என் மலர்
நீங்கள் தேடியது "ரகளை"
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகானந்தம் (வயது38). இவர் ஜெயங்கொண்டம் தனியார் டீக்கடை ஒன்றில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் மது போதையில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் கடும் ரகளையில் ஈடுபட்டதுடன் பஸ் வரும் நேரத்தில் சாலை நடுவே படுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கூடுதலாக ரூ.5 மற்றும் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுவதாக போதையில் கத்தி கூச்சலிட்டார். இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நீண்ட நேரம் போராடி அந்த போதை ஆசாமியை சமாதானப்படுத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- இளையராஜா (வயது 45) குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது
- குடிபோதையில் ரகளை செய்து கொண்டிருந்த இளையராஜாவை கைது செய்தார்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் காத்திருப்பு வளாகம் உள்ளது. இங்கு மணலூர்பேட்டை போலீஸ் சரகம் செம்படை கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா (வயது 45) குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து நீதிமன்ற எழுத்தர் சேவியர் ராஜ் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து சென்ற திருக்கோவிலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் குடிபோதையில் ரகளை செய்து கொண்டிருந்த இளையராஜாவை கைது செய்தார்.
- ரெயில்-பஸ்களில் மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
- மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டால் அவர்களுக்கு பெரிய தொகையை அபராதமாக விதிக்க வேண்டும்.
மதுரை
மதுரை மாநகரம் சென்னைக்கு அடுத்து பெரிய நகரமாக விளங்கி வருகிறது. தெற்கு -வடக்கு மாவட்டங்களை இணைக்கும் மையப் பகுதி யாக மதுரை திகழ்கிறது. மதுரைக்கு ரெயில் மற்றும் பஸ்கள் மூலம் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வருகை தருகின்ற னர்.
இந்தநிலையில் மது குடித்துவிட்டு பஸ் மற்றும் ரெயில்களில் பயணம் செய்யும் சில பயணிகள் ரகளையில் ஈடுபடுவதால் அனைத்து பயணிகளும் அவதிப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.
சமீபத்தில் சென்னையில் இருந்து மதுரை வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மது குடித்து வந்த பயணிகள் மோதலில் ஈடுபட்டனர். அவர்களை வேறு வேறு பெட்டிகளில் போலீசார் பிரித்து வைத்த னர். இருந்த போதிலும் போதை அதிகமான ஒரு வாலிபர் மீண்டும் மீண்டும் வேறு பெட்டிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் அவரை ரெயில்வே போலீசார் எச்சரித்தனர். அவரது தொல்லை சில மணிநேரம் நீடித்ததால் ஆத்திரமடைந்த போலீசார் அவரை அடித்து வழிக்கு கொண்டு வந்தனர்.
இதேபோல் நீண்ட தூரம் செல்லும் பஸ்களிலும் பயணிகள் மது குடித்துவிட்டு வந்து மோதலில் ஈடுபடும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. மதுரை யில் இருந்து செல்லும் பஸ்களில் போதையில் பயணம் செய்யும் பயணிகள் அடிக் கடி ரகளையில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது.
இத்தகைய சம்பவங் களால் பாதிக்கப்படும் பயணிகள் பஸ் மற்றும் ரெயில்களில் மது குடித்து விட்டு பயணம் செய்பவர் களை அனுமதிக்கக்கூடாது.
மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டால் அவர்களுக்கு பெரிய தொகையை அபராதமாக விதிக்க வேண்டும் அல்லது சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுகின்ற னர். இதனை நடைமுறைப் படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?
- பிடிப்பட்ட 2 பேரை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
- வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அப்பகுதி மக்கள் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தில் நேற்று ஒருவர் இறந்து விட்டார். இவரது உடலை அடக்கம் செய்வதற்கு இறுதி சடங்கு நடந்தது. இதில் பங்கேற்க வந்தவர்களில் 6 வாலிபர்கள் போதையில் இருந்துள்ளனர்.
