search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகை"

    • ரத்த உறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.
    • ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 25 வயதிற்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

    இது எவ்வளவு தீவிரமானது என்பதைக் காட்டுகிறது. இது பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் காணப்படும். ஆனால் தற்போது 30 மற்றும் 40 வயதுக்குட்பட்ட பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

    பக்கவாதத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று-மூளைக்கு (இஸ்கிமிக்) ரத்தத்தை வழங்கும் பாத்திரங்களில் ரத்தக் கட்டிகளால் ஏற்படுகிறது. பக்கவாதம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் இது மிகவும் பொதுவானது.

    சுமார் 85 சதவீத மக்கள் இந்த வகையைக் கொண்டுள்ளனர். 2-மூளையில் உள்ள ரத்தக் குழாய்களின் சிதைவு மற்றும் ரத்தப்போக்கு ஆகியவற்றால் ஏற்படுகிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 15 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

    உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகைபிடித்தல், மெல்லுதல் ஜர்தா, குட்கா, கைனி, அதிகப்படியான மது அருந்துதல், குடும்பத்தில் பக்கவாதத்தின் முந்தைய வரலாறு ஆகியவை முக்கிய ஆபத்து காரணிகள். ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற சில இதயப் பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்.

    அத்தகையவர்களுக்கு ரத்த உறைவு ஏற்படும் அபாயம் உள்ளது. இவை மூளையின் ரத்த நாளங்களை அடைந்து செயலிழப்பை ஏற்படுத்தும். மறுபுறம் மரபணு இயல்பும் இந்தியர்களை அச்சுறுத்துகிறது.

    மேற்கத்திய நாடுகளை விட நம் நாட்டில் பக்கவாதம் 10 ஆண்டுகளுக்கு முன்பே தாக்குகிறது.

    தற்போது பெரியவர், சிறியவர் என்ற பாகு பாடின்றி பலர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    30 மற்றும் 40 வயதுக்குள் முடங்கிவிட்டால் நிலைமை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. எனவே எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்.

    பக்கவாதத்தின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. இவற்றை அடையாளம் கண்டுகொ ள்வது மிகவும் அவசியம்.

    சிறுமூளையில் பக்கவாதம் ஏற்படும் போது, உடல் கட்டுப்பாட்டை இழந்து தலைச்சுற்றல் ஏற்பட்டு கீழே விழலாம். உங்களுக்கு தூக்கம் வரலாம்.

    வாய் முகத்தில் பக்கவாட்டில் திரும்பும். ஒரு கையின் பலவீனம்.

    பேச்சில் வேறுபாடு, தடுமாற்றம், தடுமாற்றம். இந்த அறிகுறிகள் எதுவும் புறக்கணிக்கப்படக்கூடாது. பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

    சுமார் 30 சதவீத மக்கள் பக்கவாதத்திற்குப் பிறகு முழுமையாக குணமடைகிறார்கள். மற்றவர்களுக்கு ஊனம் ஏற்படுகிறது. சரியாக நடக்க முடியாமல், பேச முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மெல்ல மெல்ல முன்னேறி வருகிறார்கள். மறுவாழ்வு சிகிச்சையானது விரைவான மீட்புக்கு வழிவகுக்கும். இதில் பிசியோதெரபி முக்கியமானது.

    பக்கவாதம் ஏற்படும் போது உடல் வலிமை மட்டுமின்றி தன்னம்பி க்கையும் குறைகிறது. முதலில் கை கால்களை பிடித்து அவர்களை நம்ப வைக்கிறார்கள்.

    ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    உணவில் உப்பைக் குறைக்கவும். நீரிழிவு நோயாளிகள் குளுக்கோஸ் அளவை கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும். கார்போஹைட்ரேட் குறைக்கப்பட வேண்டும். மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

    கொலஸ்ட்ராலையும் குறைக்க வேண்டும். உடற்பயிற்சியும் முக்கியமானது. புகைபிடிப்பதை நிறுத்துங்கள்.

    எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதுபானத்தில் ஈடுபட வேண்டாம். பழக்கம் இருந்தால் வரம்பைப் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விமானம் கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
    • புகை வந்ததற்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று அந்த விமானம் வழக்கம்போல் துயாய்க்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் பயணிகள், பணியாளர்கள் என்று 176 பேர் பயணித்தனர்.

    விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, சரக்கு பெட்டி இருந்த பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனை கவனித்த பணியாளர்கள் உடனடியாக விமானிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விமானத்தை தரையிறக்க கோழிக்கோடு விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை விமானி தொடர்பு கொண்டார்.

