search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன ஓட்டிகள் சிரமம்"

    • இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • தெருவிளக்கு அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை.

    திருவொற்றியூர்:

    மணலி அருகே உள்ள சடையங்குப்பம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் வடக்கே கொசஸ்தலை ஆற்றின் உபரிக்கால்வாய், தெற்கே புழல் உபரி கால்வாய், கிழக்கே பக்கிங்காம் கால்வாய், ஊருக்குள் சடையங்குப்பம் ஏரி என சுற்றியும் நீர் நிலைகள் சூழ்ந்துள்ளது.

    பருவமழையின் போது புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும் போது அந்த தண்ணீர் கால்வாய் வழியாக ஆமுல்லை வாயல், கொசப்பூர் சடையங்குப்பம் ஆகிய பகுதிகளை கடந்து எண்ணூரில் உள்ள முகத்து வார ஆற்றில் கலக்கும்.

    இவ்வாறு கால்வாய் வழியாக பெருக்கெடுத்து வரும் உபரிநீர் சடையங்குப்பம் பகுதிகளில் உள்ள பர்மா நகர், இருளர் காலனி போன்ற பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து விடும். இதனால் அங்குள்ள மக்கள் வெளியே வர முடியாமல் தவிப்பது தொடர்ந்து நீடித்து வந்தது.

    இதைத்தொடர்ந்து மழைக்காலத்தில் சடையங்குப்பம் பகுதியில் உள்ள மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க கடந்த 2008-ம் ஆண்டு மறைந்த கே.பி.பி.சாமி அமைச்சராக இருந்தபோது பர்மா நகர், இருளர் காலனி அருகே அன்றைய திட்ட மதிப்பீட்டின் படி ரூ.19 கோடி செலவில் கால்வாய் மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.

    ஆனால் இந்த பணி பல்வேறு காரணங்களால் நத்தை வேகத்தில் நடை பெற்றதால் பர்மா நகர் இருளர் காலனியில் வசிக்கும் மாணவ, மா ணவிகள், தொழிலாளர்கள், முதியவர்கள் ஆகியோர் பாலத்தை கடந்து செல்ல சிரமப்பட்டு வந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு பெரு வெள்ளத்திற்கு பின்னர் இந்த மேம்பாலப்பணி வேகம் எடுத்தது.

    இதைத்தொடர்ந்து 16 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற மேம்பாலம் பணி தற்போது 90 சதவீதம் முடிந்து உள்ளது.

    ஆனால் மேம்பாலத்தில் தெரு விளக்குகள் உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. இருப்பினும் வாகன ஓட்டிகள் இந்த பாலம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே மேம்பாலம் வழியாக இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மின்விளக்கு இல்லாததால் இருட்டான இந்த பகுதியை நோட்டமிட்டு வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    எனவே மேம்பாலத்தில் உடனடியாக தெருவிளக்குகள் பொருத்தி மேம்பாலத்தை முறையாக திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

    • சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
    • நடந்து செல்லும் பாதசாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அன்னூர்

    அன்னூர் பஸ் நிலையம் அருகே 2 நால்ரோடுகள் உள்ளன. இந்த சாலையானது கோவை, திருப்பூர், மேட்டுப் பாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.

    தினமும் இந்த சாலையின் வழியாக 2 மற்றும் 4 சக்கரம், கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இதனால் தினசரி இந்த சாலையின் மார்கமாக சென்று வரும் வாகனங்கள் எண்ணிக்கை குறைந்தபட்சம் 5 ஆயிரத்தை கடக்கும். ஆனால் இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகள் தவிழ்ந்து தவிழ்ந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருவோர் இந்த குழிகளின் மூலம் வரும் புழுதியில் சிக்கி கீழே விழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது மட்டுமல்லாமல் இந்த சாலை வழியாக நடந்து செல்லும் பாதசாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இதே பகுதியில் காவல்துறையினருக்கு முறையாக நிழற்குடை இல்லாததாலும், வாகனங்களை திசை திருப்பி விடுவதற்கு பல்வேறு சிரமங்கள் நிலவி வருகின்றன. எனவே இந்த இரு இடங்களில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைத்து வாகனங்களை திட்டமிட்டபடி வழி பிரித்து அனுப்ப சிக்னல் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மட்டும் இல்லாமல் சமூக நல ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    ×