என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தென்னை மரத்தில் இருந்து"
- சதாம் உசேன் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்து கொண்டிருந்தார்.
- அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார்.
ஈரோடு:
கேரளா மாநிலம் பாலக்காடு, கன்னிமாரி, தண்ணிகூண்டு பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் (30). இவர் ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்தார். செம்பூத்தாம்பாளையத்தில் உள்ள நாய் பண்ணையில் நண்பருடன் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சதாம் உசேன் தென்னை மரத்தில் இளநீர் பறிக்க வேண்டி மரத்தில் ஏறி இளநீர் பறித்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக தென்னை மரத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் தொடை, இடுப்பு, கை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சதாம் உசேன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று ஜோதிநாதன் பாலப்பாளையம் ரைஸ் மில் வீதியில் உள்ள குப்புசாமி என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தை வெட்டுவதற்காக ஏறிக் கொண்டிருந்தார்.
- இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பொம்மநாயக்க ன்பாளையம், காந்தி நகரைச் சேர்ந்தவர் ஜோதிநாதன் (73).
சம்பவத்தன்று ஜோதிநாதன் பாலப்பாளையம் ரைஸ் மில் வீதியில் உள்ள குப்புசாமி என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தை வெட்டுவதற்காக ஏறிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஜோதிநாதன் தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆம்புலன்சில் வந்த மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்த போது ஜோதிநாதன் இறந்தது தெரிய வந்தது.