search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி20"

    • இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
    • இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.


    நாட்டு நாட்டு பாடல் (ஆர்.ஆர்.ஆர்.)

    'நாட்டு நாட்டு' பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்ததற்கு அதன் நடனமும் ஒரு காரணமாகும். ஜூனியர் என்.டி.ஆரும் ராம் சரணும் போட்டி போட்டு ஆடிய இந்த பாடலுக்கு அதே ஸ்டெப்புகளை போட்டு ரீல்ஸ்களை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பகிர்ந்தனர். 'நாட்டு நாட்டு' பாடலுக்கு தென்கொரியாவிலும் அதிக வரவேற்பு கிடைத்தது.


    நாட்டு நாட்டு பாடல் (ஆர்.ஆர்.ஆர்.)

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியாவிற்கான தென் கொரிய தூதர் ஜாங் ஜே போக், ஆர்.ஆர்.ஆர். படத்தின் கதாநாயகன் ராம் சரணுடன் மேடையில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • ஜி20 தலைவர் பதவியை நமது நாடு பெற்றிருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த ஒரு அங்கீகாரம்.
    • ஜி20 பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நான் கலந்து கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலக அரங்கில் வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஜி20 அமைப்பு நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, அ.தி.மு.க. சார்பாக எனது நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பிரதமரின் கடின உழைப்பால், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் உயர்மட்ட பிரமுகர்களுடன் நல்லுறவைப் பேணி, இந்தியாவின் நற்பெயரை உயர்த்தியதன் காரணமாக, ஜி20ன் தலைமைப் பொறுப்பு சாத்தியமானது. இது 130 கோடி இந்தியர்களை தலைநிமிரச் செய்துள்ளது.

    ஜி20 தலைவர் பதவியை நமது நாடு பெற்றிருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் ஆகும். மேலும் ஜி20 தலைமைப் பொறுப்பு என்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டிய அளவுக்கு பெருமைக்குரியதாகும்.

    பிரதமர் தலைமையில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில், ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற உள்ள ஜி20 பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நான் கலந்து கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது.
    • தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு நம் வசம் இருக்கும்.

    இதற்கிடையே, ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நன்றி. உங்கள் மதிப்புமிக்க ஆதரவு இந்தியாவின் ஜி20 தலைமை பதவிக்கு பலமாக இருக்கும். ஒரு சிறந்த உலகை படைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், ஐரோப்பிய கவுன்சில் தலைவரான சார்லஸ் மைக்கேலுக்கும் பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

    • ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது.
    • இந்தியாவின் ஜி20 தலைவர் பதவிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்தார்.

    பாரிஸ்:

    இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இதையடுத்து, ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு நம் வசம் இருக்கும்.

    இந்நிலையில், ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு பிரான்ஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒரு பூமி. ஒரு குடும்பம். ஒரு எதிர்காலம். ஜி20 தலைவர் பதவியை இந்தியா கைப்பற்றியது! எனது நண்பர் நரேந்திர மோடி, உலகில் சமாதானத்தை உருவாக்கிட, அமைதியைக் கட்டியெழுப்ப இன்னும் நிலையான உலகைக் கொண்டு வந்திட எங்களை ஒன்றிணைப்பார் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 அன்று டெல்லியில் நடைபெற உள்ளது
    • தலைவர் பதவியில் இருக்கும் நாடு, ஜி20 அமைப்பில் இல்லாத சில நாடுகளையும் விருந்தினர்களாக அழைப்பது வழக்கம்

    புதுடெல்லி:

    உலகின் முக்கியமான வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களை கொண்ட நாடுகள் கொண்ட கூட்டமைப்பு ஜி20 என்பது என அழைக்கப்படுகிறது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் தலைவர் பதவியை ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் பதவி வகித்து வருகின்றன.

    அந்த வகையில் வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதிவரை இந்தியா தலைமை பொறுப்பை ஏற்க உள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் 200 ஜி20 கூட்டங்களை இந்தியா நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசாங்கத் தலைவர்கள் மட்டத்திலான, ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 அன்று புதுடெல்லியில் நடைபெற உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜி20 தலைவர் பதவியில் இருக்கும் நாடு, ஜி20 உறுப்பு நாடுகளுடன் ஜி20 அமைப்பில் இல்லாத சில நாடுகளையும், சில சர்வதேச அமைப்புகளையும் அதன் ஜி20 கூட்டங்களுக்கு விருந்தினர்களாக அழைக்கும் பாரம்பரியம் உள்ளது.

    அதன்படி, ஜி20 தலைவர் பதவியில் இருக்கும் இந்தியா ஜி20 கூட்டங்களுக்கு, வங்கதேசம், எகிப்து, மொரீஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளை விருந்தினர் நாடுகளாக அழைக்கிறது. மேலும், ஐஎஸ்ஏ (சர்வதேச சோலார் அலையன்ஸ்), சிடிஆர்ஐ (பேரழிவு தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி) மற்றும் ஏடிபி (ஆசிய வளர்ச்சி வங்கி) ஆகிய அமைப்புகளையும் ஜி20 கூட்டங்களுக்கு விருந்தினர்களாக இந்தியா அழைக்கிறது.

    ஜி20 தலைவர் பதவியில் இருக்கும் இந்தியா தலைமையிலான ஜி20 கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் கல்வி, வர்த்தகம், திறன், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா, காலநிலை நிதி, பொருளாதாரம், உலகளாவிய உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, பசுமை ஹைட்ரஜன், பேரழிவு ஆபத்து குறைப்பு, வளர்ச்சி ஒத்துழைப்பு, பொருளாதார குற்றங்களுக்கு எதிரான போராட்டம் மற்றும் பலதரப்பு சீர்திருத்தங்கள் ஆகியவை முக்கிய பகுதிகளாக விவாதிக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×