    ஆனால் கோழிக்கோடு விமான நிலையத்தில் சில ஓடுபாதைகளில் பணிகள் நடைபெற்று வருவதால், துபாய் விமானத்தை அங்கு உடனடியாக தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

    பின்பு அதிலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்பு விமானத்தில் வந்த புகை கட்டுப்படுத்தப்பட்டது. புகை வந்தது உடனடியாக கவனிக்கப்பட்டு, விமானம் தரையிறக்கப்பட்டதால் பெரிய அளவில் விபத்து நடக்காமல் தவிர்க்கப்பட்டது.

    மேலும் விமானத்தில் இருந்த பயணிகளும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். விமானத்தில் புகை வந்ததற்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கடந்த 20-ந்தேதி திடீரென தீப்பற்றியது.
    • தீ காரணமாக எழுந்த புகையானது மாநகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் ராமையன்பட்டி யில் உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள குப்பைகள் ஒரு சில நேரங்களில் தீப்பிடித்து வருகிறது. இந்நிலையில் ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கடந்த 20-ந்தேதி திடீரென தீப்பற்றியது.

    5 கிலோ மீட்டர்

    அப்போது காற்றின் வேகத்தால் மளமளவென பற்றி எரிந்தது. இதைத்தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் பாளை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். பெரும்பகுதி தீ அணைக்கப்பட்ட நிலையில் தீ காரணமாக எழுந்த புகையானது மாநகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 4 நாட்களாக மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டனர். இன்று 4-வது நாளாக குப்பைகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் கிளறி அதில் தீப்பிடித்திருந்தால் தண்ணீர் பீய்ச்சி அடித்து அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அதேபோல் லாரிகள் மூலம் மணல் கொண்டு வரப்பட்டு அதனை கொட்டும் பணியிலும் ஈடுபட்டனர்.

    இதனால் பெரும்பாலான இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று குறிப்பிட்ட சில இடங்களில் புகை மூட்டம் காணப்பட்டது.  

    • ரெயில் என்ஜின் டிரைவருக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர்.
    • 15 நிமிடம் கால தாமதமாக டபுள் டக்கர் ரெயில் பெங்களூரை நோக்கி புறப்பட்டு சென்றது.

    ஜோலார்பேட்டை:

    சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் ரெயில் இன்று காலை புறப்பட்டு வந்தது. வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம்-குடியாத்தம் இடையே வேகமாக சென்று கொண்டிருந்தது.

    அப்போது ரெயிலில் சி 6 ஏ.சி. பெட்டியின் சக்கரத்தில் இருந்து திடீரென புகை வந்தது. இது சி7 பெட்டிக்கு பரவியது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.

    ரெயில் என்ஜின் டிரைவருக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார்.

    இதுகுறித்து குடியாத்தம் ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது பிரேக் பழுதானதால் சக்கரத்தில் இருந்து புகை வந்தது தெரிந்தது.

    பின்னர் ஊழியர்கள் அதனை சரி செய்தனர். இதனால் 15 நிமிடம் கால தாமதமாக டபுள் டக்கர் ரெயில் பெங்களூரை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. 

    • தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர்.
    • மர்ம ஆசாமி யாரோ ரெயில் பெட்டியில் இருந்த தீயணைப்பான் கருவியை திறந்துவிட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இருந்து வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், புதன்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு மும்பைக்கு தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் இரவு 7.15 மணிக்கு தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. பயணிகள் இறங்கியவுடன் ரெயில் பெட்டிகளை ரெயில்வே ஊழியர்கள் பூட்டினர். அந்த ரெயில் 3-வது நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது.

    இதனை பார்த்த ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ரெயில்வே போலீசார் ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக கருதி அங்கு விரைந்து சென்றனர்.

    இதனை பார்த்த பயணிகளும் பதட்டம் அடைந்து அலறி அடித்து ஓடினர். உடனே தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர்.

    ரெயில் பெட்டி அருகில் சென்று பார்த்த போது, தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைப்பதற்கு ரெயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் தீயணைப்பான் கருவியில் இருந்து புகை வெளியேறியது தெரியவந்தது. இதனால் ரெயில்வே ஊழியர்கள் நிம்மதியடைந்தனர்.

