search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலப்பிரச்சினை"

    • நிலத்தில் அமைக்கப்பட்ட வேலியை அகற்றியதாக போலீசார் கடற்கரை கிராமங்களை சேர்ந்த 8 பாதிரியார்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு
    • வழக்கை வாபஸ் பெறக்கோரி இன்று நித்திரவிளை போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம்

    நாகர்கோவில் :

    குமரி மேற்கு மாவட்டம் தூத்தூர் கடற்கரை கிராமத்தில் புனித ஜூட்ஸ் கல்லூரி உள்ளது.

    இக்கல்லூரிக்கு பின்புறம் உள்ள நிலம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஒரு தரப்பினர் அந்த நிலத்தில் வேலி அமைத்தனர். அதனை மற்றொரு தரப்பினர் அகற்றினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

    நிலத்தில் அமைக்கப்பட்ட வேலியை அகற்றியதாக போலீசார் கடற்கரை கிராமங்களை சேர்ந்த 8 பாதிரியார்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தூத்தூர் ஜூட்ஸ் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். வகுப்புகளை புறக்கணித்து மறியலிலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று தூத்தூர் உள்பட அருகில் உள்ள கடற்கரை கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பாதிரியார்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறக்கோரி இன்று நித்திரவிளை போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.

    • பகண்டை கூட்டுரோடு அருகே நிலத்தகராறில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • ரமேஷ் மனைவி அலமேலு, பூஜா, வசந்தா, சுப்பிரமணியன் ஆகியோர் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.

    கள்ளச்குறிச்சி:

    கள்ளச்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு அடுத்த இளையனார்குப்பத்தை சேர்ந்தவர் ராஜவேல். அவரது மனைவி மாலா. இவர் சம்பவத்தன்று தனது நிலத்தை டிராக்டர் மூலம் உழுவதற்கு சென்றார். அவரை அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மனைவி அலமேலு, பூஜா, வசந்தா, சுப்பிரமணியன் ஆகியோர் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். நிலப்பிரச்சினையால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த தகராறு நடந்தது. இது குறித்து இரு தரப்பினரும் பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதில் மாலா கொடுத்த புகாரின் பேரில் அலமேலு, பூஜா, வசந்தா, சுப்பிரமணியன் ஆகியோர் மீதும், ரமேஷ் அலமேலு கொடுத்த புகாரின் பேரில் ராஜவேல், மாலா, அமுதா, சண்முகப்பிரியா ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×