என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரஷ்யா"
- ரஷ்ய அதிபரின் சொத்து விவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
- தி ப்ளெயிங் என்ற விமானத்தில் தங்கத்தில் ஆன கழிவறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்
2012 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய அதிபராக பதவி வகித்து வருபவர் விளாதிமிர் புதின். இவரது ஆண்டு வருமானம் 1.4 லட்சம் டாலர் என்றும் 800 சதுர அடியில் வீடு, 3 கார்கள் மட்டுமே தன்னிடம் இருப்பதாகவும் முன்னதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புதினின் உண்மையான சொத்து மதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதினின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவலின் அடிப்படையில், அவரது மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 16 லட்சம் கோடி ஆகும். கருங்கடலை ஒட்டி அவருக்கு 1.9 லட்சம் சதுர அடியில் மிகப் பெரிய மாளிகை உள்ளது. இதன் மதிப்பு 11 ஆயிரத்து 500 கோடி ஆகும். இந்த மாளிகையை பராமரிப்பதற்கு மட்டும் 2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 6 கோடி) செலவிடப்படுகிறது.
மேலும், 19 பங்களா வீடுகள், 700 கார்கள், 58 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் 6 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் 5 கோடி) மதிப்பில் கைக்கடிகாரங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. தி ப்ளெயிங் என்ற விமானத்தில் தங்கத்தில் ஆன கழிவறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 61 ஆவது சர்வதேச மாநாடு துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றது.
- உக்ரைன் எம்பி கையில் வைத்திருந்த தேசிய கொடியை பறித்துக் கொண்டு, அங்கிருந்து செல்ல முயன்றார்.
உக்ரைன் நாட்டு எம்பியிடம் இருந்து அந்நாட்டு கொடியை பறிக்க முயன்ற ரஷிய பிரதிநிதியால் சர்வதேச மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 61 ஆவது சர்வதேச மாநாடு துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றது. இதில் ரஷியா, உக்ரைன் மட்டுமின்றி அல்பேனியா, அர்மேனியா, அசர்பஜைன் உள்பட உறுப்பு நாடுகள் பங்கேற்றன.
சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட உக்ரைன் எம்பி ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கை தனது நாட்டு கொடியை கையில் வைத்திருந்தார். இதனை பார்த்த ரஷிய பிரதிநிதி உக்ரைன் எம்பி கையில் வைத்திருந்த தேசிய கொடியை பறித்துக் கொண்டு, அங்கிருந்து செல்ல முயன்றார். பின் ரஷிய பிரதிநிதியை துரத்திச் சென்ற உக்ரைன் எம்பி அவர் கையில் வைத்திருந்த உக்ரைன் கொடியை மீண்டும் பறித்துக் கொண்டார்.
மேலும் ரஷிய பிரதிநிதி செயலுக்கு உடனடியாக தக்க பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் எம்பி அவரது முகத்தில் கடுமையாக தாக்கினார். இருவரிடையே ஏற்பட்ட மோதலை அங்கிருந்த மற்ற அதிகாரிகள் தலையிட்டு தடுத்தனர்.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச மாநாடு ஒன்றில் ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் மோதலில் ஈடுபட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- வரும் 7 வரை இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
- வீர, தீர பயிற்சிகளில் இந்திய ராணுவ குழு ஈடுபடுகிறது.
செர்ஜியேவ்ஸ்கி:
பல்முனை ராணுவ உக்தி மற்றும் செயல்திறன் பயிற்சியான வோஸ்டாக் - 2022, ரஷியாவின் கிழக்கு ராணுவ மாவட்ட செர்ஜியேவ்ஸ்கி பயிற்சி மைதானத்தில் நேற்று தொடங்கியுள்ளது. வரும் 7 வரை இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த பயிற்சி பிற ராணுவக் குழுக்கள், பார்வையாளர்களிடையே தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த முகாமில் கோர்க்கா ரைஃபிள்ஸ் படையை சேர்ந்த இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்றுள்ளனர். 7 நாட்களில் கூட்டு களப்பயிற்சிகள், போர் விவாதங்கள் மற்றும் வீர, தீர பயிற்சிகளில் இந்திய ராணுவ குழுவினர் ஈடுபடுகின்றனர்.
ராணுவ அம்சங்கள், செயல் முறைகளை நடைமுறைப்படுத்துதல், புதிய தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவற்றை குறித்து ரஷிய ராணுவத்தினருடன் இந்திய ராணுவ குழுவினர் பகிர்ந்து கொள்வார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்