search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுந்தராபுரம்-மதுக்கரை சாலை"

    • சுந்தராபுரம்-மதுக்கரை சாலை முழுவதும் கடந்த 4 நாட்களாகவே சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
    • வாகனங்கள் அனைத்தும் சேற்றில் மிதந்து, மெல்ல மெல்ல நகர்ந்து செல்லும் சூழ்நிலை காணப்படுகிறது.

    குனியமுத்தூர்:

    கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

    இந்த நிலையில் சுந்தராபுரம்-மதுக்கரை சாலை முழுவதும் கடந்த 4 நாட்களாகவே சேறும், சகதியுமாக காணப்படுகிறது.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    கடந்த சில வரு–டங்களாகவே சுந்தரா புரம் -மதுக்கரை சாலையை பல்வேறு காரணங்களு க்காக தோண்டப்பட்டு அந்த பகுதியே குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    கடந்த 4 நாட்களாக நள்ளிரவில் கன மழை பெய்து வருகிறது. இதனால் இந்த சாலையில் குளம் போல் சேறும், சகதியும் தேங்கி காட்சியளிக்கிறது.

    சுந்தராபுரம்-மதுக்கரை சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலையை கண்ணில் காண முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. எங்கு திரும்பினாலும் சேறும் சகதியும் காணப்படுகிறது.

    வாகனங்கள் அனைத்தும் சேற்றில் மிதந்து, மெல்ல மெல்ல நகர்ந்து செல்லும் சூழ்நிலை காணப்படுகிறது. ஆனால் இதனை சரி செய்ய இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் பாதசாரிகளும் கூட சாலையைக் கடக்க முடியாத நிலையில் உள்ளனர்.

    சாலை முழுவதும் நீரில் மிதப்பதால் எங்கு பள்ளம் இருக்கிறது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து செல்லும் நிலையும் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் ஆட்டோ மற்றும் லாரி டயர் சேற்றில் சிக்கி சாய்ந்திருக்கும் நிலையையும் காணமுடிகிறது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க விட்டால் பொது மக்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்வோம். இவ்வாறு வாகன ஓட்டிகள் தங்களது மனக் குமுறல்களை வெளியிட்டனர்.

    ×