search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைக்கிள் போட்டி"

    • சைக்கிள் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • 13, 15 மற்றும் 17 வயது ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கிறது

    திருப்பூர் :

    மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நடக்கும் சைக்கிள் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள் விழா வைமுன்னிட்டு நாளை 9-ந்தேதி சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது.

    13, 15 மற்றும் 17 வயது ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கிறது.சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் நம் நாட்டில் தயாரான சாதாரண சைக்கிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆர்வமுள்ளவர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வயது சான்றிதழ், எமிஸ் எண் பெற்று வர வேண்டும்.போட்டி துவங்குமிடத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து பெயர் பதிவு செய்ய வேண்டும். முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய். இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு முறையே 3 ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் தகுதியான மாணவர்களை தேர்வு செய்து அதற்கான ஆவணங்களுடன் போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
    • வரும் 14-ந்தேதி காலை 7 மணிக்கு செங்கல்பட்டு, திருப்போரூர் கூட்ரோடு போலீஸ் பூத் அருகில் தொடங்கி திருக்கழுகுன்றம் வரை சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது.

    காஞ்சிபுரம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டில் 14-ந்தேதியன்று சைக்கிள் போட்டி நடைபெறவுள்ளது. இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்குமாறு இரு மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் போட்டி குறித்து மாவட்ட கலெக்டர் ஆ.ர. ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. வரும் 14-ந்தேதி காலை 7 மணிக்கு செங்கல்பட்டு, திருப்போரூர் கூட்ரோடு போலீஸ் பூத் அருகில் தொடங்கி திருக்கழுகுன்றம் வரை இந்தப் போட்டி நடைபெற உள்ளது.

    இதில் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ, மாணவியர்களுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. மாணவியர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. மாணவியர்களுக்கு 15 கி.மீ. தூரமும் போட்டி நடத்தப்பட உள்ளது.

    இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ - மாணவியர்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். வருகிற 13-ந்தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 வீதமும், 4 முதல் 10 இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250-ம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். 14-ந்தேதி போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு போட்டி நடத்தப்படும் இடத்துக்கு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 74017 03481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரத்தில் நடக்கவுள்ள சைக்கிள் போட்டி குறித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சியில் சைக்கிள் போட்டி வருகிற 15-ந்தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு காஞ்சிபுரம், பழைய ரெயில் நிலையம் அருகில் உள்ள சி.எஸ்.ஐ. கல்லறை அருகில் தொடங்கி வையாவூர் சாலை வழியாக கரூர் வரை நடைபெறும்.

    இதில் பங்கேற்கவுள்ள மாணவ-மாணவிகள் பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து சான்றிதழ் பெற்று வர வேண்டும். வருகிற 14-ந் தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7401703481 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் சைக்கிள் போட்டி 10 -ந்தேதி நடைபெறுகிறது.
    • வயதுச் சான்றினை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்று வருதல் வேண்டும்.

    கடலூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 15- ந்தேதி பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கு நடத்தப்படும் சைக்கிள் போட்டி வருகிற 10 -ந்தேதி காலை 7 மணிக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி நடைபெறும்.

    வயதுச் சான்றினை பள்ளித் தலைமை ஆசிரி யரிடம் இருந்து பெற்று வருதல் வேண்டும். இதற் கான நுழைவுப் படிவத்தி னை மாணவர்களுக்கு தனி யாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் கொண்டு வருதல் வேண்டும். போட்டி களில் கலந்து கொள்ள பய ணக்கட்ட ணம், தினப்படி வழங்கப்பட மாட்டாது. ஆனால் முதல் 10 இட ங்களில் வெற்றி பெறு வோருக்கு பரிசுகளும், சான்றி தழ்களும் வழங்கப்ப டும். போட்டிகளில் கலந்து கொள்வோர் சாதாரண சைக்கிள் தாங்களே கொண்டு வரு தல்வேண்டும். போட்டி களில் கலந்து கொள்வோர் போட்டி தொடங்குவதற்கு 1 மணி நேரம் முன்னரே வருகை தந்து, போட்டி நடைபெறும் இடத்தில் உரிய சான்றுகளை வழங்கி, பதிவு எண் பெற்று, தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். போட்டியின்போது ஏற்படும் விபத்து அல்லது அசம்பா விதங்களுக்கு பங்கு கொள்ளும் நபரே பொறுப் பேற்க வேண்டும்.

    இதற்கான எழுத்து மூல மான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலு வல ரிடம் ஒப்படைத்த பின்னரே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். எனவே மாணவ-மாணவி கள் மிகவும் பொறுப்பு டன் நடந்து கொள்ள வேண்டும். போட்டி யில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் தங்கள் பெயர்களை 9- ந்தேதி மாலை 5 மணிக்குள் அண்ணா விளையாட்டு அரங்க த்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பால சுப்ர மணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளார்.

    ×