search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாமியார்"

    • சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையிலிருந்து 2 மனைவிகளுடன் தெலுங்கானாவிற்கு வந்தார்.
    • சந்தோஷ் தன்னை மகா விஷ்ணுவாகவும், தனது மனைவிகளை ஸ்ரீதேவி, பூதேவி எனவும் கூறினார்

    சாமியார்கள் பலர் பொதுமக்களை ஏமாற்ற பல்வேறு விதமான வேடங்களில் வாக்கு சொல்லும் சம்பவங்கள் ஏராளம்.

    ஆனால் நானே மகாவிஷ்ணு.... நானே பாண்டுரங்கன்.... எனக் கூறிக்கொண்டு மகாவிஷ்ணு வேடத்திலேயே பொதுமக்களை ஏமாற்றி தெலுங்கானாவை ஒரு கலக்கு கலக்கி உள்ளார் திருவண்ணாமலையை சேர்ந்த போலி சாமியார் சந்தோஷ் குமார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவருக்கு 2 மனைவிகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    போலி சாமியரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையிலிருந்து 2 மனைவிகளுடன் தெலுங்கானாவிற்கு வந்தார்.

    அப்போது சந்தோஷ் தன்னை மகா விஷ்ணுவாகவும், தனது மனைவிகளை ஸ்ரீதேவி, பூதேவி எனவும் கூறினார். மக்களை காக்க மனித உருவில் வந்த கடவுள் என தன்னை சந்திக்க வருபவர்களிடம் கூறினார்.

    மேலும் 5 தலைகள் கொண்ட பாம்பு போன்று கட்டில் அமைத்து அதில் விஷ்ணுவை போல் படுத்துக் கொண்டு தனது 2 மனைவிகள் கால் அமுத்தி விடுவது போன்றும், திருப்பதி ஏழுமலையான் போன்று வேடம் அணிந்தும் நான் கடவுள் என கூறி வந்தார்.

    சுவாமிஜியின் மகிமையால் வாய் பேச முடியாத பலர் பேசவும், நடக்க முடியாதவர்கள் நடக்கவும் முடிந்தது என சுற்றுவட்டார கிராம மக்களிடையே சிலர் தகவல் பரப்பினார்கள். இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்தது.

    சந்தோஷ் சுவாமியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கொடிதொட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சந்தோஷ் சுவாமியை அங்கிருந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஆவேசமான சாமியார் நானே மகாவிஷ்ணு.... நானே பாண்டுரங்கன்.... என கத்தினார். போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.

    சித்தர்களின் பூமியான திருவண்ணாமலையில் ஏராளமான சாமியார்கள் உள்ளனர். அதில் ஒரு சிலர் பொதுமக்களை எளிதில் கவர வேண்டும் என்பதற்காக பல்வேறு கோமாளி வேலைகளில் ஈடுபட்டு காமெடி சாமியார்களாக மாறி உள்ளனர்.

    அந்த வரிசையில் தற்போது போலி சாமியார் சந்தோஷ் குமார் இடம் பிடித்துள்ளார்.

    மகாவிஷ்ணு வேடத்தில் 2 மனைவிகளை காலடியில் அமர வைத்துக் கொண்டு இருக்கும் படங்கள் வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் சினிமா பாடல்கள் பின்னணியில் காமெடியாக பரவ விட்டுள்ளனர்.

    இந்த வீடியோ படங்கள் திருவண்ணாமலை பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவங்க வேற குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு... மொத்தமும் திருவண்ணாமலை பக்கம் இருந்தே வருவீங்களா... எங்கள பாத்தா என்ன வேற மாதிரி தெரியுதா என சமூக வலைதளங்களில் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.

    தெலுங்கானாவை கலக்கிய போலி சாமியார் தற்போது காமெடி போர்வையில் திருவண்ணாமலையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    • போலீசார் ராம் சங்கர் தாஸ்-க்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது.
    • ராம் சங்கர் தாஸ், தான் பயன்படுத்தி வந்த ஆடையை கயிறாக்கி, அதில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

    அயோத்தியை சேர்ந்த 28 வயதான பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நரசிம்மா கோயிலில் பூசாரியாக இருந்து வந்த ராம் சங்கர் தாஸ், போலீசார் தனக்கு தொல்லை கொடுத்ததாலேயே, இந்த முடிவை எடுத்ததாக கூறியிருக்கிறார்.

    கடந்த ஜனவரி மாதம் 80 வயது முதியவர் ராம் சரன் தாஸ் காணாமல் போன வழக்கில் போலீசார் ராம் சங்கர் தாஸ் மீது சில தினங்களுக்கு முன்பு தான் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் ராம் சங்கர் தாஸ்-க்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து ராம் சங்கர் தாஸ் இரண்டு நாட்களாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார்.

    இதனால் ராம் சங்கர் தாஸ்-ஐ தேடிய போலீசார், அவரது அறையை திறந்து பார்த்தனர். அப்போது ராம் சங்கர் தாஸ் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது. ராம் சங்கர் தாஸ், தான் பயன்படுத்தி வந்த ஆடையை கயிறாக்கி, அதில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

    மேலும் தற்கொலையை ஃபேஸ்புக்கில் லைவ் செய்திருக்கிறார். ஃபேஸ்புக் லைவ் வீடியோவில், ராம் சங்கர் தாஸ், ராய்கஞ்ச் போலீஸ் அவுட்போஸ்ட் மற்றும் கான்ஸ்டபில் மீது குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து கோட்வாலி காவல் நிலைய அதிகாரி மனோஜ் சர்மா கூறும் போது, "பூசாரி ராம் சங்கர் தாஸ் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். போதை பழக்கம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவர் போலீசார் மீது வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்," என்று தெரிவித்தார்.

    மேலும், இரண்டு நாட்களாக விசாரணைக்கு ராம் சங்கர் தாஸ் ஆஜராகவில்லை. இதன் காரணமாக அவரது அறைக்குள் சென்றோம். அங்கு அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை துவங்கி நடைபெற்று வருகிறது, என்று அவர் தெரிவித்தார்.

    • போதையில் கடைகளை அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சாமியார் பொதுமக்களையும் கிரிவலம் செல்லும் பக்தர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டினார்.

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

    கிரிவலம் செல்லும் பக்தர்களின் முன்னிலையில் விற்கப்படுவதாகவும் கூறப்படும் நிலையில் இன்று சாமியார் ஒருவர் கஞ்சா போதை தலைக்கேறி அங்கிருந்து நடைபாதை கடைகளை அடித்து நொறுக்கினார்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அவரை பிடித்து கை, கால்களை கட்டிபோட்டனர்.

    இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவர் பொதுமக்களையும் கிரிவலம் செல்லும் பக்தர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனைகளை கட்டி வருவதாகவும் மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா போதை தலைக்கேறிய லாரி டிரைவர்ஒருவர் ஆடைகளை கலைந்து கிரிவலம் செல்லும் பக்தர்கள் முன் ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் தற்போது சாமியார் ஒருவர் போதையில் கடைகளை அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பாஸ்கரானந்தாவின் ஆசிரமம் இடித்து தள்ளப்பட்டது தொடர்பாக பாஸ்கர் ஆனந்தா பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
    • ஆன்மீகவாதியை ரோட்டில் நிற்க வைத்து அழ வைக்காதீர்கள் என அழுதபடி பேசினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் கோவையைச் சேர்ந்த பாஸ்கரானந்தா என்பவர் ஆசிரமம் வைத்து நடத்தி வருகிறார். பார்ப்பதற்கு நித்தியானந்தா போல் உருவம் கொண்ட இவர் செல்வகுமார் என்பவரிடம் நிலத்தை குத்தகைக்குப் பெற்று ஆசிரமத்தை அமைத்திருந்த நிலையில் செல்வகுமார் வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தவில்லை என வேறு ஒருவருக்கு ஏலம் விட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இரவோடு இரவாக பாஸ்கரானந்தாவின் ஆசிரமம் இடித்து தள்ளப்பட்டது இது தொடர்பாக பாஸ்கர் ஆனந்தா பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். முறையான நீதிமன்ற உத்தரவுகள் இன்றி ஆசிரமத்தை இடித்தது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளாக விசாரணைக்கு வந்த பாஸ்கரானந்தா இரண்டு பேருந்துகளில் பக்தர்களை அழைத்து வந்ததால் பல்லடம் காவல் நிலையம் முன்பு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதனையடுத்து பாஸ்கரானந்தாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போலீசார் எதற்காக அனுமதி இன்றி கூட்டம் கூட்டி பரபரப்பை ஏற்படுத்துகிறீர்கள் என கேட்டபோது பக்தர்களாக வந்துள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் தனது வாழ்வாதாரம் பறிபோய் விட்டதாகவும் நீதிமன்ற ஆணைகள் எதுவும் இல்லாமல் தனது ஆசிரமம் இடிக்கப்பட்டுள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்பொழுது கூட்டக்கூடாது என போலீசார் எச்சரித்ததால் கலங்கிப்போன சாமியார் திருவோடு வாங்கித் தாருங்கள் நான் பிச்சை எடுக்கிறேன். ஆன்மீகவாதியை ரோட்டில் நிற்க வைத்து அழ வைக்காதீர்கள் என அழுதபடி பேசினார். இதனால் சுற்றி இருந்த பக்தர்கள் கலக்கமடைந்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவரையும் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    • வங்கி ஊழியர்களை மிரட்டும் காட்சி அவரது முகநூல் பக்கத்தில் நேரலையில் வெளியாகி உள்ளது.
    • குடவாசல் போலீசார் விசாரணை நடத்தி, சாமியார் திருமலையை கைது செய்துள்ளனர்.

    திருவாரூர்

    திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த திருமலை சாமிகள் என்பவர் இடி மின்னல் சங்கம் என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். இவர் துப்பாக்கியுடன் சென்று மஞ்சக்குடியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி ஊழியர்களை மிரட்டியுள்ளார். அத்துடன் அங்கேயே அமர்ந்து புகை பிடித்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அவரது முகநூல் பக்கத்தில் நேரலையில் வெளியாகி உள்ளது.

    இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குடவாசல் போலீசார் விசாரணை நடத்தி, சாமியார் திருமலையை கைது செய்துள்ளனர்.

    ×