைவரிசை காட்டி வந்துள்ளார்.
    • திருடிய சைக்கிளை குறைந்த விலைக்கு விற்று மதுகுடித்தும், உல்லாசமாக ஊர் சுற்றியும் செலவு செய்து இருக்கிறார்.

    போரூர்:

    சென்னை, அசோக் நகர், மேற்கு மாம்பலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறுத்தி வைக்கப்படும் விலை உயர்ந்த சைக்கிள்கள் அடிக்கடி திருடு போனது.

    இதுகுறித்து போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து அசோக் நகர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சைக்கிள் திருட்டு நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் டிப்-டாப் நபர் ஒருவர் தொடர்ந்து சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மேற்கு மாம்பலம், ரெயில்வே பார்டர் சாலையில் சந்தேகப்படும் படி சைக்கிளில் வந்த டிப்-டாப் நபரிடம் போலீசார் விசாரித்த போது அவர், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்கிற பாபு (53) என்பதும் தொடர்ந்து சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 41 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வெங்கடேசன் தினசரி ஒரு சைக்கிள் திருடுவதை இலக்காக வைத்து கைவரிசை காட்டி வந்துள்ளார். மேலும் திருடிய சைக்கிளை குறைந்த விலைக்கு விற்று மதுகுடித்தும், உல்லாசமாக ஊர் சுற்றியும் செலவு செய்து இருக்கிறார்.

    பறிமுதல் செய்யப்பட்ட சைக்கிள்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். அந்த சைக்கிள்கள் அசோக் நகர் போலீஸ் நிலையம் முன்பு வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அந்த இடம் புதிய சைக்கிள் கடை போல் காட்சி அளிக்கிறது.

    கைதான வெங்கடேசனிடம் இந்த திருட்டில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×