search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Burglary in 3 locked houses பூட்டியிருந்த"

    • பூட்டியிருந்த 3 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, வெள்ளிப் பொருட்கள், ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    • இதையடுத்து முத்துராஜை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து நகை, பணம் மீட்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்ரா நகர் பகுதியில் கடந்த மாதம் அடுத்தடுத்த தெருக்களில் பூட்டியிருந்த 3 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, வெள்ளிப் பொருட்கள், ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பான புகாரில் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து பரமத்திவேலூர் போலீசார் 2 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் போலீசார் அப்பகுதியில் நடந்த திருட்டு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், பிடிபட்டவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் முத்துராஜ் என்பதும், கடந்த மாதம் பரமத்திவேலூர் சக்ரா நகர் பகுதியில் உள்ள வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டதும், மேலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்ததும் தெரிய வந்தது. மேலும் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இதையடுத்து முத்துராஜை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து நகை, பணம் மீட்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் போலீசாரின் உதவியுடன் கொள்ளையனிடமிருந்து மீட்கப்பட்ட தங்கநகை, வெள்ளிப் பொருட்கள், பணம் உள்ளிட்டவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு பின்பு உரியவர்களிடம் முறையாக ஒப்படைக்கப்படும் என பரமத்திவேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் தெரிவித்துள்ளார்.

    ×