search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்படிகட்டு"

    • பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை இறக்கி விட்ட போலீசார் உறுதிமொழி எடுக்கச்செய்தனர்.
    • இங்கு 1,200 பள்ளிக்கூடங்கள் உள்ளன. லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை விளாங்குடியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் பிரபாகரன் நேற்று பஸ் படிக்கட்டில் நின்று பயணித்த போது தவறி கீழே விழுந்து பலியானார். பரிதாபத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து பஸ் படிகட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணிப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகசாமி உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் சாலைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்லும் மாணவர்களை கீழே இறக்கி விட்டு அறிவுரை கூறினர்.

    மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் இன்று போக்குவரத்து ஆய்வாளர்கள் கணேஷ்ராம், தங்கமணி தலைமையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு அவ்வாறு செல்லக்கூடாது என அறிவுறுத்தினர்.

    மேலும் பஸ் படிகட்டில் பயணம் செய்ய மாட்டோம் என உறுதிமொழி எடுக்க செய்தனர். மாநகரம் முழுவதிலும் உள்ள பஸ் நிறுத்தங்களில் மாணவ-மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்து போலீஸ் அதிகாரி கூறியதாவது:-

    பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்லும் மாணவர்களை தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி அனுப்பி வைக்கிறோம். இருந்தபோதிலும் அவர்கள் திருந்துவதாக தெரியவில்லை. சிலர் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களை அவதூறாக பேசவும் செய்கின்றனர்.

    இதனால் தேவையற்ற பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது என்று மாணவர்களுக்கு பெற்றோர்கள் அறிவுரை வழங்குவது இல்லை. பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்லும் மாணவர்களின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாமா? என்பது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம். பள்ளிக்கூடம் தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் அதிகப்படியான பஸ்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மதுரை மண்டல போக்குவரத்து கழக அதிகாரி இயக்கப்படுகின்றன. இருந்தபோதிலும் பஸ்களில் மாணவ- மாணவிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

    அரசு பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தால் வாகனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும், இல்லையெனில் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு பஸ்சை கொண்டு செல்ல வேண்டும் என்று ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்பவர்களை கண்காணிக்கும் வகையில் 12 அதிகாரிகள் அடங்கிய 2 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மூன்றுமாவடி சந்திப்பில் மோட்டார் வாகன அதிகாரி உலகநாதன் தலைமையிலும், பாத்திமா கல்லூரி சந்திப்பில் முரளி தலைமையிலும், காளவாசல் பகுதியில் ஜாஸ்மின் மேரி தலைமையிலும், தெப்பக்குளம் மற்றும் அவனியாபுரத்தில் சக்திவேல் தலைமையிலும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பள்ளிக்கூடங்கள் திறக்கும்- முடியும் நேரத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக மண்டல போக்குவரத்து கழக தொழில்நுட்ப பிரிவு உயர் அதிகாரி விரைவில், மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அதிகாரி கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம், மதுரை ஆகிய 4 கல்வி மண்டலங்கள் உள்ளன. இங்கு 1,200 பள்ளிக்கூடங்கள் உள்ளன. லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் 950 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் மாணவர்கள் பள்ளிக்கூடம் சென்று திரும்புகின்றனர். பள்ளிக்கூடத்துக்கு வரும் மாணவ-மாணவிகள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு வரக்கூடாது என்று அறிவுறுத்தும் படி அனைத்து பள்ளிகளுக்கும் கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.

    பள்ளிக்கூடங்களில் உள்ள உடற்கல்வி ஆசிரியர் மற்றும் என்.எஸ்.எஸ் மாணவ- மாணவிகளை கண்காணிப்பில் ஈடுபடுத்துவது என்று முடிவு செய்துள்ளோம். பள்ளிக்கூடங்கள் தொடங்கும் மற்றும் முடியும் நேரத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக அனைத்து சாதக அம்சங்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×