search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கி போட்டி"

    • தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையே காஜாமியான் சுழற்கோப்பை ஆக்கி போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
    • போட்டியினை கல்லூரியின் பொருளாளர் எம்.ஜே.ஜமால் முகமது, கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், கவுரவ இயக்குனருமான முனைவர் கே.என்.அப்துல் காதர் நிகால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    திருச்சி,

    திருச்சி ஜமால் முகமது கல்லூரி உடற்கல்வித்துறையின் சார்பில் ஆண்டு தோறும் தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையே காஜாமியான் சுழற்கோப்பை ஆக்கி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 20-வது ஆண்டாக காஜாமியான் சுழற்கோப்பை ஆக்கி போட்டி நடத்தப்பட்டது.

    கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியினை கல்லூரியின் பொருளாளர் எம்.ஜே.ஜமால் முகமது, கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், கவுரவ இயக்குனருமான முனைவர் கே.என்.அப்துல் காதர் நிகால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் கல்லூரியின் உதவிச் செயலாளர் முனைவர் கே.அப்துஸ் சமது, கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.இஸ்மாயில் முகைதீன், துணை முதல்வர் முனைவர் ஏ.முகமது இப்ராஹிம், உடற்கல்வி இயக்குனர் முனைவர் பி.எஸ்.ஷாயின்ஷா மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் காஜாமியான் சுழற்கோப்பை, இரண்டாவது பரிசாக ரூ.7 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை, மூன்றாவது பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை, நான்காவது பரிசாக ரூ.3 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட உள்ளது.

    முன்னதாக முதல் போட்டியை கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2-0 என்ற கோல் கணக்கில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணியை வென்றது. தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றது.




    ×