search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளையதளம்"

    • மதுரை மாவட்டத்தில் பிரதமர் கிசான் திட்ட நிதி உதவிக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பித்து இருந்த பலர் ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண்ணை முறையாக இணையதளத்தில் பதிவு செய்யவில்லை.

    மதுரை

    மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு சிறு-குறு விவசாயிகள் பலன் பெறும் வகையில் பிரதமர் கவுரவ ஊக்கத்தொகை (பிரதமர் கிஷான்) என்ற திட்டத்தை அறிவித்தது. இதன்படி 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்து இருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 2.15 லட்சம் விவசாயிகள், இதற்காக விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1.26 லட்சம் பேருக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் சிலர் போலி பட்டா-சிட்டா உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து உதவித்தொகை பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது 10 ஆயிரம் பேர் போலி ஆவணங்கள் வாயிலாக உதவித்தொகை பெறுவது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து

    மதுரை மாவட்டத்தில் 11 ஆயிரம் விவசாயிகளின் பெயர், பிரதமர் கிசான் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு, நடப்பாண்டுக்கான 6000 ரூபாய் தரப்பட வேண்டும். ஆனால் அந்தத் தொகை இதுவரை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. எனவே மதுரை மாவட்டத்தில் 'பிரதமர் கிசான்' திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக வேளாண் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "மதுரை மாவட்டத்தில் பிரதமர் கிஷான் திட்டத்து க்காக விண்ணப்பித்து இருந்த பலர் ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண்ணை முறையாக இணையதளத்தில் பதிவு செய்யவில்லை. எனவே அவர்கள் மேற்கண்ட விவரங்களை பதிவு செய்யும் வகையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் கிஷான் திட்ட இணையதளத்தில் அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களை பதிவு செய்த பிறகு, அன்னாரின் வங்கி கணக்குகளில் தலா 6000 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவித்தார்.

    ×