என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லிஸ் ட்ரஸ்"
- இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
- அப்போது ராணி எலிசபெத் மறைவுக்கு அவர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
புதுடெல்லி:
இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது ராணி எலிசபெத் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரசும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது லிஸ் ட்ரஸ் பிரதமராக தேர்வானதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இங்கிலாந்தின் வர்த்தகத் துறை மந்திரியாகவும், வெளியுறவுத் துறை மந்திரியாகவும் பதவி வகித்த லிஸ் ட்ரஸ், அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதற்கு ஆற்றிய பங்களிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதியளித்தனர்.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை அடுத்து அரச குடும்பத்திற்கும், இங்கிலாந்து மக்களுக்கும் இந்திய மக்கள் சார்பில் பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.