என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா"
- மகா சாந்திஹோமம், வேத பாராயணம், பூர்ணாஹதி நடைபெற்றது.
- லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மல்லசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள், ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபி ஷேக விழா நடைபெற்றது.
இந்த விழா கடந்த 29-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்த ஹோமம், துர்கா சகஸ்ர நாமம், மகா சாந்திஹோமம், வேத பாராயணம், பூர்ணாஹதி நடைபெற்றது.
இதையடுத்து யாக சாலையில் இருந்து புனித நீர் கலச தீர்த்தம் மற்றும் பால் குடத்தை கோவில் முக்கியஸ்தர்கள் எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம், திருக்குட நன்னீராட்டு செய்து தீபாராதனை காட்டினர்.
பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் சுவாமிக்கு பல்வேறு திரவியங்கள், பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் மற்றும் குல தெய்வத்தார்கள் செய்திருந்தனர்.