என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவி ஸ்ரீமதி மரணம்"
- முதற்கட்டமாக பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும் திறக்கப்பட்டது.
- கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறக்க ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
சென்னை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி மர்ம மரணத்தை தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்தது. இதனால் அந்தப் பள்ளிக்கூடம் மூடப்பட்டது. இந்த பள்ளிக்கூடத்தை திறக்க அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, முதற்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும், பின்னர், 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலும் சோதனை அடிப்படையில் திறக்க அனுமதியளித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளியில் அமைதியான சூழல் நிலவுவதாக கலெக்டர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பள்ளி நிர்வாகம் தரப்பில், எல்.கேஜி. முதல் 4-ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மார்ச் முதல் வாரத்திலிருந்து பள்ளிக்கூடத்தை முழுமையாக திறக்கலாம். மழலை வகுப்புகளுக்கு வரும் குழந்தைகளுடன் பெற்றோரும் பள்ளிக்கு வர அனுமதியளிக்க வேண்டும். பள்ளிக்கூடத்தின் 3-வது தளத்துக்கு வைக்கப்பட்ட சீலை மட்டும் இப்போதைக்கு அகற்றக்கூடாது. நடப்பு கல்வியாண்டு முடியும்வரை பள்ளிக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு தொடர வேண்டும். இந்தப் பள்ளியை திறப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
- எல்.கே.ஜி. முதல் 4ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து 6 வாரங்களுக்கு பின் முடிவெடுக்கப்படும்.
- மாணவர்களின் அச்சத்தை போக்க இரு மருத்துவர்கள் உளவியல் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை தொடர்ந்து பள்ளி முன்பு நடத்தப்பட்ட போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், பள்ளி பேருந்துகள், வகுப்புகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததை தொடர்ந்து பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.
இதற்கிடையே பள்ளி மூடப்பட்டதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாகவும், விரைவாக பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்கவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் பள்ளி வளாகம் சீரமைக்கப்பட்டதால் பள்ளியில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கனியாமூர் பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதித்தனர். எல்.கே.ஜி. முதல் 4ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து 6 வாரங்களுக்கு பின் முடிவெடுக்கப்படும் என்றனர்.
இதனிடையே பள்ளி வரும் மாணவர்களின் அச்சத்தை போக்க இரு மருத்துவர்கள் உளவியல் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
- கிறிஸ்தவ பள்ளியில் படித்த குழந்தை மரணம் எய்தியதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்றதாக அழகிரி குற்றச்சாட்டு
- கள்ளக்குறிச்சி மாணவி விஷயத்தில் பாஜகவினர் ஆர்வம் காட்டாததன் மர்மம் என்ன?
திருவண்ணாமலை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்? என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.
"கனியாமூர் பள்ளி மாணவி மரணத்திற்கு மட்டும் ஏன் அவர்கள் கருத்து சொல்லவில்லை? அல்லது ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? முறையான நீதி விசாரணை வேண்டும் என ஏன் கேட்கவில்லை. எதற்காக அவர்கள் நீதிமன்றம் செல்லவில்லை?
ஒரு கிறிஸ்தவ பள்ளியில் படித்த ஒரு குழந்தை மரணம் எய்தியதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்றார்கள். அந்த குழந்தை விஷயத்தில் அவ்வளவு ஆர்வம் காட்டியவர்கள், கள்ளக்குறிச்சி மாணவி விஷயத்தில் ஆர்வம் காட்டாததன் மர்மம் என்ன? எதற்காக பாஜகவினர் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்? எதற்காக ஆர்எஸ்எஸ் மவுனமாக இருக்கிறது? என்பதை அறிய தமிழ்நாடு காங்கிரஸ் விரும்புகிறது' என்றும் கே.எஸ்.அழகிரி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்