என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோவில் கும்பாபிஷேம்"
- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
- அதை தொடர்ந்து மகா அபிஷேகம், மகா அலங்காரம், தச தரிசனம், தசதானம், மகா தீபாராதனை நடைபெற்றது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 6-ந் தேதி கணபதி ஹோமம், பவானி நதியில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் மூல மந்திர ஹோமமும் நடை பெற்றது.
7-ந் தேதி 2-ம் கால யாக பூஜையும் மகாபூர்ண குதியும், தீபாராதனையும், அதைத் தொடர்ந்து 3-ம் காலயாக பூஜை அஷ்ட பந்தன மருந்து சான்றுதல் நிகழ்ச்சி ஆகியவை நடை பெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை 8.15 மணி அளவில் நடைபெற்றது. இதில் கோபுரகலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபி ஷேகத்தை நடத்தி வைத்தனர்.
அதை தொடர்ந்து மகா அபிஷேகம், மகா அலங்காரம், தச தரிசனம், தசதானம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் கலிங்கியம், கோபி, அவ்வையார் பாளையம், நல்ல கவுண்டன்பாளையம், கரட்டடிபாளையம் உள்பட பல கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர்.
பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.