search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாப் கிங்ஸ்"

    • ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆனார்.
    • எம்.எஸ். டோனி 18 ஆவது ஓவரில் களமிறங்கினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    சென்னை அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

    ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரிஸ்வி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயின் அலி 15 ரன்களில் ஆட்டமிழக்க எம்.எஸ். டோனி 18 ஆவது ஓவரில் களமிறங்கினார்.

    இன்றைய போட்டியில் 11 பந்துகளை எதிர்கொண்ட எம்.எஸ். டோனி 14 ரன்களை குவித்தார். இதில் ஒரு புண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். கடைசி ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட எம்.எஸ். டோனி இரண்டு ரன்களை ஓட முயற்சித்த போது ரன் அவுட் ஆனார். இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். டோனி முதல் முறையாக தனது விக்கெட்டை இழந்துள்ளார்.

    இதன் காரணமாக சென்னை அணி போட்டி முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்களை குவித்தார்.
    • பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    சென்னை அணிக்கு துவக்க வீரர் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

    ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரிஸ்வி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே டாஸ் வென்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது 10-ஆவது போட்டியில் விளையாடுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இன்றைய போட்டியில் டாஸ் தோற்றதன் மூலம் சென்னை அணி பத்து போட்டிகளில் ஒரே போட்டியில் மட்டுமே டாஸ் வென்றுள்ளது. தொடர்ச்சியாக டாஸ்-இல் தோல்வியை தழுவி வருவது தொடர்பாக சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கருத்து தெரிவித்துள்ளார்.

    அப்போது பேசிய அவர், "எனது டாஸ் சாதனையை பார்த்து எங்களின் அணி வீரர்களில் பெரும்பாலானோர், நான் டாஸ் இழப்பேன் என்று தெரிந்து முதலில் பேட்டிங் ஆட தயாராகி விட்டனர்," என்று தெரிவித்தார். 

    • சென்னை அணி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இதுவரை விளையாடிய ஒன்பது போட்டிகளில் சென்னை அணி ஒரே முறை தான் டாஸ் வென்றிருக்கிறது. டாஸ்-இல் வெற்றி பெறுவது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும் என்று சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்து இருந்தார்.

    டாஸ் வெற்றி பெற பயிற்சி எடுத்தும், சென்னை அணி இன்றைய போட்டியிலும் டாஸ்-இல் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக சென்னை அணி டாஸ்-இல் தோல்வியை தழுவி வருகிறது.

    • பேர்ஸ்டோ 45 பந்தில் சதம் விளாசினார்.
    • ஷஷாங்க் சிங் 23 பந்தில் அரை சதம் விளாசினார்.

    கொல்கத்தா:

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இன்று நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கம் முதல் இறுதி வரை அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். குறிப்பாக தொடக்க வீரர்களான சுனில் நரேன் - சால்ட் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது.

    இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பஞ்சாப் வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர். சாம் கரண் 4 ஓவரில் 60 ரன்களை வீழ்த்தினார்.

    இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங்- பேர்ஸ்டோ களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிரப்சிம்ரன் சிங் 18 பந்தில் அரை சதம் கடந்தார். இவர் 54 ரன்னில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த ரிலீ ரோசோவ் 26 ரன்னில் வெளியேறினார். தொடக்கம் மெதுவாக ஆரம்பித்த பேர்ஸ்டோ பின்னர் அதிரடி காட்டி சதம் விளாசினார். இதனால் கொல்கத்தா அணி 15 ஓவரில் 201 ரன்கள் குவித்தது.

    இதனால் கொல்கத்தா அணிக்கு 5 ஓவரில் 61 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் பேர்ஸ்டோ மற்றும் ஷஷாங்க் சிங் ஜோடி அதிரடியாக விளையாடினர். குறிப்பாக ஷஷாங்க் சிங் ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி சிக்சருமாக மாற்றினார். இதனால் 23 பந்தில் அரை சதம் விளாசினார்.

    பேர்ஸ்டோ 108 ரன்னிலும் ஷஷாங்க் சிங் 68 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    • கொல்கத்தா தரப்பில் சுனில் நரேன் 71 ரன்னும் சால்ட் 75 ரன்களும் குவித்தனர்.
    • சாம் கரண் 4 ஓவரில் 60 ரன்களை வாரி வழங்கினார்.

    கொல்கத்தா:

    10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரேன் - சால்ட் களமிறங்கினர். இருவரும் பஞ்சாப் அணியின் பந்து வீச்சை பஞ்சு பஞ்சாக பறக்கவிட்டனர்.

    இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது. சுனில் நரேன் 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து சிறிது நேரத்தில் சால்ட் 75 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் - ரஸல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய ரஸல் 24 ரன்கள் ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து ஷ்ரேயாஸ் - வெங்கடேஷ் ஜோடி டெத் ஓவரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பஞ்சாப் வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக சாம் கரண் 4 ஓவரில் 60 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

    • இன்றைய போட்டியிலும் ஷிகர் தவான் பங்கேற்கவில்லை. சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார்.
    • பஞ்சாப் அணி 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்றைய போட்டியிலும் ஷிகர் தவான் களம் இறங்கவில்லை. இதனால் சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார்.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    கொல்கத்தா அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 8 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

    • இரு அணிகளும் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி உள்ளன.
    • குஜராத் அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மொஹாலியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் சாம் கர்ரன் மற்றும் பிரப்சிம்ரன் சிங் சுமாரான துவக்கத்தை கொடுத்தனர்.

    இந்த ஜோடி முறையே 20 மற்றும் 35 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. அடுத்து வந்த ரோசோ, ஜிதேஷ் ஷர்மா, லியம் லிவிங்ஸ்டன் முறையே 9, 13 மற்றும் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    போட்டி முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை குவித்தது. குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாய் கிஷோர் நான்கு விக்கெட்டுகளையும், மோகித் சர்மா, நூர் அகமது தலா இரண்டு விக்கெட்டுகளையும் ரஷித் கான் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • இரு அணிகளும் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி உள்ளன.
    • குஜராத் அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மொஹாலியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளும் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி உள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்று போட்டிகளில் வெற்றி நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி, ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. புள்ளிகள் பட்டியலில் இரு அணிகளும் பின்தங்கியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.

    • அசுதோஷ்-சசாங் சிங் ஆகியோரது ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது.
    • இனி வரும் போட்டியில் நெருங்கி வந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    முல்லான்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி 9 ரன்னில் பஞ்சாப்பை தோற்கடித்து 3-வது வெற்றியை பெற்றது.

    முல்லான்பூரில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்தது.

    சூர்யகுமார் யாதவ் 53 பந்தில் 78 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்), ரோகித் சர்மா 25 பந்தில் 36 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), திலக் வர்மா 18 பந்தில் 34 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹர்சல் படேல் 3 விக்கெட்டும், சாம் கரண் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவரில் 183 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இதனால் பஞ்சாப் அணி 9 ரன்னில் தோற்றது.

    அசுதோஷ் சர்மா 28 பந்தில் 61 ரன்னும் (2 பவுண்டரி, 7 சிக்சர்), சசாங்சிங் 25 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். பும்ரா, கோயட்சி தலா 3 விக்கெட்டும், மத்வால், ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் கோபால் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பஞ்சாப் அணி 5-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் சாம் கரண் கூறியதாவது:-

    நாங்கள் நெருங்கி வந்து விட்டோம். அருகாமையில் வந்து தோற்றது ஏமாற்றத்தை அளிக்கிறது. எங்கள் அணிக்கு பரபரப்பான ஆட்டம் பிடித்து போய் விட்டது. அசுதோஷ்-சசாங் சிங் ஆகியோரது ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது. இருவரால் தான் நெருங்கி வந்தோம்.

    இவ்வாறு நெருக்கமாக வந்து தோற்றதால் எங்களுக்கு இதயம் நொறுங்கி விட்டது. இனி வரும் போட்டியில் நெருங்கி வந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம். தோல்வியை தழுவினாலும் எங்களது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு சாம்கரண் கூறியுள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் 3-வது வெற்றியை பெற்றது.இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் பாண்ட்யா கூறியதாவது:-

    இது ஒரு சிறந்த ஆட்டமாகும். ஒவ்வொரு வீரருக்கும் பதட்டம் ஏற்பட்டது. அசுதோசின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது. அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நாங்கள் கடுமையாக போராடி இந்த வெற்றியை பெற்றோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அஷுதோஷ் ஷர்மா அதிரடியாக ஆடி 61 ரன்களை குவித்தார்.
    • பும்ரா மற்றும் கோட்சி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய மும்பை அணிக்கு இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறஹ்கிய ரோகித் சர்மா நிதானமாக விளையாடி 36 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இவருடன் விளையாடிய திலக் வர்மா நிதானமாக ஆடினர். போட்டி முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. மும்பை சார்பில் முறையே ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    கடின இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான சாம் கர்ரன், பிரப்சிம்ரன் சிங் முறையே 6 மற்றும் 0 எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரோசோ மற்றும் லியம் லிவிங்ஸ்டன் மற்றும் ஹர்பிரீத் சிங் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

    இதன் காரணமாக பஞ்சாப் அணி துவக்கத்திலேயே அதிக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய சஷான்க் சிங் சிறப்பாக ஆடி 25 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய அஷுதோஷ் ஷர்மா அதிரடியாக ஆடி 61 ரன்களை குவித்தார். இவருடன் ஆடிய ஹர்பிரீத் சிறப்பாக ஆடினார்.

    19.1 ஓவர்களில் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களை குவித்தது. இதன் மூலம் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை சார்பில் பும்ரா மற்றும் கோட்சி தலா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் மோத்வால் 2 விக்கெட்களையும், ஸ்ரேயஸ் கோபால் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • ரபாடா மற்றும் சாம் கர்ரன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய மும்பை அணிக்கு இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய ரோகித் சர்மா நிதானமாக விளையாடி 36 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இவருடன் விளையாடிய திலக் வர்மா நிதானமாக ஆடினர். போட்டி முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. மும்பை சார்பில் திலக் வர்மா 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பஞ்சாப் சார்பில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் சாம் கர்ரன் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    ×