என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிவசக்தி வித்யாலயா பள்ளி"
- பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் அடுத்த பொடியனூரில் இயங்கி வரும் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
- பூஜையை மெருகூட்டும் வகையில் 4 அணி மாணவர்கள் இந்தியாவின் 4 திசைகளிலும் முக்கிய நகரங்களின் வரலாற்று சின்னங்களை தனித்தனியே அவற்றின் தனித்துவத்தை விளக்கும் விதமாக செய்து காட்சிப்படுத்தினர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் அடுத்த பொடியனூரில் இயங்கி வரும் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பூஜையை மெருகூட்டும் வகையில் பள்ளியில் உள்ள லோட்டஸ், மார்னிங் குளோரி, ரைசிங் டைஸி, சன்பிளவர் எனும் 4 அணி மாணவர்களும் இந்தியாவின் 4 திசைகளிலும் முக்கிய நகரங்களின் வரலாற்று சின்னங்களை தனித்தனியே அவற்றின் தனித்துவத்தை விளக்கும் விதமாக செய்து காட்சிப்படுத்தினர். மார்னிங் குளோரி அணி தென்னிந்தியாவையும், சன்பிளவர் அணி மேற்கு இந்தியாவையும், லோட்டஸ் அணி கிழக்கு இந்தியாவையும், ரைசிங் டைஸி அணி வட இந்தியாவையும் அதனதன் வரலாற்றுச்சின்னங்கள் உடன் நேர்த்தியாக உருவாக்கியிருந்தனர்.
மேலும் வரலாற்று சின்னங்கள் தோன்றிய விதம், காலம் அவற்றின் சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றை பள்ளியின் சக மாணவர்களுக்கும், கொலுவை காண வந்த பெற்றோர்களுக்கும் விளக்கி காட்டினர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரசாதங்களை தயார் செய்து, மலர்களால் அலங்கரித்து பூஜைகள் செய்யப்பட்டன.
9 நாட்கள் சிறப்பு பூஜையுடன் கூடிய வழிபாடு நடைபெற்ற நிலையில் 10-வது நாளான விஜயதசமி அன்று வாழை இலையில் பச்சரிசி, மஞ்சள் கொண்டு "அன்னை மடியில் ஆரம்பக்கல்வி விழா" நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் நித்யா தினகரன், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.
- மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த பூக்களால் அத்தப்பூ கோலம் இட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- ஆதிலா, ஜெப்ரின் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
தென்காசி:
பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானூர் பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.சி. பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கேரள பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.
மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த பூக்களால் அத்தப்பூ கோலம் இட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஓணம் வரலாறு குறித்து மாணவி வர்ஷா பேசினார். பேபிஜெனிகா ஓணம் குறித்த வினாடி-வினா நிகழ்ச்சியை மாணவர்களுக்கு நடத்தினார். மாணவிகள் ஆதிலா, ஜெப்ரின் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் சேர்ந்து முதல்வர் நித்யா தினகரன் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்