என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாம்பழத்துறையாறு"
- வடகிழக்கு என 2 பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது
- கன்னி பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் 1-ந்தேதி திறக்கப்பட்டது
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என 2 பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்யும்.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்ய வில்லை. இதனால் அணைகளின் நீர்மட்டம், பாசன குளங்களிலும் தண்ணீர் குறைவாகவே காணப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நாளுக்கு நாள் நீர்மட்டம் சரிந்து வருகிறது. ஏற்கனவே கன்னி பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் 1-ந்தேதி திறக்கப்பட்டது.
தொடர்ந்து பாசனத்திற்காக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டமும் சரிந்து காணப்படுகிறது. அணை தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது. நாகர்கோவில் நகருக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையும் கடந்த 2 மாதங்களாக மைனஸ் அடியில் இருந்து வருகிறது. இதனால் அணை குளம் போல் காட்சிய ளிக்கிறது.
அணைகளின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். குடிநீர் பஞ்சமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தலை விரித்து ஆடுகிறது. குமரி மாவட்டத்தில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை 332 மில்லி மீட்டர் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 103.9 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. வழக்கத்தை விட 69 சதவீதம் மழை குறைவாகவே பெய்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையை தண்ணீரை நம்பி விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி பணியில் ஈடுபட்டனர்.
மாவட்டம் முழுவதும் 6000 ஹெக்டேரில் சாகுபடி பணி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது 3000 ஹெக்டேரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது.
பறக்கை, சுசீந்திரம் பகுதிகளில் அறுவடைப் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் கடைமடை பகுதிகளில் இன்னும் நெற்பயிர் கள் தண்ணீர் இன்றிவாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே பொதுப் பணித்துறை அதிகாரிகள் கடைமடை கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 21.75 அடியாக உள்ளது. அணைக்கு 236 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து 706 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. அணை யில் இருந்து வெளி யேற்றப்படும் தண்ணீர் தோவாளை சானல், அனந்தனார் புத்தனார் சானல் மற்றும் பாசன சானல்களில் ஷிப்டுமுறை யில் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 25.90 அடியாக உள்ளது. அணைக்கு 30 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.28 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 11.38 அடியாகவும் உள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் 10.70 அடியாகவும், மாம் பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 12.60 அடியாக உள்ளது.
தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் குமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் கடுமையாக சரிந்தது. மாம்பழத்துறையாறு அணை குறைந்த அளவு தண்ணீருடன் வறண்டு காணப்படுகிறது.
- மழைக்கு 3 வீடுகள் இடிந்தது
- பேச்சிப்பாறையில் இருந்து 1002 கன அடி உபரிநீர் வெளியேற்றம்
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது.
இதனால் மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று இரவும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. நாகர்கோவிலில் நள்ளிரவு 1 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரமாக கொட்டி தீர்த்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மயிலாடி, கொட்டாரம் பகுதிகளிலும் கனமழை பெய்தது.
மாம்பழத்துறையாறு பகுதியில் அதிகபட்சமாக 42 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
பூதப்பாண்டி, கன்னிமார், இரணியல், ஆரல்வாய்மொழி, கோழி போர்விளை, அடையாமடை, குருந்தன் கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறையாறு, கோதை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.இதனால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கான தடை இன்றும் நீடிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழையின் காரணமாக ரப்பர் பால் உற்பத்தி, செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
6500 ெஹக்டரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விவசாயத்திற்கு தேவையான விதைகளை அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள். மாவட்டத்தில் உள்ள பாசன குளங்களும் நிரம்பி வருகிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.83 அடியாக உள்ளது.அணைக்கு 720 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து 1002 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.50 அடியாக உள்ளது.அணைக்கு 699கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.சிற்றாறு1-அணை நீர்மட்டம் 14.69 அடியாகவும், சிற்றாறு2-அணை நீர்மட்டம் 14.79 அடியாகவும், பொய்கை நீர்மட்டம் 16 அடியாகவும் உள்ளது.
மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் இன்று காலை 42 அடியை எட்டியது.முக்கடல் அணையின் நீர்மட்டம் 14.50 அடியாக உள்ளது. தொடர் மழையின் காரணமாக அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் இரண்டு வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்தது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதே போல் கிள்ளியூர் தாலுகாவிலும் ஒரு வீடு இடிந்து விழுந்தது. நேற்று ஒரே நாளில் மழைக்கு 3 வீடுகள் இடிந்து விழுந்து உள்ளது. ஏற்கனவே கடந்த 2 வாரங்களாக பெய்துவரும் மழைக்கு மாவட்டம் முழுவதும் 10-க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 1.8, பெருஞ்சாணி 14.6, சிற்றாறு1-4, சிற்றார்2- 6, பூதப்பாண்டி 12.6, களியல் 6, கன்னிமார் 9.6, கொட்டாரம் 23, குழித்துறை 9, மயிலாடி 27.6, நாகர்கோவில் 23.2, சுருளோடு 18.2, தக்கலை 22, குளச்சல் 12.8, இரணியல் 6.4, பாலமோர் 6.2, மாம்பழத்துறையாறு 42, திற்பரப்பு 3.4, கோழிபோர்விளை7.4, ஆரல்வாய்மொழி 11.4, அடையாமடை 19.4, குருந்தன் கோடு 34.4, முள்ளங்கினாவிளை 12.6, ஆனைக்கிடங்கு 40, முக்கடல் 20.
- அணைகளில் இருந்து 1029 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
- நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.40 அடியாக உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவ தும் கடந்த இரண்டு நாட் களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று மாவட்டம் முழுவ தும் பரவலாக மழை பெய்தது. மாம்பழத்துறையாறு அணைப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 32 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆணைக் கிடங்கு குருந்தன்கோடு, அடையாமடை, தக்கலை, குளச்சல், இரணியல், நாகர்கோவில் பகுதிகளிலும் இரவு விட்டு விட்டு மழை பெய்தது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதிகளி லும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை-4.4, பெருஞ்சாணி-3, சிற்றார்-1-12.6, சிற்றார்-2-22.8, தக்கலை-8.3, குளச்சல்-12.8, இரணியல்-14, பாலமோர்- 9.2, மாம்பழத்துறையாறு- 32, திற்பரப்பு-17.2, கோழிப்போர் விளை-6.2 ஆணைக்கிடங்கு-30.2, அடையாமடை-5, குருந்தன்கோடு-13.8, முள்ளங்கினாவிளை-4.6.
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 42.87 அடியாக உள்ளது. அணைக்கு 676 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 569 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
பெருஞ்சானி அணை நீர்மட்டம் 68.50 அடியாக உள்ளது. அணைக்கு 373 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 310 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் நீர்மட்டம் 11.97 அடியாக உள்ளது. அணைக்கு 137 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1 அணைகளில் இருந்து 1029 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. 3 அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.40 அடியாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்