என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீவன பற்றாக்குறை"
- ரூ.80 லட்சத்துக்கு மேல் கால்நடைகள் விற்பனை
- வியாபாரிகள் தகவல்
வேலூர்:
தீவன தட்டுப்பாடு குறைந்து வரும்நிலையில், பொய்கை கால்நடை சந்தைக்கு செவ்வாய்க்கி ழமை கால்நடைகள் வரத்து அதிகரித் திருந்தது. வேலூர் மாவட்டம், பொய் கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கி ழமை நடைபெறும் கால்நடைச் சந் தையில் உள்ளூர் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங் களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற் பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்தச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை வர்த்த கம் நடைபெறும்.
இந்த நிலையில், வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பிப்ரவரி இறுதி வாரத்துக்குப் பிறகு கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதி கரித்து வந்தது. குறிப்பாக, கடந்த ஏப் ரல் மாதத்தில் அதிகபட்சமாக 104.5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப் பம் பதிவாகியிருந்தது. இதனால் ஏற்பட்ட தீவன பற்றாக்குறையால் பொய்கை சந்தையில் கால்நடை வர்த் தகம் கடந்த இரு மாதங்களாகவே சரிந்து காணப்பட்டது.
இந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வேலூர் மாவட் டம் முழுவதும் பரவலாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது.
இதன்காரணமாக தீவன புற்கள் விளைச்சல் ஏற்பட்டதை அடுத்து கடந்த இரு வாரங்களாக பொய்கை சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி, இந்த வாரம் செவ்வாய்க் கிழமைநடைபெற்ற சந்தைக்கு கறவை
மாடுகள், காளைகள், உழவு மாடுகள் என 1,500-க்கும் மேற்பட்ட மாடுகள், 500-க்கும் மேற்பட்ட ஆடுகள். கோழி கள் விற்பனைக்காக கொண்டு வரப் பட்டிருந்தன. அவற்றை வாங்க வியா பாரிகளும், விவசாயிகளும் ஆர்வம் காட்டினர். இதன்காரணமாக, இந்த வாரம் ரூ. 80 லட்சத்துக்கு மேல் கால்ந டைகள் விற்பனை நடைபெற்றிருப்ப தாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- விதைப்பு காலமான புரட்டாசியில் மழை இல்லாமல் வறண்ட வானிலை நிலவியது.
- விவசாயிகள் சோளத்தட்டு, வைக்கோல் போன்றவற்றை வாங்கி இருப்பு வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
குடிமங்கலம் :
புரட்டாசி பட்டத்தில் ஏராளமான விவசாயிகள் மானாவாரி நிலங்களில் சோளத்தட்டு சாகுபடி செய்வர்.இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் பருவ மழை வெளுத்து வாங்கியது. ஆனால் விதைப்பு காலமான புரட்டாசியில் மழை இல்லாமல் வறண்ட வானிலை நிலவியது. புரட்டாசி இறுதி மற்றும் ஐப்பசி துவக்கத்தில் நல்ல மழை பெய்தது.
இதனால் விவசாயிகள் காலம் கடந்து சோளம் சாகுபடி செய்தனர். சோளம் சாகுபடி செய்ததிலிருந்து தொடர்ந்து மழை பெய்தது. மேலும் அறுவடைக்கு முந்தின பருவத்தில் பருவமழை விடைபெற்றது. இதனால் சோளத்தட்டு வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டது. வழக்கமாக மானாவாரியில் சோளம் விதைக்கும் விவசாயிகள் அதை சேமித்து வைத்து ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்துவர்.
தற்பொழுது அறுவடை துவங்கியுள்ளது. அறுவடை செய்யும் சோளப் பயிர்கள் ஆறு மாத தேவையை கூட சமாளிக்க போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்த ஆண்டு கால்நடை தீவனங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இதனை சமாளிக்க பல விவசாயிகள் சோளத்தட்டு, வைக்கோல் போன்றவற்றை வாங்கி இருப்பு வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
- திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழையே அதிக மழைப்பொழிவை தரும்.
- ஆடி மாதத்தில் வறண்ட வானிலை காணப்படும்.
திருப்பூர் :
விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் கணிசமான வருமானம் ஈட்டி வருகின்றனர். மழை குறைவாக பெய்யும் காலங்களில் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டு கால்நடை விவசாயிகள் பெரும் துயரத்தை அனுபவிக்கின்றனர். இந்த ஆண்டு கால்நடை விவசாயிகளுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.
திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழையே அதிக மழைப்பொழிவை தரும். ஆடி மாதத்தில் வறண்ட வானிலை காணப்படும். இதனால், புல்வெளிகள் காய்ந்து பசுந்தீவனங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்.ஆனால் இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக தென்மேற்கு பருவமழை கை கொடுத்ததால் ஆடி மாதத்தில் நல்ல மழை பெய்தது. இது புல்வெளிகளை செழிப்படையச் செய்துள்ளது. கோரை, கொழுக்கட்டை, அருகு போன்ற புல் வகைகள் நன்கு வளர்ந்துள்ளது. தீவன பற்றாக்குறை நீங்கி உள்ளதால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்