search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருங்கைக்காய் விலை உயர்வு"

    • வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு முருங்கைக்காய் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை ஆகிறது.
    • வரத்து குறைவால் பீன்ஸ், அவரைக்காய் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தேனி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருநெல்வேலி, மும்பை, ஐதராபாத், அகமதாபாத் ஆகிய இடங்களில் இருந்து முருங்கைக்காய் விற்பனைக்கு வருவது வழக்கம்.

    கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் மழையால் தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வரும் முருங்கைக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மட்டுமே முருங்கைக் காய் விற்பனைக்கு வருகிறது.

    தினசரி 1500 மூட்டைகள் வரை விற்பனைக்கு குவிந்து வரும் முருங்கைக்காய் இன்று 400 மூட்டைகளாக குறைந்தது. இதனால் முருங்கைக்காய் விலை உயர்ந்து உள்ளது.

    கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் தற்போது 2 மடங்காக விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.150-க்கு விற்கப்படுகிறது.வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு முருங்கைக்காய் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை ஆகிறது.

    இதேபோல் வரத்து குறைவால் பீன்ஸ், அவரைக்காய் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்று மொத்த விற்பனையில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.150-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • முருங்கைக்காய் வருடம் முழுவதும் கிடைக்கும் வகையில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • மேச்சேரி பகுதியில் இருந்து வரும் முருங்கைக்காய் தருமபுரி மாவட்ட மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

    தருமபுரி,

    தமிழர்களின் அனைத்து வைபவங்களிலும், பாரம்பரிய உணவிலும் முக்கிய அங்கம் வகிப்பது முருங்கை க்காய். பெரும்பாலும் முருங்கைக்காய் வருடம் முழுவதும் கிடைக்கும் வகையில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளான, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பென்னாகரம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டுமே முருங்கைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளிலும் வீட்டிற்கு ஒரு மரம் என முருங்கை வளர்க்கப்படுகிறது.

    தற்போது தருமபுரி மாவட்டத்தில் முருங்கை சீசன் இல்லாததால் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் இருந்தும், மேட்டூர் மேச்சேரி பகுதியில் இருந்து வரும் முருங்கைக்காய் தருமபுரி மாவட்ட மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

    தற்பொழுது விளைச்சல் குறைவால் தருமபுரி மாவட்டத்திற்கு முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளது. அதனால் 30 ரூபாயிலிருந்து 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்போது தருமபுரி உழவர் சந்தையில் 60 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்டில் 75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ×