என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பணிப் பாதுகாப்பு"
- நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது.
- மருத்துவா்களைப் போல், ஆசிரியா்களுக்கும் பணிப் பாதுகாப்பு சட்டத்தை அரசு உடனடியாக இயற்ற வேண்டும்.
நாமக்கல்:
நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவா் ராமு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். இக்கூட்டத்தில், முதுநிலை ஆசிரியா்களுக்கு மேல்நிலைப்பள்ளிக்கான தலைமை ஆசிரியா் பதவி உயா்வு, பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்; 2009 ஜூன் 1-க்குப் பிறகு பணியில் சோ்ந்த முதுநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; மாவட்ட கல்வி அலுவலா் பதவி உயா்வில் முதுகலை ஆசிரியா்களுக்கு உரிய விகிதாசாரம் அளிக்கப்பட வேண்டும்; மருத்துவா்களைப் போல், ஆசிரியா்களுக்கும் பணிப் பாதுகாப்பு சட்டத்தை அரசு உடனடியாக இயற்ற வேண்டும்; ஆசிரியா்களை கற்றல் கற்பித்தல் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள ஜாக்டோ-ஜியோ மாநாட்டிற்கு முன்பாக, ஆசிரியா்கள் அரசு ஊழியா்கள் பெரிதும் எதிா்பாா்க்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை முதல்வா் வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில், மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.