search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துர்கா சிலை"

    • பஹ்ரைச் பகுதியில் துர்கா சிலைகளை கரைக்கும் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
    • ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இன்று காலை கலவரம் வெடித்தது.

    உத்தர பிரதேசம் மாநிலம் பஹ்ரைச் பகுதியில் துர்கா சிலைகளை கரைக்கும் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கைகலப்பு மற்றும் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுங்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனால் போலீசார் குவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் அமைதி திரும்பியது. இந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இன்று காலை கலவரம் வெடித்தது. ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    மேலும் கடைகள் மற்றும் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களை வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தினர். இதுமட்டுமல்லாமல் மருவத்துவமனைகளுக்குள் புகுந்து படுக்கைகளை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுப்பட்டனர்.

    வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • துர்கா சிலையை உடைத்ததாக நாக கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணய்யா கவுடு என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • விடிய விடிய யாராவது ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என ஏற்கனவே கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

    ஐதராபாத்:

    ஐதராபாத் நம்ப பள்ளி கண்காட்சி மைதானத்தில் பிரமாண்ட துர்கா அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடந்தன.

    பூஜைகள் முடிந்து விழா குழுவினர் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். அந்த நேரத்தில் மர்மநபரால் சிலையின் சில பாகங்கள் உடைக்கப்பட்டது.

    மேலும் சிலை முன்பு போடப்பட்டிருந்த படையல் மலர் அலங்காரம் ஆகியவை சேதப்படுத்தப்பட்டிருந்தன. இதனை கண்ட விழா குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏராளமானோர் அங்கு திரண்டதால் பெரும் பதட்டம் நிலவியது.

    டிஜிபி அக்சன் யாதவ் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். சிலையை உடைத்தவர்களை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஐதராபாத் மாநகரப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் வாகன சோதனையும் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் துர்கா சிலையை உடைத்ததாக நாக கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணய்யா கவுடு என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணய்யா கவுடு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

    அவர் நள்ளிரவில் துர்கா சிலை அருகே ஏதாவது உணவு கிடைக்குமா என வந்துள்ளார். சாமி முன்பு அவருக்கு போதுமான அளவு உணவு கிடைக்காததால் ஆத்திரத்தில் சாமி சிலையை உடைத்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    விழா குழுவினர் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை. விடிய விடிய யாராவது ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என ஏற்கனவே கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. அதனை மீறியதாக விழாக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த சம்பவத்திற்கு மத சாயம் எதுவும் பூச வேண்டாம். சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • ஸ்ரீதுர்கா பூஜை மகா உற்சவ விழா அக்டோர் 1-ந் தேதி முதல் 5 -ந் தேதி வரை நடக்க உள்ளது.
    • 15க்கும் அதிகமான கைவினை கலைஞர்கள் சிலைகள் வடிவமைப்பு பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் வசிக்கும் மேற்கு வங்க மக்கள் சார்பில் திருப்பூர் பெங்காலி கல்ச்சுரல் அசோசியேஷன் இயங்கி வருகிறது. இவர்கள் நவராத்திரி விழாவில் துர்கா சிலைகளை செய்து திருப்பூரில் பிரமாண்ட விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.கொரோனா ஊரடங்கால், 2 ஆண்டுகள் விழா நடைபெறாத நிலையில் 14வது ஸ்ரீதுர்கா பூஜை மகா உற்சவ விழா அக்டோர் 1-ந்தேதி முதல் 5 -ந் தேதி வரை, சவுடாம்பிகா கல்யாண மண்டபத்தில் நடக்க உள்ளது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் கொல்கத்தா பாணியில் சிலை வடிவமைக்கப்படுகிறது.

    கொல்கத்தாவில் இருந்து வந்துள்ள 15க்கும் அதிகமான கைவினை கலைஞர்கள், துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி, விநாயகர் சிலைகள் வடிவமைப்பு பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

    இது குறித்து சிலைகள் வடிவமைக்கும் கலைஞர்கள் கூறியதாவது :- கொல்கத்தாவில் இருந்து களி மண், கங்கை ஆற்று மண், வைக்கோல், கயிறுகள் மற்றும் அலங்கார பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. சிலைகளை அங்கிருந்து கொண்டுவர இயலாது என்பதால் திருப்பூர் வந்து சிலை வடிவமைக்கிறோம்.இயற்கை வண்ணத்தால் கலர் கொடுத்து அலங்கரிக்கப்படும். மேலும் கொல்கத்தாவை போலவே ஜரிகை, ஜடாமுடி, அலங்கார பொருட்களை கொண்டு தத்ரூபமாக அலங்காரத்துடன் சிலைகள் வடிவமைக்கப்படும். சிலை வடிமைப்பு பணி 25-ந் தேதிக்குள் நிறைவு செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×