search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "80 பேர் கைது"

    • கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    கடலூர்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களை பல மடங்கு உயர்த்தி உள்ளது. அரிசி, தயிர், மோர், வெண்ணை, நெய் ஆகிய உணவுகள் மீது போடப்பட்ட ஜி.எ.ஸ்டி. வரி உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஈம சடங்கிற்கு போடப்பட்ட ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உயிர்காக்கும் மருந்துகளின் மீதான விலையை 10 சதவீதம் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 30 ந்தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் துரை தலைமையில் மாவட்ட துணை செயலாளர் குளோப், மாவட்ட பொருளாளர் பாஸ்கர், நிர்வாகிகள் பன்னீர்செல்வம், குணசேகரன், மாநகர செயலாளர் நாகராஜ், சக்திவேல், மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் திரண்டனர். அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    இதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் இருந்து ஊர்வலமாக ரயில் நிலையத்தை முற்றுகையிட மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பிக்கொண்டு சென்றனர். அப்போது அங்கிருந்து போலீசார் இந்த போராட்டத்திற்கு அனுமதி இல்லை. இதனை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படும் என அறிவுறுத்தினர். ஆனால் அதனை மீறியும் ஊர்வலமாக கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்றனர். இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு சென்ற போது சற்று கால தாமதமாக வந்த சோழன் எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்குவதற்காக ரயில் நிலையத்தில் நின்றது.


    இதனை பார்த்த போராட்டக்காரர்கள் சோழன் எக்ஸ்பிரஸ் முன்பு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தண்டவாளத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசு கண்டித்து கோஷம் இழுத்துக் கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து அந்த திரண்டு இருந்த போலீசார் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. 

    ×