என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்"
- யானைகள் பூஜை செய்து விநாயகரை வழிபட்டன.
- யானைகளுக்கு பொங்கல், கரும்பு மற்றும் பல்வேறு பழங்கள் வழங்கப்பட்டன.
ஊட்டி,
நாடுமுழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக ெகாண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானை கள் முகாமிலும் விநாயகா் சதுா்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை யொட்டி அபயாரண்யம் மற்றும் தெப்பக்காடு முகாம்களில் உள்ள வளர்ப்பு யானைகளை பாகன்களை காலையிலேயே குளிப்பாட்டி, அதற்கு அலங்காரம் செய்தனர். பின்னர் யானைகளுக்கு பரிவட்டம் கட்டி, அனைத்து யானைகளையும், முகாமின் நுழைவு வாயிலில் உள்ள விநாயகர் கோவில் முன்பு நிறுத்தி வைத்தனர்
பின்னர் பழங்குடியினரின் பாரம்பரிய இசை முழங்க மசினி, கிருஷ்ணா யானைகள் மணியடித்தபடி கோவிலை 3 முறை சுற்றி வந்து விநாயகரை வணங்கி பூஜை செய்தன.பூஜைகள் முடிந்த பின்னர் யானைகளுக்கு பொங்கல், கரும்பு மற்றும் பல்வேறு பழங்கள் வழங்கப்பட்டன.
இதில் முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநா் வித்யா தலைமையில் வனச்சரக அலுவலா்கள் மற்றும் வன ஊழியா்கள் ஏராளமானேர் கலந்து கொண்டனர்.இதுதவிர சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களும் யானைகள் முகாமில் நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாடத்தில் கலந்து கொண்டனர்.
- ஆசிரியர் மற்றும் குழந்தைகளுக்கு பூஜை பிரசாதங்கள் வழங்கினர்.
- விநாயகர் துதிப்பாடல் மற்றம் விநாயரை பற்றிய நாடகம் நடத்தப்பட்டன.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், கம்ைபநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி பூஜை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
பூஜையை பள்ளித் தாளாளர் வேடியப்பன் மற்றும் சாந்தி வேடியப்பன் முன்னின்று நடத்தினர். பள்ளி நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, ஆசிரியர் மற்றும் குழந்தைகளுக்கு பூஜை பிரசாதங்கள் வழங்கினர்.
இப்பண்டிகையை முன்னிட்டு பேச்சுப்போட்டி, நடனம், சுலோகம் ஒப்புவித்தல், விநாயகர் துதிப்பாடல் மற்றம் விநாயரை பற்றிய நாடகம் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான்இருதயராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினர். இப்பண்டிகையை ஒருங்கிணைப்பாளர்கள் குருமூர்த்தி, புவனேஸ்வரி, மணிமேகலை மற்றும் பிரவீணா ஆகியோர் நடத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்