என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திட்ட பணிகள் பாதிப்பு"
- சீரான குடிநீர் வழங்கு வதற்காக மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்தது.
- அனைத்து காலங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு பேரேஜ் அருகே இத்திட்டம் அமைக்க ப்பட்டுள்ளது.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் மொத்தம் 23 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சி மக்களுக்கு நிரந்தரமாக சீரான குடிநீர் வழங்கு வதற்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.412.12 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்தது.
அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு இத்திட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு இத்திட்டத்தி ற்கான பணிகள் தொடங்க ப்பட்டது.
மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட நஞ்சைக்காளமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மன்ன தாம்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றின் நடுவில் கிணறு அமைக்க ப்படுகிறது. அதில் இருந்து குழாய் மூலம் காவிரி ஆற்றின் கரைப்பகுதியில் கூடுதலாக கிணறு அமைக்க ப்படுகிறது.
அங்கிருந்து புஞ்சைக் காளமங்கலம் ஊராட்சி க்குட்பட்ட கணபதி பாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அங்கு நீரை சுத்திகரிப்பு செய்ய ப்படுகிறது.
இதன் மூலம் மொடக் குறிச்சி, எழுமாத்தூர், பள்ளியூத்து, கஸ்பாபேட்டை ஆகிய 4 இடங்களில் நீர் உந்து நிலையங்களில் கொண்டு சென்று பின்னர் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளில் புதிதாக 25 தரை மட்ட நீர் தேக்க தொட்டிகளில் நீர் சேகரிக்கப்பட உள்ளது.
மேலும் 25 தரை மட்ட நிர் தேக்க தொட்டிகளில் இருந்து சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 554 மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள 225 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீ ரைக் கொண்டு சென்று அதன்மூலம் வீட்டு இணைப்பு களுக்கு நேரடி யாக குடிநீர் வழங்க உள்ளனர்.
இதற்காக நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 55 லிட்டர் வீதம் 2 லட்சத்து 39 ஆயிரம் மக்கள் பயன்பெரும் வகையில் 20.50 மில்லியன் லிட்டர் எடுக்க உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 23 ஊராட்சிகளைச் சேர்ந்த 442 குக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்க ப்பட உள்ளது.
இத்திட்டம் பாசூர் பேரேஜ்க்கு அருகே உள்ள மன்னதாம்பாளையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அனைத்து காலங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு பேரேஜ் அருகே இத்திட்டம் அமைக்க ப்பட்டுள்ளது.
இதனால் கோடை காலங்களில் பேரேஜில் தண்ணீர் தேக்கும் போது இத்திட்டத்திற்காக அமைக்கப்பட்ட கிணற்றில் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இதனால் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மக்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் காவிரி ஆற்றில் கிணறு அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. அதிலிருந்து காவிரி ஆற்றின் கரைப்பகுதியான மன்னதாம்பாளையத்தில் கூடுதலான கிணற்றுக்கும் பெரிய குழாய் அமைக்கும் பணியும் நிறைவடைந்து உள்ளது.
அதேபோல் கணபதி பாளையத்தில் அமைக்க ப்பட்டு வரும் நீர் சுத்திகரிப்பு நிலையம் பணியும், 4 நீர் உந்து நிலையம் அமைக்கும் பணி, புதிதாக ஊராட்சி களில் கட்டப்பட்டு வரும் 225 மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் தொய்வ டைந்துள்ளது. கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்