search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "196 இடங்களில்"

    • ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் காய்ச்சல் அதிகம் கண்டறிய ப்பட்டுள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் இன்று சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
    • அதன்படி வட்டார அளவில் 4 கிராமங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் சென்று முகாம் நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அதிகளவில் இந்த காய்ச்சல் பரவி வருகிறது.

    இதனை தடுக்க சுகாதார துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடி க்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் காய்ச்சல் கண்டறியும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் காய்ச்சல் அதிகம் கண்டறிய ப்பட்டுள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் இன்று சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வட்டார அளவில் 4 கிராமங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் சென்று முகாம் நடத்தி வருகின்றனர்.

    இந்த முகாம்களில் காய்ச்சல், சளி, இருமல், உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சலின் தன்மை பொறுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சாதாரண காய்ச்சல் என்றால் மருந்து மாத்திரை கொடுக்கப்படும். தொடர் காய்ச்சல் என்றால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.

    அப்போது அவர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு என்ன வகையான காய்ச்சல் என கண்டறியப்படும். இதேபோல் பள்ளிகளுக்கு என்று தனியாக மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் மாணவ ர்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா? என்று சோதனை செய்வார்கள்.

    இவ்வறாக ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று 196 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். 

    ×