search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரைத்தல்"

    • ராமநாதபுரம் நகராட்சி சார்பில் விநாயகர் சிலைகளை நொச்சி ஊரணியில் கரைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • இந்து மக்கள் கட்சி, பொதுமக்கள் சார்பில் 300-க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பொதுமக்கள் சார்பில் 300-க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடந்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி பெருமாள் கோவில் வைகை ஆறு, ராமேசுவரம் அக்னி தீர்த்தம் கடற்கரை, மண்டபம் இந்திரா நகர் கடற்கரை, ராமநாதபுரம் நொச்சிவயல் ஊரணி, தேவிபட்டினம் நவபாஷா ணம் கடற்கரை, நரிப்பையூர் கடற்கரை ஆகிய 6 இடங்களில் விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் நொச்சி ஊரணியில் விநாயகர் சிலைகளை எளிதாக கரைக்கும் வகையில் நகராட்சி சார்பில் குறிப்பிட்ட பகுதியில் ஊரணியை ஆழப்படுத்தி சுத்தம் செய்துள்ளனர்.ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி நகர்மன்றத் தலைவர் கார்மேகம் ஆலோசனையின் பேரில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கரைக்க செல்லும் வழித்தடங்களில் சிலைகள் கொண்டு செல்ல இடையூறாக இருக்கும் மரக்கிளைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

    இன்று பரமக்குடி, ராமேசுவரம், பாம்பன் தங்கச்சிமடம், மண்டபம், கீழக்கரை ஆகிய ஊர்களில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது.

    நாளை (வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம், திருப்புல்லாணி, தேவிபட்டினம் ஏர்வாடி ஆகிய பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடைபெறுகிறது.

    ×