இறுதி சடங்கு நடந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டின் தென்னை மரத்தில் இருந்த தேங்காய்களை பறித்தனர். இதனை அங்கிருந்த ஆறுமுகம் தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் அவரை தாக்கினர். இதைதடுக்க வந்த ஆறுமுகத்தின் மகன் சீனிவாசனையும் அவர்கள் தாக்கினர். தொடர்ந்து அப்பகுதியினர் திரண்டு வந்த நிலையில் 6 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து, இரவு 11 மணிக்கு அந்த வாலிபர்கள் மீண்டும் புளியங்குடி பகுதிக்கு பட்டாக்கத்திகளுடன் வந்து, அந்த பகுதியினரை ஆபாசமாக திட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த அப்பாஸ் (வயது 38) என்பவரை ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டினர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அவர்களை பிடிக்க முற்பட்டனர். அதில் 2 பேர் மட்டும் பொதுமக்களிடம் பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிப்பட்ட 2 பேரையும் கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அப்பகுதி மக்கள் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து, கலைந்து போக செய்தனர். கத்திவெட்டில் படுகாயமடைந்த அப்பாசை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் பிடிப்பட்ட 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- போலீசாரிடம் ரகளை செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- பெரியமுத்துவை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
காரியாபட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் போலீசார் திருச்சி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மல்லாங்கிணறு முடியனூரைச் சேர்ந்த பெரிய முத்து என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்தார். போலீசார் அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரை அவதூறாக பேச தொடங்கினார். மேலும் போலீசாரை வாகன சோதனை செய்யவிடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த சாக்கு பையை போலீசார் சோதனையிட முயன்றனர்.
அப்போது அந்த சாக்கு பையை கீழே போட்டுவிட்டு அவர் தப்பி ஓடி விட்டார். அந்த சாக்கு பையில் 27 மது பாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியமுத்துவை தேடி வருகின்றனர்.
- மதுபோதையில் வாலிபர்கள் இருந்ததால் உதவி போலீஸ்சூப்பிரண்டுடன் வந்த போலீசார் அவர்களை எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினர்.
- போதை வாலிபர்கள் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
திருவள்ளூர்:
மதுபோதையில் போதை ஆசாமிகள் செய்யும் ரகளை ஒவ்வொரு ரகமாக இருக்கும். சில நேரங்களில் யாரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் வசமாக சிக்கிக்கொண்டு வாங்கி கட்டி செல்வார்கள்.
இதேபோல் திருவள்ளூர் அருகே போதை வாலிபர்கள் ரோந்து சென்ற உதவி போலீஸ்சூப்பிரண்டிடம் அவரது வாகனத்தில் லிப்ட் கேட்டு சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் விவேகானந்த சுக்லா. இவர் தனது வாகனத்தில் திருப்பாச்சூர் அருேக ரோந்து பணியில் இருந்தார்.
அப்போது சாலையோரத்தில் மதுபோதையில் இருந்த 3 வாலிபர்கள் திடீரென உதவி போலீஸ் சூப்பிரண்டு வந்த வாகனத்தை வழிமறித்தனர். பின்னர் நாங்களும் இந்த வாகனத்தில் வருவோம் லிப்ட் வேண்டும் என்று கேட்டனர்.
மதுபோதையில் வாலிபர்கள் இருந்ததால் உதவி போலீஸ்சூப்பிரண்டுடன் வந்த போலீசார் அவர்களை எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அந்த வாலிபர்கள், போலீசார் உங்கள் நண்பன் என்று சொல்கிறீர்கள்... லிப்ட் கொடுக்க மாட்டீர்களா... என்று கேட்டு ரகளையில் ஈடுபட்டு வாகனத்தில் செல்ல அடம் பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து போதை வாலிபர்கள் 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் பிறையாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. போதை தெளிந்ததும் அவர்களிடம் போலீசார் தங்களது பாணியில் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பொருட்களை அடித்து சேதம்
- சகோதரருக்கு வலை வீச்சு
வாணியம்பாடி:
வாணியம்பாடி பி.ஜே.நேசூ சாலையில் உள்ள ராமநாயக் கன்பேட்டை பகுதியை சேர்ந்த பல் டாக்டர் அறிவர சன் என்பவர் கிளினிக் நடத்தில் வருகிறார். இவரது மனைவி இளவரசியும் பல் டாக்டராவார்.
