என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொள்ளளவு"
- அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது.
- காவிரி மற்றும் கொள்ளிட கரையோர கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.
அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது.
இதனால் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிட கரை ஓரங்களில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
மேலும் மழை வெள்ளத்தால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இலவச அழைப்பு எண்ணான 1077, தொலைபேசி எண்கள் 04362-264114, 264115 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.