search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே சுரங்கப்பாதை"

    • ஹிட்டாச்சி எந்திரம் மூலமாக மணல் தோண்டி அகற்றம்
    • ரெயில்வே கேட்டை 4 மாதம் மூடி வைத்திருந்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவர்கள்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே ஊட்டு வாழ்மடம் கருப்புக் கோட்டை, இலுப்பையடி போன்ற கிராமங்கள் உள்ளன. இங்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் உள்ள வர்கள் ஊட்டுவாழ்மடம் அருகே உள்ள ரெயில்வே கோட்டை கடந்து தான் நாகர்கோவிலுக்கு வந்தனர். இந்த ரெயில்வே கேட் தினமும் 40 முதல் 50 தடவை மூடப்படுவதால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவி கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். அவசர சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரிக்கு செல்பவர்களும் இந்த கேட்டில் சிக்கி கஷ்டப்பட்டு வந்தனர்.

    எனவே இந்த பகுதியில் சுரங்கப்பாதையில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை யடுத்து ஊட்டுவாழ்மடம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பணி களை மேற்கொள்வதற்காக அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டை 4 மாதங்கள் மூடப்படும். எனவே பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.

    ரெயில்வே கேட்டை 4 மாதம் மூடி வைத்திருந்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவர்கள். 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும். எனவே தற்போது உள்ள ரெயில்வே கேட்ட அருகே தற்காலிக ரெயில்வே கேட் அமைத்து தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று ஊட்டுவாழ் மடம் பகுதியில் தற்காலிக ரெயில்வே கேட் அமைப்ப தற்கான பணிகள் நடந்தது. தற்பொழுது அந்த பகுதியில் தற்காலிக ரெயில்வே கேட் அமைக்கப்பட்டதையடுத்து சுரங்கப்பாதை அமைக்கப் பட உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதைத்தொ டர்ந்து சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் ஜே.சி.பி., ஹிட்டாச்சி எந்திரங்கள் மூலமாக மணல் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த சுரங்கப்பாதை 8 மீட்டர் நீளத்திலும் 4.5 மீட்டர் உயரத்திலும் அமைக் கப்படுகிறது. 80 மீட்டர் நீளம் கொண்டதாகும்.இந்த சுரங்கப்பாதை பாதைக்குள் மழை காலத்தில் தண்ணீர் தேங்காத வகை யில் அமைக்கவும் பஸ்கள் உள்பட கனரக வாகனங்கள் செல்லும் வகையிலும் அமைக்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. பகலில் போதிய வெளிச்சமாக இருக்கும் வகையில் சுரங் கப்பாதை அமைக்கப்படு கிறது. 2 புறங்களிலும் வேகத் தடை அமைக்கப்படு கிறது.

    இந்த சுரங்கப்பாதை பணியை 6 மாத காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள் ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னை குரோம்பேட்டை ராதாநகரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • ராதாநகர் சுரங்கப்பாதையால் மாநகர பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பல குடியிருப்பு பகுதிகள் தீவுபோல துண்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை குரோம்பேட்டை ராதாநகரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இதையடுத்து இந்த வழியாக சென்ற மாநகர போக்குவரத்து கழக பஸ் நிறுத்தப்பட்டது.

    இதன் காரணமாக தாம்பரம் மாநகராட்சியின் 2 மற்றும் 3 ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இங்கு ராதாநகர், கணபதிபுரம், பாரதிபுரம், ஜமீன் ராயப்பேட்டை, செந்தில்நகர், சூர்யா அவென்யூ, போஸ்டல் காலனி, ஏ.ஜி.எஸ். காலனி, நெமிலிச்சேரி, மாருதி அவென்யூ ஆகிய பகுதிகள் உள்ளன.

    ராதாநகர்-அருள்முருகன் நந்தவனம் நகர் இடையே சுமார் 3 கிலோ மீட்டருக்குள் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் இங்கு வசிக்கும் அனைவருமே ஆட்டோக்களையே நம்பி உள்ளனர்.

    இதனால் போக்குவரத்துக்கு அதிக தொகை செலவிட வேண்டிய நிலையில் உள்ளனர். குறிப்பாக நெமிலிச்சேரியில் இருந்து குரோம்பேட்டை ராஜாநகர் லெவல் கிராசிங்கை அடைய ஆட்டோ கட்டணம் ரூ.200 வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    மேலும் குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதை மிகவும் இலகுவாக இருப்பதால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அந்த பகுதி களில் வசிக்கும் பொது மக்களிடையே ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    ராதாநகர் சுரங்கப்பாதையால் மாநகர பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பல குடியிருப்பு பகுதிகள் தீவுபோல துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு மினி பஸ் மட்டும் மேடவாக்கம்-குரோம்பேட்டை இடையே நெமிலிச்சேரி வழியாக இயக்கப்படுகிறது.

    ஆனால் அது எப்போதாவது மட்டுமே வருகிறது. அந்த பஸ் சுற்றுப்பாதையில் செல்வதால் அதிக நேரமாகிறது. ஆட்டோக்கள் மிகவும் அதிகமாக கட்டணம் வசூலிக்கின்றன. எனவே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடித்து மாநகர பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • நூற்றுக்கணக்கான கிராமங்களில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர் .
    • கீழ்நிலையாக கட்டப்பட்டுள்ள பாலத்தில் மழை நீர் வடிகால் அமைக்கப்படவில்லை.

    உடுமலை :

    உடுமலை அடுத்துள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி கணேசபுரம் பகுதியில் உள்ள ெரயில்வே சுரங்கபாதை வழியாக கண்ணமநாயக்கனூர், மருள்பட்டி , அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உட்பட நூற்றுக்கணக்கான கிராமங்களில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர் . இப்பகுதி மக்கள் உடுமலை வந்தடைய முக்கிய சாலையாக ெரயில்வே தண்டவாளத்தின் கீழ் உள்ள பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். கீழ்நிலையாக கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் சரியான மழை நீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக இன்று ஒரு வாரம் ஆகியும் தேங்கியுள்ள மழை நீர் குளம் போல் காட்சி அளிக்கிறது . தற்போது தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் அப்படியே உள்ளதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த வழியை பயன்படுத்தி வரும் மக்கள் அனைவரும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆகையால் சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×