search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்"

    • முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த 25 -ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
    • நகராட்சி மேற்கு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சியில் உள்ள 8 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த 25 -ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கென ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பணியாளரை நியமித்து குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நகராட்சி மேற்கு நடுநிலைப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவை சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார். இதில் தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், வார்டு செயலாளர்கள் தங்கவேலு, பாட்டத்தூர் ராமலிங்கம், ஆசிரியை முத்துமாரி, ஹரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் வழங்கப்படுகிறது.
    • செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

    குண்டடம் :

    தமிழ்நாட்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் என்.காஞ்சிபுரம் மற்றும் ஜோதியம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளிகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

    திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நகர்புறம் மற்றும் கிராமப் பகுதிகளில் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திங்கட்கிழமையன்று சேமியா உப்புமா - காய்கறி சாம்பாரும், செவ்வாய்க்கிழமை ரவா-காய்கறி கிச்சடியும், புதன்கிழமை வெண்பொங்கல்- காய்கறி சாம்பாரும், வியாழக்கிழமை சேமியா உப்புமா -காய்கறி சாம்பாரும், வெள்ளிக்கிழமை கோதுமை ரவா - காய்கறி சாம்பாரும் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். 

    ×