search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் முற்றுகை போராட்டம்"

    • சிறுகழஞ்சி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
    • சென்னிமலை-ஊத்துகுளி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், சிறுகழஞ்சி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பல கிராமங்களை ஒன்றிணைக்கும் பிரதான சாலையாக கிழக்கு தோட்டம் புதூர் சாலையை பொது மக்கள் பயன்படுத்தி வரு கின்றனர்.

    இந்நிலையில் 1997-ம் ஆண்டு முதல் தார் சாலை யாக மாற்றப்பட்டு சென்னி மலை யூனியனுக்கு சொந்த மாக பொதுமக்கள் பயன்பா ட்டில் உள்ளது.

    100 நாள் வேலை திட்டத்தின் மூலமாக 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களால் சாலை சுத்தம் செய்யப்பட்டு பள்ளி, கல்லூரி செல்லும் வாக னங்களும் பொது போக்கு வரத்துக்கு பெரிதும் உதவி யாக கிழக்கு தோட்டம் புதூர் சாலை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை ஆக்கி ரமிக்கும் நோக்கில் அனுமதி யின்றி ஆக்கிரமித்து அதன் மீது கம்பி வேலி அமைத்தும் ஆக்கிரமித்துள்ளார்.

    இது தொடர்பாக பலமுறை சிறுக்கழஞ்சி ஊராட்சி தலைவரிடம் பொதுமக்கள் மனு கொடுத்து வந்துள்ள னர். ஊராட்சித் தலைவர் ஜெயக்கொடி மனுவை ஏற்க மறுத்ததோடு புகாருக்கு உள்ளான நபரை அழைத்து விசாரிக்கவில்லை.

    இதனால் பொதுமக்கள் தனிநபருக்கு ஆதரவாகவும், பொதுமக்களுக்கு எதிராகவும் ஊராட்சி தலைவர் செயல்பட்டு வருகிறார் என கூறி சிறுகழஞ்சி கிராம மக்கள் ஒன்று திரண்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இதனால் சென்னிமலை-ஊத்துகுளி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சென்னிமலை போலீசார் மற்றும் சென்னிமலை யூனியன் பி.டி.ஓ. ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் நாளை பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்ய ப்பட்டது. இதை தொடர்ந்து பொது மக்கள் மறியல் போரா ட்டத்தினை கைவிட்டனர்.

    சுமார் ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • பொது குடிநீர் குழாயை ஊராட்சி நிர்வாகம் துண்டித்தது.
    • அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கம்பம்:

    கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குள்ளப்ப கவுண்டன்பட்டி வடக்கு இந்திரா காலனி பொதுமக்கள் பொது குடிநீர் குழாயை மட்டும் பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் குடிநீர் குழாய் பெற வேண்டும் என அறிவிப்பு செய்திருந்தது. ஆனால் அப்பகுதி மக்கள் குடிநீர் குழாய் இணைப்பு பெற ஆர்வம் செலுத்தவில்லை. இதையடுத்து அப்பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாயை ஊராட்சி நிர்வாகம் துண்டித்தது.

    இதனை கண்டித்து ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் அதியர்மணி தலைமையில் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தகவலறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது தற்காலிகமாக பொதுக்குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதே சமயம் பொதுமக்கள் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடி நீர் இணைப்பு பெற வேண்டும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×