என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பங்கேற்க விண்ணப்பிக்கலாம்"
- அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது.
- இதில், ‘2047-ல் இந்தியா ஒரு பார்வை’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதலாம்.
ஈரோடு, செப். 18-
ஈரோடு முதுநிலை அஞ்சலக கண்காணி ப்பாளர் கோபாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது. இதில், '2047-ல் இந்தியா ஒரு பார்வை' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதலாம்.
போட்டிகள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என பங்கேற்கலாம். இரு பிரிவினரும் இன்லாண்ட் லெட்டர், என்வலப் லெட்டரில் ஏதாவது ஒன்றில் கடிதம் எழுதலாம். என்வல பிரிவில், 'ஏ4' அளவு வெள்ளை தாளில் 1,000 வார்த்தைகளுக்கு மிகாமலும், இன்லாண்ட் லெட்டர் பிரிவில் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் கடிதம் எழுதி அனுப்ப வேண்டும்.
கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டும் ஏற்கப்படும். எழுதப்பட்ட கடிதத்தை 'முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை –600 002' என்ற முகவரிக்கு, 'Dai Akhar' அஞ்சல் துறை கடித போட்டி–2022–23 என குறிப்பிட்டு அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் வழங்கலாம். கடிதங்களை அக்டோபர் 31-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 பரிசாக தலா 25,000, 10,000, 5,000 ரூபாய், தேசிய அளவில் வெற்றி பெறும் கடிதங்களில் முதல் 3 பரிசாக 50,000, 25,000, 10,000 ரூபாய் வழங்கப்படும்.
போட்டியாளர்கள் தங்கள் கடிதத்தில் 2022 ஜனவரி, 1-ன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அல்லது 18 வயதுக்கு மேற்உடையவர் என்ற சான்று இணைத்து அனுப்ப வேண்டும்.
மாநில அளவில் பரிசு பெறும் 3 கடிதங்களின் விபரம் வரும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி அறிவிக்க ப்படும். பின், தேசிய அளவில் பரிசு பெறும் கடிதம் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.