என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சி.எஸ்.ஐ."
- அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது
- நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர் ஜிஜோ ராஜேசிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது
குளச்சல் :
கேரள முதலி சி.எஸ்.ஐ. முன்னேற்ற சங்க 32-வது ஆண்டு விழா குளச்சல் நெசவாளர் தெரு ஹாக்கர் புரம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் நடந்தது. சபை ஊழியர் ஷெர்லின் சஜிதா நெல்சன் ஜெபம் செய்தார். சங்க தலைவர் ஜாண் மோகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் டாக்டர் குணசிங் வேதநாயகம் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் ராஜா வரவேற்றா.பொதுச்செயலாளர் பிரேம் ஆனந்த் ஆண்டறிக்கை வாசித்தார். செயல் மற்றும் கல்விக்குழு கன்வீனர் பெஞ்சமின் கல்விக்குழு அறிக்கை வாசித்தார். பேராய இளையோர் கரிசனைத்துறை இயக்குனர் ரெஞ்சித் சுதிர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். சிறப்பு விருந்தினரை முன்னாள் பொருளாளர் சுந்தர்ராஜ் அறிமுகப்படுத்தி பேசினார்.
விழாவில் டாக்டர் பட்டம் பெற்ற நாகர்கோவில் பல்கலைக்கழக இணை பொறியியல் கல்லூரி பேராசிரியர் அருண் பிரேம் சாந்த், பேராயத்தில் அருள் பொளிவு பெற்ற போதகர் சாமுவேல் ராஜன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். அவர்களை பேராசிரியர் டாக்டர் புஷ்பராஜ், சங்க ஆலோசகர் மணி ஆகியோர் அறிமுகப்படுத்தி பேசினர்.
கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர் ஜிஜோ ராஜேசிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நிர்வாகக்குழு உறுப்பினர் டேவிட் ஜோன்ஸ் நன்றி கூறினார். போதகர் ரெஞ்சித் சுதிர் நிறைவு ஜெபம் செய்தார். விழா ஏற்பாடுகளை சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் சபைக்குழுவினர் செய்திருந்தனர்.
- இன்று (5-ந்தேதி) மாலை 6.30 மணியளவில் தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது.
- பாலப்பள்ளம் சி.எஸ்.ஐ. ஆயர் சாம் றிச்சர்டு நெல்சன் தலைமை தாங்குகிறார்.
குளச்சல்:
குளச்சல் அருகே ஆனக்குழி சி.எஸ்.ஐ. ஆயர் மண்டல திருச்சபையில் 203-வது சபை நாள் இன்று (5-ந்தேதி) மாலை 6.30 மணியளவில் தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. முதல் நாள் திருச்சபை ஆயர் ஆமோஸ் ஆல்பர்ட் முன்னிலையில் கரும்பாட்டூர் சி.எஸ்.ஐ. ஆயர் ராஜா ஸ்டாலின் சிறப்பு செய்தி அளிக்கிறார்.
பாலப்பள்ளம் சி.எஸ்.ஐ. ஆயர் சாம் றிச்சர்டு நெல்சன் தலைமை தாங்குகிறார். 2-ம் நாள் கிறிஸ்துபுரம் சி.எஸ்.ஐ. ஆயர் கில்டன் தயானந்த் தலைமை தாங்குகிறார். 3-ம் நாள் கல்லுக்கூட்டம் சேகர சி.எஸ்.ஐ. ஆயர் றிங்கள் ஜெயக்குமார் தலைமை தாங்குகிறார். 3-ம் நாள் காலை 10 மணிக்கு உபவாச கூடுகை நடக்கிறது. 4-ம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மத்திக்கோடு சேகர ஆயர் ஜெயக்குமார் தலைமையில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர்.டேனியல் சிறப்பு செய்தி அளிக்கிறார். திருச்சபை ஆயர் ஆமோஸ் ஆல்பர்ட் மற்றும் மத்திக்கோடு சேகரத்திற்குட்பட்ட ஆயர்கள், திருப்பணியாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு செய்தியை தொடர்ந்து கல்வி பரிசு, நன்றி படைப்பு மற்றும் அன்பின் விருந்து ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆனக்குழி சி.எஸ்.ஐ. சபைக்குழுவினர் செய்து வருகின்றனர்.
- கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
கொட்டாரம் அருகே உள்ள அச்சன்குளத்தில் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று பிரார்த்தனை முடிந்து இரவு ஆலயத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் இந்த ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் ஆலய நிர்வாகிகள் கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அச்சன்குளம் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஆலயத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மேலும் அந்த ஆலயத் துக்குள் இருந்த ஆம்ப்ளிபயர், ஒலிபெருக்கி பெட்டி, மைக், போன்ற பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அந்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்