என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "1000-க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டது"
- வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டி–ருந்த 30க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள்
- காவிரி ஆற்றில் 89 விநாயகர் சிலைகள்
சேலம்:
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் , பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கபப்ட்டன.
விநாயகர் சதூர்த்தியை யொட்டி, முக்கிய இடங்களில், பா.ஜ.க., இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், இளைஞர் குழுவினர், பொதுமக்களின் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டி–ருந்த 30க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று மேள வாத்தியம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை அருகே கரைக்கப்பட்டது.
வாழப்பாடி பகுதி யில் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருந்த சிலைகள் , வாழப்பாடி டி.எஸ்.பி ஸ்வேதா தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.இந்த ஊர்வலத்தில் சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சண்முகநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் பழனிசாமி, வெங்கடாஜலம், பழனிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வாழப்பாடியில் பண்டிதர் தெருவில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கரைப்பதற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்ற இளைஞர்களோடு, இளம் பெண்களும், உடலில் வண்ணப்பொடிகளை தூவிக்கொண்டு நடனமாடிச் சென்றது, பார்வையாளர்களை வியக்க வைத்தது. இளம் பெண்களின் நடனத்தை ஏராளமானோர் வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் 89 விநாயகர் சிலைகள் நேற்று கரைக்கப்பட்டது.ஜேடர்பாளையம் பரிசல் துறை காவிரி ஆற்றில் சேலம், ஆட்டையாம்பட்டி, திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட 33 விநாயகர் சிலைகளும் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 18 விநாயகர் சிலைகளும், சோழசிராமணி காவிரி ஆற்றில் 8 சிலைகளும் மொத்தம் 59 விநாயகர் சிலைகள் ஜேடர்பாளையம் போலீசார் பாதுகாப்புடன் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
அதே போல் வேலூர் காவிரி ஆற்றில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ௧௩ விநாயகர் சிலைகளும், பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 17விநாயகர் சிலைகள் மொத்தம் 30 விநாயகர் சிலைகள் பொத்தனூர், வெங்கரை, பாண்டமங்கலம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி,கொந்தளம் உள்ளிட்ட பகுதி காவிரி ஆற்றில் நேற்று வேலூர் போலீ சாரின் பாதுகாப்புடன் காவிரி யாற்றில் கரைக்கப்பட்டது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்