    மர்ம ஆசாமி யாரோ ரெயில் பெட்டியில் இருந்த தீயணைப்பான் கருவியை திறந்துவிட்டுள்ளனர். இதனால் தான் அதிலிருந்து புகை வந்துள்ளது என்பது தெரியவந்தது. தீயணைப்பான் கருவியை திறந்து விட்ட ஆசாமி யார்? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் பெட்டியில் இருந்து திடீரென்று புகை வந்த சம்பவத்தால் புதுவை ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • 2-வது நாளாக இன்றும் தீயை அணைக்கும் பணி தீவிரம்
    • குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் மாநகராட்சி குப்பை கிடங்கு வலம்புரி விளையில் உள்ளது. இங்கு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை வைத்து வருகி றார்கள். இந்த நிலையில் குப்பை கிடங்கில் நேற்று மாலை திடீர் என தீப்பிடித்து எரிந்தது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென்று பரவியது. இதனால் குப்பை கிடங்கு முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

    இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி யில் இரு ந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. இருப்பினும் தீயை கட்டுப்ப டுத்த முடியவில்லை. தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருந்தது.

    இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் மேயர் மகேஷ் நேற்று இரவு வலம்புரிவிளை குப்பை கிடங்கை நேரில் சென்று பார்வையிட்டார். தீயை விரைந்து அணைக்க தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ளபடும் என்று உறுதி அளித்தார்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாகவும் குப்பை கிடங்கில் இருந்து புகை மண்டலங்கள் அதிகளவு வெளியேறி கொண்டு இருக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நச்சுப்பு கையின் காரணமாக குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஒரு சில குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தூர்நாற்றமும் வீசுவதால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்து விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு ள்ளது. வலம்புரிவிளை குப்பை கிடங்கில் உள்ள புகை மண்டலம் வட்டவிளை, இருளப்புரம், இளங்கடை பகுதிகளிலும் சூழ்ந்துள்ள தால் மக்கள் அவதிப்பட்டு உள்ளனர்.

    காற்று வேகமாக வீசுவதால் சுசீந்திரம் வரை புகை மண்டலங்களாக காட்சியளிக்கிறது. தீய ணைப்பு வீரர்கள் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலமாக குப்பைகளை கிளறி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 40 தீயணைப்பு வீரர்கள் அங்கேயே முகாமிட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இன்னும் தீயை கட்டுப்படுத்த 2 நாட்கள் ஆகலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    • பழைய பொருட்களை எரிக்காதீர்கள்
    • புகையில்லா போகியை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொ) ராதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது. தமிழக அரசின் உத்தர வின்படி இந்த ஆண்டு புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் நகராட்சியில் மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்டு ஒன்று முதல் எட்டு வரை ஒரு மண்டலம் 9 முதல் 16வரை ஒரு மண்டலம், 17 முதல் 21 வரை மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு துப்புரவு பணி மேற்பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டு வீடுகளில் சேமிக்கப்படும் தேவையில்லாத பழைய துணிகள், டயர், பயன்படுத்த இயலாத புத்தகம் மற்றும் இதர பயன்படுத்த முடியாத பழைய பொருட்களை எரிககாமல் வீடு தோறும் நகராட்சி மூலம் 7 - ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நகராட்சி வாகனங்களில் சேகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு புகையில்லா போகி உருவாக்குவதற்கு மேற்படி பழைய பொருட்களை நகராட்சி வாகனங்களில் வழங்கி நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். பொதுமக்கள் மேற்படி பழைய பொருட்களை சாலைகளில் வீசி எறிந்தாலும், டயர்களை சாலைகளில் தீ வைத்து கொளுத்தினாலோ, பொது இடங்களில் குப்பைகளை கொட்டினாலோ அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • இன்று காலை திடீரென குடோனில் இருந்து புகை கிளம்பி கொண்டிருந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட சாக்குகள், படுதாக்கள் எரிந்து நாசமாகின.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை புறவழி சாலையில் அரசு நெல் குடோன் செயல்பட்டு வருகிறது.

    இங்கு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் வாங்கி அடுக்கி வைக்கப்படுவது வழக்கம்.

    தற்போது ஏராள மான நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை திடீரென குடோனில் இருந்து புகை கிளம்பி கொண்டிருந்தது.

    இதைப் பார்த்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து சென்று பார்த்தபோது தீ மளமளவன பற்றி எரிந்து கொண்டிருந்தது. சாக்குகள், படுதாக்கள் பற்றி எரிந்து கொண்டிருந்தன.

    இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் மனோ பிரசன்னா உத்திரவு படி நிலைய சிறப்பு அலுவலர் பொய்யாமொழி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இருப்பினும் 100-க்கும் மேற்பட்ட சாக்குகள் ,படுதாக்கள் எரிந்து சேதம் ஆகின. நெல்களில் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்காக கெமிக்கல்வைக்க ப்பட்டிருக்கும்.

    அதில் தண்ணீர் பட்டு தீவிபத்து நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இருப்பினும் தீ விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    ×