search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழங்க கேட்டு"

    • சித்தோடு அடுத்த கனிமாகாடு தந்தை பெரியார் நகரை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது குறைகள் குறித்து கலெக்டரிடம் மனுக்களை வழங்கினர்.

    அப்போது சித்தோடு அடுத்த கனிமாகாடு தந்தை பெரியார் நகரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் திடீரென அமர்ந்து தர்ணா போராட்ட–த்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியதாவது:

    நாங்கள் மேலே குறிப்பிட ப்பட்டுள்ள முகவரியில் 5 வருடங்களுக்கு மேலாக ஆதிதிராவிடர் நலத் துறைக்கு சொந்தமான காலி இடத்தில் குடிசை அமைத்து குடியிருந்து வருகிறோம். நாங்கள் பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும் எங்கள் மனு மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ஒரே இடத்திற்கு 3 நபர்களுக்கு பட்டா வழங்கியுள்ளார். சொந்த வீடு வைத்திருப்ப வர்களுக்கே பட்டா வழங்கியுள்ளார். நாங்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம்.

    இந்நிலையில் தனி தாசில்தார் பயனாளிகள் தேர்வு செய்வதில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்கிறார். எனவே இது தொடர்பாக தனி தாசில்தார் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தொடர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கலெக்டர் வந்து எங்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டால் மட்டுமே நாங்கள் போராட்டத்தை கைவிட்டு செல்வோம் என்று போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×