இந்நிலையில் டாக்டர் அறிவரசனிடம் பல்சிகிச்சை பெற்ற நியூடவுன் பகுதியை சேர்ந்த இந்திராணி (வயது 60) திடீர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.
அறிவரசனின் தவறான சிகிச்சையால் தனது தாய் இந்திராணி இறந்துவிட்டார் என் றும், இதே போல் பலரும் இறந்துவிட்டனர் என இந்தி ராணியின் மகன் ஸ்ரீராம்குமார் வாணியம்பாடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து மாவட்ட மருத்துவ இணை, இயக்குனர் மாரிமுத்து தலைமையில் மருத்துவ குழுவினர் மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டனர். அதில் பல் டாக்டர் அறிவரசன் மீது ஸ்ரீராம்குமார் அளித்த புகார்தவறானது எனவும், பல் டாக்டர் அறிவரசன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கலாம் எனவும் மருத்துவ அறிக் கையை அளித்ததையடுத்து கிளினிக் மீண்டும் செயல்பட தொடங்கியது.
இந்நிலையில் இந்திராணி யின் மகன்கள் யுவராஜ், ஸ்ரீராம்குமார் மற்றும் சிலர் அடிக்கடி பல் கிளினிக்கிற்கு சென்று கிளினிக்கை மூடி- விடுங்கள் என்று மிரட்ட விடுத்து வந்தனர். நேற்று ஸ்ரீராம்குமார் கிளினிக்குள் திடீரென அத்துமீறி நுழைந்து அங்கிருந்த டாக்டர் அறிவசன், அவரது மனைவி டாக்டர் இளவரசி மற்றும் அறிவுரசனின் தாயார் தேன்மொழி ஆகிய 3 பேரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி, பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார்.
மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தினார்.
இதுகுறித்து டாக்டர் அறிவரசன் நகர போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.நகர போலீஸ் இன்ஸ்பெக்ட நாகாராஜ் விசாரணை நடத்தி, ஸ்ரீராம்குமாரை (33) கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். யுவராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
- பொறுமை இழந்த சில பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி ரகளை ஈடுபட்ட வாலிபரை கண்டித்தனர்.
- பேருந்தை முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வாலிபர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பேருந்து பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரம் கல்லாத்தூர் இடையே சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் அந்த பேருந்தை வழி மறித்தார். தனது மோட்டார் சைக்கிளை அந்த பஸ்ஸின் முன்பு குறுக்கே நிறுத்தி அவர் டிரைவரை தகாத வார்த்தைகள் திட்டி ரகளையில் ஈடுபட்டார்.
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் செய்வதறியாமல் தவித்தனர். பின்னர் பொறுமை இழந்த சில பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி ரகளை ஈடுபட்ட வாலிபரை கண்டித்தனர். இதனால் அடி விழக்கூடும் எனக் கருதிய அந்த வாலிபர் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வாலிபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றார். இந்த சம்பவத்தால் அந்த அந்த பேருந்து சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
பேருந்தை முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வாலிபர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பேருந்து பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஓட்டலுக்கு போதையில் சாப்பிட வந்தவர்கள் போலீசார் என்று தெரியவந்தது.
- தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஓட்டலில் மயங்கியவரை ஒருவழியாக எழுப்பினர்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு ரவுண்டானா பகுதியில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது.
சம்பவத்தன்று இரவு காரில் குடிபோதையில் 2 பேர் இந்த ஓட்டலுக்கு சாப்பிட வந்தனர். பின்னர் சாப்பிட்டு விட்டு ஒருவர் ஓட்டலில் இருந்த மேஜை மீது தலைவைத்து போதையில் மயங்கிவிட்டார். மற்றொருவர் அவர்கள் வந்த காரிலேயே தூங்கிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே ஓட்டலுக்கு போதையில் சாப்பிட வந்தவர்கள் போலீசார் என்று தெரியவந்தது.
தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஓட்டலில் மயங்கியவரை ஒருவழியாக எழுப்பினர். ஆனாலும் அவர் ஓட்டலில் இருந்து புறப்படாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். பின்னர் அவரை அங்கிருந்து கிளம்பிசெல்லுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் அவர் நாங்கள் இங்கேயேதான் நிற்போம், எங்கு வேண்டுமானாலும் தூங்குவோம், என்ன பண்ணுவ என்று அநாகரீகமாக நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவங்களை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த வீடியோவில் இருந்த போலீசார் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் சேலம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி, தலைமைக் காவலர் செந்தில்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் 2 பேர் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
- தொலைந்த செல்போனை கண்டுபிடித்து தரும்படி ரோட்டில் உருண்டு புரண்டார்
- கோவில்பாளையம் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்
கோவை,
கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையத்தில் நேற்று மதியம் போலீசார் பணியில் இருந்தனர்.
அப்போது 25 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் போதை தலைக்கேறிய நிலையில் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.
அவர் அங்கு பணியில் இருந்த போலீசா ரிடம் தனது செல்போனை யாரோ பறித்து சென்று விட்டதாக கூறினார்.போலீசார் நீ தற்போது குடி போதையில் இருக்கிறாய். போதை தெளிந்ததும் வா என கூறி வெளியே அனுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் போலீஸ் நிலையம் முன்பு உள்ள ரோட்டில் படுத்து தனது செல்போனை மீட்டு தரும்படி ரகலையில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரப ரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ விசாரணை நடத்தி வருகிறார்.
- போதையில் கலாட்டா செய்த ரவுடி கிஷோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை வேப்பேரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கவுரி. இவர் சூளை குறவன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த ரவுடி கிஷோர் சப்-இன்ஸ்பெக்டர் கவுரியிடம் சென்று ரகளையில் ஈடுபட்டார். மதுபோதையில் சப்-இன்ஸ்பெக்டர் எதிரில் நின்றபடியே அவதூறான வார்த்தைகளை பேசிய அவர் "நான் ஆம்பள... எனக்கு பயமே இல்ல... எத்தன பேர் வந்தாலும் சண்டை செய்வேன்" என்று பேசியபடியே அங்குமிங்கும் செல்கிறார்.
இதனை மாடியில் இருந்து பொதுமக்களில் ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பாக வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ விசாரணை நடத்தி வருகிறார். பி.வகை ரவுடியான கிஷோர் கால்வாய் கிஷோர் என்றும் அழைக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போதையில் கலாட்டா செய்த ரவுடி கிஷோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை கைது செய்து சிறையில் அடைக்க உள்ளனர்.
- போதையில் ஒரு உணவகத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
- நீண்ட நேரமாக போலீசாருக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை உழைப்பாளர் சிலை அருகே நேற்று நள்ளிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மதுபோதையில் தலையில் ரத்தக்காயங்களுடன் வந்த வாலிபர் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து தொந்தரவு செய்தார்.
அவரிடம் போலீசார் விசாரித்த போது அவர் மது போதையில் நிதானமற்ற வகையில் காணப்பட்டார். போதையில் வரும் வழியில் ஒரு உணவகத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த சிலர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த வாலிபருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது.
அவர் சீருடையில் இருந்த போலீசாரிடம் சென்று, தன்னை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். எனவே உடனடியாக போலீசாரை இங்கு வரச்சொல்லுங்கள் என்று கூறி அதிரடி காட்டினார். இதனால் போலீசார் அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் தலையில் ரத்தக்காயத்துடன் இருந்த அந்த வாலிபரை போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி வலியுறுத்தினார்கள். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து நீண்ட நேரமாக போலீசாருக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.
மேலும் போலீசாரை அவர் ஒருமையிலும் பேசினார். பின்னர் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு அந்த நபரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பெறாமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த வாலிபர் யார் என்பது குறித்தும், அந்த வாலிபருக்கு தலையில் எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.