search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேன்கனிக்கோட்டை பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை"

    • இரவு முழுவதும் பெய்த மழை இன்றுகாலை வரை நீடித்தது. கனமழை காரணமாக ஓசூரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
    • தேன்கனிக்கோட்டை பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஓசூரில் நேற்றிரவு லேசாக பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக பெய்ய தொடங்கியது.

    இரவு முழுவதும் பெய்த மழை இன்றுகாலை வரை நீடித்தது. கனமழை காரணமாக ஓசூரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

    மழைநீர் தேங்கியதால் ஓசூர் பஸ்நிலையம் குளம்போல் காட்சி அளிக்கிறது.

    இதே போல நகரில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். காலையில் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதே போல் தேன்கனிக்கோட்டை பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் தொடர்ந்து சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    இதனால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஓசூர், தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ×