search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் வெள்ளம்"

    • விருதுநகரில் சொக்கநாதர்-மீனாட்சி கோவில் தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
    • தெற்குரத வீதிகளில் தேர் அசைந்தாடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    விருதுநகர்

    விருதுநகரில் பழமை வாய்ந்த சொக்கநாதர்-மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆவணி பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை, மாலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்து வீதிஉலா வந்தனர்.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட திருத்தே ரில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தி கோஷம் முழங்க பெண்கள் உள்பட திரளானோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    விருதுநகர் நகராட்சி தலைவர் மாதவன், துணைத்தலைவர் தனலட்சுமி, இந்து சமய உதவி ஆணையர் வளர்மதி, கோவில் அதிகாரி லட்சுமணன், முன்னாள் தக்கார் ரத்தினகுமார், நிர்வாக அறக்கட்டளை தலைவர் ராம்தாஸ் உள்ளிட்டோர் தேைர வடம்பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் மேலரதவீதி மெயின் பஜார், தெற்குரத வீதிகளில் தேர் அசைந்தாடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் அ.தி.மு.க. செயலாளர் முகமது நயினார், முன்னாள் ஆவின் தலைவர் முகமது எகியா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர்கள் சித்ரகலா, மாரியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×