search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியாறு அணை நீர்மட்டம்"

    • 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.
    • தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யததால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டு ள்ளது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை ப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி யில் 14707 ஏக்கர் நிலத்தில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டு ள்ளது. அவ்வ ப்போது கண்ணாமூச்சி காட்டும் மழை ஏமாற்றி வருவதால் அணையின் நீர்மட்டம் 119.35 அடியாக குறைந்து ள்ளது. 95 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.56 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 69.70 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • கேரளாவில் தாமதமாக தொடங்கியதால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது.
    • மழை படிப்படியாக குறைந்து தற்போது முற்றிலும் நின்றுவிட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து குறைந்தது.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் தாமதமாக தொடங்கியதால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையினால் அணையின் நீர்மட்டம் 115 அடியில் இருந்து 120 அடியாக கிடுகிடுவென உயர்ந்தது.

    இதனால் முல்லைபெரியாறு அணை நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதன்பிறகு மழை படிப்படியாக குறைந்து தற்போது முற்றிலும் நின்றுவிட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து குறைந்தது.

    நீர்மட்டம்

    இன்றுகாலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.95 அடியாக உள்ளது. வரத்து 301 கனஅடி, திறப்பு 400 கனஅடி, இருப்பு 2619 மி.கனஅடி.

    வைகை அணையின் நீர்மட்டம் 50.10 அடி, வரத்து 36 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 2005 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 79.31 அடியாகவும் உள்ளது.

    • முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வறண்ட வானிலையே நிலவுகிறது.
    • நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் தேக்கடி ஏரியும் வறண்டு வருகிறது.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வறண்ட வானிலையே நிலவுகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. பருவமழையின் போது 142 அடிவரை உயர்ந்த நீர்மட்டம் தற்போது வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 115.90 அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. அணையின் இருப்பு 1889 மி.கனஅடியாக உள்ளது.

    நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் தேக்கடி ஏரியும் வறண்டு வருகிறது. இதனால் ஏரிக்குள் மூழ்கிஇருந்த மரங்கள் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை கைகொடுத்தால்மட்டுமே மீண்டும் அணையின் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 54.09 அடியாக உள்ளது. அணைக்கு 14 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.60 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 59.77 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 1.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது
    • இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.15 அடியாக உள்ளது. 511 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருேக கேரள எல்லைப்பகுதியில் அமை ந்துள்ள முல்லைப்பெரி யாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் மதுரை, தேனி மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக பருவமழை கைகொடுத்த தால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து இரு போக நெல்சாகுபடி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்றது. இந்த ஆண்டும் தொடர்ந்து பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    இந்த நிலையில் தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 387 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் 142 அடியை எட்டுவதில் தாமதம் ஆகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.15 அடியாக உள்ளது. 511 கன அடி நீர் வெளியேற்ற ப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 67.26 அடியாக உள்ளது. 650 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்தி ற்காக 1719 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.45 அடியாக உள்ளது. 65 கன அடி நீர் வருகிறது. 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 34 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • ரூல்கர்வ் முறைப்படி அணையில் இருந்து கேரளாவுக்கு உபரி நீர் திறப்பதை தவிர்க்க தமிழக பகுதிக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையில் தேக்கப்பட்டது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 137.35 அடியாக உள்ளது. வரத்து 2497 கன அடியாகவும், திறப்பு 1867 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 6458 மி.கன அடியாக உள்ளது.

    152 அடி உயரம் உள்ள முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கிகொள்ள வும், பேபி அணையை பலப்படுத்திய பின்பு 152 அடி வரை தண்ணீைர தேக்கிக் கொள்ளவும் கடந்த 2014-ம் ஆண்டு மே 7ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தர விட்டது. அதே ஆண்டில் நவம்பர் 21, 2015-ல் டிசம்பர் 7, 2018ல் ஆகஸ்ட் 16 ஆகிய தேதிகளில் அணையின் நீர்மட்டம் 142 அடிக்கு தேக்கப்பட்டது.

    இந்நிலையில் கேரள அரசு கிளப்பிய சர்ச்சையால் ரூல்கர்வ் முறையை மத்திய நீர் வள ஆணையம் அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் பலத்த மழை மற்றும் வெள்ள ப்பெருக்கு காலத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறை நீர்தேக்கும் அளவுக்கு கால நிர்ணய அட்டவணை தயார் செய்யப்பட்டது.

    அதன்படி செப்டம்பர் 1ந் தேதி முதல் 10ந் தேதி வரை 140.90 அடி வரையும், செப்டம்பர் 11ந் தேதி முதல் 20ந் தேதி வரை 142 அடி வரையிலும் தண்ணீர் தேக்க அனுமதி க்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 21ந் தேதியில் இருந்து அணையின் நீர்மட்டத்தை படிப்படியாக குறைத்து நவம்பர் 30ந் தேதிக்கு பின்னர் மீண்டும் 142 அடி வரை தண்ணீர் தேக்கவும் அனுமதிக்கப்பட்டு ள்ளது.

    கடந்த ஆகஸ்ட் 5ந் ேததி பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.95 அடியாக இருந்தபோது அணையில் இருந்து கேரள பகுதிக்கு உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் ரூல்கர்வ் முறைப்படி அணையில் இருந்து கேரளாவுக்கு உபரி நீர் திறப்பதை தவிர்க்க தமிழக பகுதிக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையில் தேக்கப்பட்டது.

    தற்போது அணையின் நீர்மட்டம் 137 அடிைய கடந்துள்ளதால் செப்டம்பர் 10ந் தேதி வரை 140.90 அடியாக தேக்க நடவடிக்கை எடுக்கவும் அதனைத் ெதாடர்ந்து 142 அடி வரை ேதக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 70.70 அடியாக உள்ளது. வரத்து 2220 கன அடி. திறப்பு 2360 கன அடி இருப்பு 6013 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து 460 கனஅடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடி. வரத்து 111 கனஅடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 22, தேக்கடி 9.2, உத்தமபாளையம் 1.2, வீரபாண்டி 3.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ×